எல்லை நிர்ணயம் குறித்த மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கும்வரை உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டரீதியான இயலுமை இல்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலான வட்டாரங்கள் அமைக்கப்படாத நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நல்லாட்சி அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணைக்கு விரோதமானது என்றும் கூறினார்.
Category: செய்திகள்
மியன்மார் ஜனாதிபதியாவதற்கு சூகிக்கு தடை
மியன்மாரின் ஜனாதிபதியாவதற்கு ஆங் சான் சூகிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனாதிபதி பெயர் பட்டியலில் சூகியின் முன்னாள் சாரதி ஹ்தின் க்யாவ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இதுவரை இருவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளரை நாடாளுமன்றம் இந்த வாரம் தெரிவு செய்யும். இராணுவத்தின் அரசியமைப்புச் சட்டத்தின்படி, உயர் அரசியல் பொறுப்பு வகிக்க, தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
(“மியன்மார் ஜனாதிபதியாவதற்கு சூகிக்கு தடை” தொடர்ந்து வாசிக்க…)
வடக்கு கிழக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற சூழ்ச்சி?
வடக்கு கிழக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்றுவதற்கு சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படுவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வேறும் தரப்பினரும் இணைந்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் சிங்கள மக்களை தங்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிக்கப் படுவதாகவும் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைக்க முயற்சிக்கப்படுவதாகவும் வடக்கில் காணப்படும் சிங்கள பாடசாலைகளுக்கு மாகாணசபை எந்தவிதமான உதவிகளையும் வழங்குவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
(“வடக்கு கிழக்கிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற சூழ்ச்சி?” தொடர்ந்து வாசிக்க…)
பசில் ராஜபக்சவுக்கு பயணத்தடை?
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் நிதியை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, திவிநெகும திட்டத்தின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகும அபிவிருத்தி பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள்! – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் தீர்வுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். அடுத்த சில மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானவையாக இருக்கும். பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நிலையான அமைதியை நோக்கி இலங்கை சொந்தப் பயணத்தை மேற்கொள்கிறது. அரசியலமைப்பை திருத்துவதற்கும், சுதந்திரமான அமைப்புகளை மீளவும் உருவாக்குவதற்கும்,சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும், விவாதிக்கும் சூழலை ஏற்படுத்துவதற்கும் முக்கியமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லிணக்கத்துக்கான சக்திவாய்ந்த அடையாளமாக, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதைக் கருத்திக் கொள்ளலாம்.
யோசித ராஜபக்ஸ 24ம் திகதி வரை விளக்க மறியலில்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் மற்றும் நிதிச் சலவை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யோசித ராஜபக்ஸ, நிசாந்த ரணதுங்க ரொஹான் வெலிட்ட உள்ளிட்ட ஐந்து பேரை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
(“யோசித ராஜபக்ஸ 24ம் திகதி வரை விளக்க மறியலில்!” தொடர்ந்து வாசிக்க…)
ஜெனிவாவில் நாளை அல் ஹுசேன் அறிக்கை!?
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரி்மைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை உரையாற்றவுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்காவின் அமைச்சரும், ஐ.நாவுக்கான முன்னாள் சிறப்புத் தூதுவருமான மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாமலின் வங்கிக் கணக்குகள் முடக்கம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிறுவனங்களின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளை பணமோசடி தொடர்பான சட்டத்தின் கீழ், நாமல் ராஜபக்ஷ உட்பட 8 பேருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் (FCID) இன்று வழக்கொன்றும் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸின் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இ – மெயிலை கண்டுபிடித்த அய்யாதுரையின் ஆதங்கம்!!!
இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று, தமிழர் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ – மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ் நிறுவனங்களும் புகழாரம் சூட்டியுள்ளன.
(“இ – மெயிலை கண்டுபிடித்த அய்யாதுரையின் ஆதங்கம்!!!” தொடர்ந்து வாசிக்க…)
ஸ்ரீலங்காவிற்கு இந்திய நிதி உதவி?!
இந்தியாவின் எக்ஸிம் வங்கியின் நிதியுதவியுடன் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளவுள்ள மூன்று பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று புதன்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த ஒப்பந்தத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்ஸார், இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி தலைவர் யதுவேந்திரா மதூர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.