‘த.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவு’

இலங்கையின் பழமைவாய்ந்த அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து, அரசியல் எதிர்காலப் பயணத்தினைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தமை தன்னுடைய தனிப்பட்ட முடிவே தவிர யாருடைய திணிப்பின் நிமிர்த்தமும் அறிவித்ததல்ல என கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

(“‘த.வி.கூவுடன் சேர்வதாக அறிவித்தது எனது தனித்த முடிவு’” தொடர்ந்து வாசிக்க…)

குலுங்கியது ஆப்கானிஸ்தான்; உணர்ந்தன இந்தியா, பாகிஸ்தான்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைத் தாக்கிய 7.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 150ஐத் தாண்டியுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில், 213.5 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்ததாக, ஐக்கிய அமெரிக்காவின் சூழலியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இறந்தோர் எண்ணிக்கை 26 என அறிவிக்கப்பட்டது. இதில், தகார் மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில், 12 பெண் குழந்தைகள் இறந்துள்ளனர். அத்தோடு, அப்பகுதியில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் அறிவிக்கப்படுகின்றது.

(“குலுங்கியது ஆப்கானிஸ்தான்; உணர்ந்தன இந்தியா, பாகிஸ்தான்” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளை அங்கிக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதப் பாதிரி இம்மானுவல் அவர்களுக்கு, ஜனாதிபதி, இலங்கை வருமாறு அழைப்பு!

இலங்கை ஜனாதிபதி, மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உலகத் தமிழர் மேரமைப்பின் தலைவர் இம்மானுவல் அவர்களை இலங்கைக்கு வருமாறு அவசர அழைப்பினை விடுத்துள்ளனர். இவர்களது அழைப்பு தொடர்பில் இலங்கையில் இருக்கக்கூடிய இடதுசாரிகள் கட்சிகளின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு உலகத் தைழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவல் மின்னஞ்சல் மூலமாக இவ் அழைப்பினை தெரியப்படுத்தியுள்ளார். அதில் மேற்குறிப்பிடப்பட்ட அழைப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் தென்னிலங்கையில் உள்ள மிதவாதிகளுடன் இணைந்து கடமையாற்ற நான் ஆர்வமாக உள்ளேன் என்றும் குறைந்தது அரசியல்வாதிகளின் பொய்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு இலங்கை நோக்கி வருவதனை அதிகமாக பரிசீலனை செய்துகொண்டு இருக்கிறேன் என்றும் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இம்மானுவல் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

(“வெள்ளை அங்கிக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதப் பாதிரி இம்மானுவல் அவர்களுக்கு, ஜனாதிபதி, இலங்கை வருமாறு அழைப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

மனந்திறந்தார் டொனி பிளையர்

ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான ஈராக் போரின் போது இடம்பெற்ற தவறுகளுக்கு, தான் வருந்துவதாகத் தெரிவித்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளையர், ஆனால், சதாம் ஹூஸைனை வீழ்த்தியமை குறித்து வருத்தமேதும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார். ஈராக்கில், சதாம் ஹூஸைன் தலைமையிலான அரசாங்கத்திடம் மாபெரும் அழிவை உண்டாக்கக்கூடிய ஆயுதங்கள் காணப்படுவதாகவும் இரசாயன ஆயுதங்கள் காணப்படுவதாகவும் கூறியே, ஈராக் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு அப்படியான எவையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

(“மனந்திறந்தார் டொனி பிளையர்” தொடர்ந்து வாசிக்க…)

கருணா இராஜினாமா

முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவர், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையகத் தமிழரை இணைத்துக் கொள்ளாத தமிழர் பிரச்சினைகள் எதுவும் முழுமையடையாது..!

