வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்

அரசாங்க, தனியார் மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பல இணைந்து இன்று மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. வரவுசெலவுத்திட்டத்தில் உள்ள முன்மொழிவுகள் சிலவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் சுமார் 150 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று பாரிய வேலைநிறுத்தப் போராட்டமொன்றுக்கு தயாராகின.

(“வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

நூல் மதிப்பீடு

“இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு”
(An Historical Relation of the Island Ceylon
– By Robert Nox)
பிரித்தானியரான றொபேர்ட் நொக்ஸ் கண்டி மன்னனின் கைதியாக 20 வருடங்கள் இருந்த கால அனுபவங்களை வைத்து 334 வருடங்களுக்கு முன்னர் எழுதி வெளியிட்ட நூலின் தமிழாக்கம்
(இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது)

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (கனடா)
காலம்: 2015 டிசம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை காலை 9 – 12 வரை

உரையாற்றுவோர்:
கலாநிதி பார்வதி கந்தசாமி
கலாநிதி பா.சிவகடாட்சம்
திரு.சண்முகம் சுப்பிரமணியம்

ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
நிகழ்ச்சி ஏற்பாடு:
ஆக்கபூர்வ சிந்தனை மற்றும் செயல்பாடுகளுக்கான மையம்
E-Mail: creathought1@gmail.com

சர்க்கரை நோயை இனி கட்டுக்குள் வைக்கலாம் : 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம்.

சத்தமே இல்லாமல் உயிருக்கு ‘உலைவைக்கும்’ சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய மலிவுவிலை ஆயுர்வேத மாத்திரை நேற்று அறிமுகம் செய்விக்கப்பட்டது.’BGR-34′ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாத்திரை நான்குவகை அரியமூலிகைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ‘டைப் டூ’ என்றழைக்கப்படும் அதிதீவிரத்தன்மை கொண்ட நீரிழிவால் பாதிக்கப்பட்ட உயிரினங்களிடம் ஆரம்பகட்டத்தில் இந்த மாத்திரையைகொண்டு நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் 67 சதவீதம் வெற்றிகரமான விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

(“சர்க்கரை நோயை இனி கட்டுக்குள் வைக்கலாம் : 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம்.” தொடர்ந்து வாசிக்க…)

பொதுச்சேவைகளை முடக்குவோம்: அரசாங்கத்துக்கு சிவப்பு சமிக்ஞை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 14ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதலும், நாளை 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்துள்ளன. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து பஸ் நிறுவனங்களில் 17 நிறுவனங்கள், இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் தொடர்வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போவதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து சங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

(“பொதுச்சேவைகளை முடக்குவோம்: அரசாங்கத்துக்கு சிவப்பு சமிக்ஞை” தொடர்ந்து வாசிக்க…)

“என்ட பிள்ளையை காட்டுங்கள்… அவன் மடியில் நான் சாகவேணும்…”

புற்றுநோயால் பீடிக்கப்பட்ட தாய் கதறி அழுகை

“என்ட பிள்ளையை காட்டுங்கள். நான் அவனின் மடியில் சாகவேணும்” என புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயார் காணாமல் போன ஆணைக்குழுவின் முன்னால் கதறி அழுதார். காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்று நாள் அமர்வு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

(““என்ட பிள்ளையை காட்டுங்கள்… அவன் மடியில் நான் சாகவேணும்…”” தொடர்ந்து வாசிக்க…)

எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள்

எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள். இதுவரையில் எங்கு இருக்கின்றார் என தெரியவில்லை காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தாயார் ஒருவர் கதறி அழுதார். காணாமல் போனோவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14ஆவது அமர்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (11) நடைபெற்றபோது, அதில் சாட்சியமளிக்கையிலேயே தனது காணாமல் போன மகள் குறித்து சாட்சியமளித்த தாய் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“எனது மகளை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்றார்கள்” தொடர்ந்து வாசிக்க…)

மலேசியாவில் புலிகளின் விமானங்கள்

 

மலேசியாவின் முதன்மை விமான நிலையமான கோலாலம்பூர் விமான நிலையத்தில் 3 கார்கோ ஜெட் விமானங்கள் உரிமை கோர ஆளின்றி அநாதையாக நிற்பதால், அதைக் கண்டுபிடிக்க விமான நிலைய அதிகாரிகள் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளனர். த ஸ்டார் அண்ட் சின் சூ என்ற பத்திரிக்கையில் வௌியாகியுள்ளஅந்த விளம்பரத்தில், “ TF-ARM, TF-ARN, TF-ARH என்ற பதிவு எண் கொண்ட 3 போயிங் 747 -200F ரக விமானங்கள் மலேஸிய விமான நிலையத்தில் உள்ளன

(“மலேசியாவில் புலிகளின் விமானங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

சர்வகட்சிக் கூட்டம் இன்று; சி.விக்கு அழைப்பில்லை

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சர்வகட்சிக் கூட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அந்த ஆணைக்குழுவுக்குக் கிடைத்துள்ள 525 முறைப்பாடுகள் ஆகியவற்றை, கட்சி உறுப்பினர்களிடம் கையளித்து அவை அவை தொடர்பில் இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் அறியமுடிகின்றது.

(“சர்வகட்சிக் கூட்டம் இன்று; சி.விக்கு அழைப்பில்லை” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது – சி.வி

நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் புதிய அரசாங்கமும் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து ஒத்துழைத்து செயற்படாமல், முன்னைய அரசாங்கம் போன்று தனித்து முடிவெடுத்து வடமாகாணத்தில் செயற்றிட்டங்களை செய்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடிகயில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது.

(“புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது – சி.வி” தொடர்ந்து வாசிக்க…)

போர்க்குற்றங்களை 83லிருந்து விசாரிக்கவும் – டக்ளஸ்

போர்க்குற்ற விசாரணைகள், 1983ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, இதில் அரசியல் பழிவாங்கல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(“போர்க்குற்றங்களை 83லிருந்து விசாரிக்கவும் – டக்ளஸ்” தொடர்ந்து வாசிக்க…)