பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த ஆச்சே அரசு!

 

ஆச்சே கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு போதிய உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தஞ்சம் அளிக்கவேண்டும் என்று தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண அரசாங்கத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி நன்றி தெரிவித்தார்.

(“பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த ஆச்சே அரசு!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்.நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு

மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவச்சிலை யாழ். பொதுநூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.அன்னாரின் உருவச்சிலையினை இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். யாழ்.பொதுநூலக வளாகத்தில் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை அவைத் தலைவர்.

(“யாழ்.நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கத்துக்கு 6 வேண்டுமா, 2 வேண்டுமா: திகா கேள்வி

தேசிய அரசாங்கத்துக்கு, மலையகத்தின் சார்பில் ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அறுவர் வேண்டுமா அல்லது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுமா என, தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

(“அரசாங்கத்துக்கு 6 வேண்டுமா, 2 வேண்டுமா: திகா கேள்வி” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தினம் 19.06.2016 மட்டக்களப்பு

 

பத்மநாபா மக்கள் முன்னணி

தமிழர் சமூக ஜன நாயகக் கட்சி (SDPT)

இடம் : போக்கஸ் மண்டபம்

(சென்றல் றோட், மட்டக்களப்பு)
காலம்: 19.06.2016 ஞயிற்றுக்கிழமை
மணி : காலை 9.30
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் சமூகத்தின் ஜனநாயகத்துக்காகவும்உழைக்கும் மக்களின் விடிவுக்காகவும் தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், சகோதர இயக்கப் போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூருவதற்காக “தியாகிகள் தினம்” 2016 இம்முறை மட்டக்களப்பில் நினைவு கூறுவதோடு.
இதுவரை பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் ஆக செயற்பட்டுவந்த நாம் ” தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” எனும் புதிய கட்சிப்பெயரில் ” “பத்மநாபா மக்கள் முன்னணி” எனும் அமைப்பாகவும். அரசியல் ஆர்வமுள்ள சகலதரப்பினரையும் இணைத்துக்கொண்டு மக்கள் இயக்கமாக புதிய கட்சிப்பெயரில் செயற்படவுள்ளோம்.
இந் நிகழ்வில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி மற்றும் எமது வருங்கால செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கமும், கலந்துரையாடலும் முன்னாள் வட/கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” இன் முக்கியஸ்தரும் அ.வரதராஜப்பெருமாள் உற்பட பலர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு நடைபெறவுள்ளது. போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்கள், சகோதர இயக்க உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு
பத்மநாபா மக்கள் முன்னணி
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” சார்பில் அழைக்கின்றோம்.

கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும்.

நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கடவுச்சீட்டு தரவுகளை சேகரிக்கும் முயற்சியை கனடா ஆரம்பிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் றலவ் குட்டேல் அறிவித்துள்ளார். கடவுச் சீட்டின் இரண்டாம் பக்கத்தில் இடமபெறும் முழுப்பெயர், தேசிய இனம், வழங்கும் அதிகாரிகள் மற்றும் பயணிகளின் பால் போன்றன இவற்றில் அடங்கும். கனடாவிற்குள் நுழைபவர்களின் தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுவிட்டன. சேகரிக்கப்படும் இத்தகவல்கள் அம்பர் எச்சரிக்கைக்கு-காணாமல் போகும் குழந்தைகளின் விடயத்தில் சிறந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மனித கடத்தல்களை சமாளிக்க உதவும் என அமைச்சர் குட்டேல் தெரிவித்தார்.

(“கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும்.” தொடர்ந்து வாசிக்க…)

தொண்டமானும், டக்ளஸூம் நல்லாட்சியில் இணைவது உறுதி

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்விரு கட்சிகளும், நாடாளுமன்றத்தில் எதிரணியின் பக்கமாக இருந்தாலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே இருக்கின்றன என்று தெரிவித்த விசேட பணிப்பொறுப்புகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, அவ்விருவரும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

(“தொண்டமானும், டக்ளஸூம் நல்லாட்சியில் இணைவது உறுதி” தொடர்ந்து வாசிக்க…)

புளோரிடா தாக்குதல் தொடர்பாக தாக்குதலாளியின் மனைவிக்குத் தெரிந்திருந்தது

அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஒர்லான்டோ பகுதியிலுள்ள சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக, அந்தத் தாக்குதலை மேற்கொண்டவரின் தற்போதைய மனைவிக்குத் தெரிந்திருந்ததாக, அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பாக, ஓமர் மட்டீனின் மனைவியான நூர் சல்மான் மீது, இன்றைய தினமே வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் அறிவிக்கப்படுகிறது.

(“புளோரிடா தாக்குதல் தொடர்பாக தாக்குதலாளியின் மனைவிக்குத் தெரிந்திருந்தது” தொடர்ந்து வாசிக்க…)

ஜே.வி.பி. முன்னாள் த‌லைவ‌ர் சோம‌வ‌ன்ச அமர‌சிங்க‌ கால‌மானார்.

ஜே.வி.பி. முன்னாள் த‌லைவ‌ர் சோம‌வ‌ன்ச அமர‌சிங்க‌ 74 வ‌து வ‌ய‌தில் கால‌மானார். “ஜேவிபி யின் முள்ளிவாய்க்கால்” என்று சொல்ல‌க் கூடிய‌, 1989 – 1991 ப‌டுகொலைக‌ளில் இருந்து உயிர் த‌ப்பி இந்தியா சென்று, பின்ன‌ர் அங்கிருந்து பிரிட்ட‌ன் சென்று அக‌தித் த‌ஞ்ச‌ம் கோரி இருந்தார். தொண்ணூறுக‌ளின் பிற்ப‌குதியில், ஜே.வி.பி. முற்றாக‌ அழித்தொழிக்க‌ப் ப‌ட்ட‌ நிலையில், உதிரிக‌ளாக‌ இருந்த‌ க‌ட்சி உறுப்பின‌ர்க‌ளையும், ஆத‌ர‌வாள‌ர்க‌ளையும் ஒன்றிணைத்து க‌ட்சியை மீண்டும் கட்டியெழுப்பிய‌தில், சோம‌வ‌ன்ச‌வின் ப‌ங்கு க‌ணிச‌மான‌ அள‌வு இருந்துள்ள‌து.

(“ஜே.வி.பி. முன்னாள் த‌லைவ‌ர் சோம‌வ‌ன்ச அமர‌சிங்க‌ கால‌மானார்.” தொடர்ந்து வாசிக்க…)