கடந்த 28.02.2014 அன்று இந்தியப் பிரதமர் மோடி அரசாங்கத்தின் முக்கிய பிரமுகரான திரு.ஜி. பார்த்தசாரதி அவர்களை மலையகச் சமூக செயற்பாட்டாளர்களான எம்.வாமதேவன், மு.சிவலிங்கம், பெ.முத்துலிங்கம், கலாநிதி எஸ்.சந்திரபோஸ் ஆகிய நால்வர்கள் அடங்கிய குழுவினர் ஹோட்டல் சமுத்திராவில் சந்தித்து உரையாடினர். இக் கலந்துரையாடலில் இந்திய தூதுவராலய அரசியல் பிரிவு செயலாளரும் பிரசன்னமாகியிருந்தார்.

இச் சந்திப்பில் மலையகத் தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலைமைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.. நரேந்திர மோடி அவர்கள் பிரதமராவதற்கு முன்பே இப் பேச்சு வார்த்தை நடந்தது. திரு.ஜி.பார்த்தசாரதி அவர்கள் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரின் ஆலோசகராகவும் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்படி குழுவினர் தங்களது மகஜர் ஒன்றினையும் மோடி அவர்களிடம் சமர்ப்பிக்குமாறு அவரிடம் கையளித்தனர்.

(“மலையகத் தமிழரை இணைத்துக் கொள்ளாத தமிழர் பிரச்சினைகள் எதுவும் முழுமையடையாது..!” தொடர்ந்து வாசிக்க…)

ஊடக அறிக்கை

மிக்க அவதானமாக செயற்பட வேண்டிய நேரமிது
வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்ர் டாக்டர் ராஜித சேனாரட்ண அவர்கள் இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லையென்று தெரிவி;த்தமை விரைவில் மீண்டுமொரு சங்கடமான நிலைமையை சிறைக்கைதிகள் மத்தியில் ஏற்படும் என்ற ஐயம் எனக்கு எழுக்கிறது. கைதிகள் குற்றம் செய்தார்களோ இல்லையோ என்பது அல்ல எமது பிரச்சனை. அவர்கள் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தமையால் அவர்கள் செய்த குற்றம் எதுவாக இருந்தாலும் அனுபவித்த தண்டனை அதிகமாகையால் போதுமானதாகும். அந்த அடிப்படையில்தான் அவர்களின் விடுதலையைக் கோரி இத்தனை போராட்டங்கள் நடந்தது மட்டுமல்ல இறுதியில் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோர் தலையிட்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். ஆனால் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன விடுத்துள்ள அறிக்கை மீண்டும் பிரச்சினையை உயிர்பெறச் செய்யும் என்பது எதுவித சந்தேகமும் இல்லை.

(“ஊடக அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

தீர்வு வழங்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்தலாம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் உருவெடுக்கலாம் என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவினாலோ ஜ.நாவினாலோ தீர்வு கிடைக்காது என்று குறிப்பிட்ட அவர் சகலரதும் ஒத்துழைப்புடன் விசேட நீதிமன்றம் அமைத்து யுத்ததின் போது இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

(“தீர்வு வழங்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்தலாம்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்’ பற்றி தமிழ்க் கூட்டமைப்பு வாய் திறக்காதது ஏன்?

சம்பந்தன் ஐயாவும் கண்டுகொள்வதில்லை

ஜெனீவா உள்ளிட்ட சர்வதேசத்துக்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதே தமிழ் மொழியைப் பேசும் வடபகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வாய்திறப்பதில்லையென வாணிப மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

(“முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்’ பற்றி தமிழ்க் கூட்டமைப்பு வாய் திறக்காதது ஏன்?” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழீழம் உருவாவதை தடுக்க முடியாது’ – மாவையின் வெடி

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்தை நிறைவேற்றாமல், தமிழர்களின் உரிமைகளை அழித்து, இலங்கையை தனிச் சிங்கள நாடாக மாற்றுவதற்கு முயற்சித்தால், தனித் தமிழ் தேசம் உருவாகுவதற்கு அது வழியேற்படுத்தும், அதனை தடுக்க முடியாது, அதற்கு, சர்வதேச நாடுகளின் அனுமதியை வாங்குவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

(“‘தமிழீழம் உருவாவதை தடுக்க முடியாது’ – மாவையின் வெடி” தொடர்ந்து வாசிக்க…)