புளோரிடாவில் 50 பேர் உயிரிழந்த பயங்கரம்: ‘பயங்கரவாதத்தினதும் வெறுப்பினதும் நடவடிக்கை’

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஒர்லன்டோ என்ற இடத்திலுள்ள சமபாலுறவாளர்களுக்கான இரவு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரத துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பாப்பரசர் பிரான்ஸிஸ், இங்கிலாந்து அரசி எலிஸபெத் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

(“புளோரிடாவில் 50 பேர் உயிரிழந்த பயங்கரம்: ‘பயங்கரவாதத்தினதும் வெறுப்பினதும் நடவடிக்கை’” தொடர்ந்து வாசிக்க…)

கொலையாளி ஓமர் மட்டீன்: மனைவியை அடிப்பவர்; சமபாலுறவாளர்களுக்கு எதிரானவர்

புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டதாக இனங்காணப்பட்டுள்ள ஓமர் மட்டீன் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவரது தந்தை, தனது மனைவியுடனும் குழந்தையுடனும் குறித்த நபர் மியாமியில் அண்மையில் இருக்கும் போது, அவர்களுக்கு முன்னர் இரண்டு ஆண்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்ததாகவும், அது அவரைக் கோபப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

(“கொலையாளி ஓமர் மட்டீன்: மனைவியை அடிப்பவர்; சமபாலுறவாளர்களுக்கு எதிரானவர்” தொடர்ந்து வாசிக்க…)

கோப்பா அமெரிக்கா: மீண்டுமொரு ‘கடவுளின் கோல்’; வெளியேறியது பிரேஸில்

தென்னமரிக்க நாடுகளுக்கிடையே, ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் குழு நிலைப் போட்டிகளுடனேயே, கால்பந்தாட்ட ஜாம்பவானான பிரேஸில் வெளியேறியுள்ளது. 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதற்தடவையாக, இம்முறையே, குழுநிலைப் போட்டிகளுடன் பிரேஸில் வெளியேறியுள்ளது.

(“கோப்பா அமெரிக்கா: மீண்டுமொரு ‘கடவுளின் கோல்’; வெளியேறியது பிரேஸில்” தொடர்ந்து வாசிக்க…)

புளோரிடா இரவு விடுதியில் சூடு: குறைந்தது 50 பேர் பலி: 53 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவின் ஓர்லான்டோவிலுள்ள சமபாலுறவாளர்களின் இரவு விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை நேரப்படி நேற்றுப் பிற்பகல் 12:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்தோர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(“புளோரிடா இரவு விடுதியில் சூடு: குறைந்தது 50 பேர் பலி: 53 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளிடம் இருந்து தப்பியவர் சாகும்வரை உண்ணாவிரதம்

விடுதலை புலிகளினால் 290 பொலிஸார் கொல்லப்பட்ட திருக்கோவில் ரூபஸ்குளம் காட்டுப்பகுதியில், அந்தசம்பவத்துக்கு முகங்கொடுத்து அதிலிருந்து தப்பிவந்த பொலிஸ் சார்ஜன், தனது மனைவி பிள்ளைகள் மூவருடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை 9 மணியிலிருந்து ஈடுபட்டுள்ளார். மனோஜ் பிரியந்த சிறிவர்தன எனும் பெயர் கொண்ட இந்த அதிகாரி 1990ஆம் ஆண்டு கல்முனை பொலிஸில் சேவையாற்றியவர் ஆவார்.

(“புலிகளிடம் இருந்து தப்பியவர் சாகும்வரை உண்ணாவிரதம்” தொடர்ந்து வாசிக்க…)

லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள் நூல் வெளியீட்டு விழா…

சிலி-யில் ஜனநாயகப் பூர்வமான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைந்த சோசலிச அரசு, சிஐஏ சதியாலும், உள்நாட்டு ஆதிக்க சக்திகளாலும் கவிழ்க்கப்பட்டு சல்வடார் அலெண்டே படுகொலையான பின், சிலியில் இருந்து தப்பிச் சென்ற இஸபெல் அலெண்டே தன்னோடு எடுத்துச் சென்ற சொற்பமான உடைமைகளில் ஒன்றாக இருந்த நூல் இது. சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பெற்றுக்கொண்டார்.

கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரனின்

நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனுமற்ற இந்த கூட்டணி பிருகிருதிகள் பற்றி நூற்றுக்கனக்கான சம்பவங்களில் சாம்பிலுக்கு தனிப்பட்ட அனுபவத்தினூடான சம்பவமொன்றையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகவிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு இலண்டனிலே ஒரு சந்திப்பொன்றில் கலந்துகொன்ட தமிழ் கூட்டமைப்பின் பிரதிநிதியான சுரேஷ் பிரேமசந்திரனுடனான கலந்துரையாடலின் போது அக்கால கட்டத்தில் கொழும்பில் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது சம்பந்தமாக கூட்டமைப்பு சக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேனும் ஏன் ஒரு அனுதாபமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை என்று நான் கேட்டபோது சுரேஸ் பிரேமசந்திரன் தமது கட்சித்த்லைவர் (சம்பந்தன்) வெளிநாடொன்றில் இருப்பதாகவும் அவர் திரும்பியதும் அது பற்றி தீர்மாணிப்பதாகவும் குறிப்பிட்டார்.

(“கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரனின்” தொடர்ந்து வாசிக்க…)

பொது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றது

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பொது எதிரணியின் 35 உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளினால், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (09) தோற்கடிக்கப்பட்டது.

(“பொது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றது” தொடர்ந்து வாசிக்க…)