முதல்வர் நிகழ்ச்சிகளை முப்படைகள் புறக்கணிப்பது “அரசியல் முடிவு” – நசீர் அஹ்மட்

கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு ” தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு” என்று கண்டனம் செய்திருக்கிறார் முதல்வர் நசீர் அஹ்மட் மே 20ம் தேதி வெள்ளிக்கிழமை சம்பூர் மஹா வித்யாலயா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவருக்கும் கடற்படை அதிகாரி ஒருவருக்கும் ஏற்பட்ட வாய்ச்சண்டையை அடுத்து அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை இனி முப்படைகளும் புறக்கணிப்பார்கள் என்று கடற்படை அதிகாரிகள் கூறினர். இந்த சர்ச்சையை அடுத்து இரு தரப்புகளையும் பிரதமர் ரனில் விக்ரமசிங்க விளக்கம் கோரியிருந்தார்.

(“முதல்வர் நிகழ்ச்சிகளை முப்படைகள் புறக்கணிப்பது “அரசியல் முடிவு” – நசீர் அஹ்மட்” தொடர்ந்து வாசிக்க…)

வசதியான நேரத்தில் சந்திப்போம்: சி.விக்கு ஜெயா பதில்

தமிழகம் மற்றும் இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவுகள் மென்மேலும் வலுவடையும் வகையில் என்னைச் சந்திப்பதற்கு நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

(“வசதியான நேரத்தில் சந்திப்போம்: சி.விக்கு ஜெயா பதில்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் ஆதவன் மாஸ்டர் விமான நிலையத்தில் கைது

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் என்ற அய்யாத்துரை மோகன்தாஸ் என்பவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்ல தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இவர் எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய அணியை இவரே வழி நடத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.

(“புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் ஆதவன் மாஸ்டர் விமான நிலையத்தில் கைது” தொடர்ந்து வாசிக்க…)

தலிபான்களின் புதிய தலைவர் நியமனம்

தலிபான் ஆயுதக்குழுவின் தலைவரான முல்லா அக்தர் மன்சூர், அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டமையை முதன்முறையாக உறுதிப்படுத்ததும் விதமாக, தங்களது புதிய தலைவரைப் பெயரிட்டுள்ளது. பாகிஸ்தானில் வைத்துக் கடந்த வெள்ளிக்கிழமை இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக, கடந்த சனிக்கிழமை மாலை நேரத்தில் செய்தி வெளியாகியிருந்த போதிலும், தலிபான்களாலும் பாகிஸ்தானாலும், இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டங்களில் அக்குழு பங்குபற்றுவதாகச் செய்தி வெளியாகியிருந்தது.

(“தலிபான்களின் புதிய தலைவர் நியமனம்” தொடர்ந்து வாசிக்க…)

கியூபாவில் தனியார் வர்த்தகத்திற்கு அனுமதி

சிறிய மற்றும் மத்திய அளவான தனியார் வர்த்தக துறைக்கு கியூப அரசு அனுமதி அளித்துள்ளது. பிடெல் காஸ்ட்ரோவுக்கு பின்னர் 2008இல் ஜனாதிபதி பதவியை ஏற்ற அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ நாட்டில் அறிமுகப்படுத்திய சீர்திருத்த நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேக்கம் கண்டிருக்கும் கியூப பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த ராவுல் காஸ்ட்ரோ முயன்றபோதும் அதற்கு கியூப கொம்மியுனிஸ கட்சியின் கடும்போக்காளர்களிடம் எதிர்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவுடனான உறவை மீள ஆரம்பித்த கியூபா, நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அனுமதி அளித்துள்ளது. முடி திருத்துவது தொடக்கம் உணவகங்கள் வரை தற்போது பல்வேறு தொழில் துறைகளிலும் சுய வேலைவாய்ப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘சி.வி.க்கும் நஸீருக்கும் ஒருவகை நோய்’ – விமல் வீரவன்ச

‘வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதிக்குப் பின்னர், ஒரு வகையான நோய் தொற்றிக் கொண்டுள்ளது’ என்று, தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பி.யான விமல் வீரவன்ச தெரிவத்தார்.

(“‘சி.வி.க்கும் நஸீருக்கும் ஒருவகை நோய்’ – விமல் வீரவன்ச” தொடர்ந்து வாசிக்க…)

‘சிங்களத் தலைவர்களே சமஷ்டியைக் கோரினர்’

சமஷ்டி முறையானது, நாட்டைப் பிரிப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், சமஷ்டியை முதலில் முன்வைத்தவர்கள் சிங்களத் தலைவர்களேயாவர். தமிழர் இந்த நாட்டின் தேசிய இனத்தவர். அவர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும். அதற்கு நாட்டுக்குள் சமஷ்டித் தீர்வு அவசியமானது’ என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

(“‘சிங்களத் தலைவர்களே சமஷ்டியைக் கோரினர்’” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.எஸ். பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்

இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்படஇ 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம் ‘தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்’ என்ற பெயரில் ஐ.எஸ்.இ பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

(“ஐ.எஸ். பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

‘முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல’

முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார்.

(“‘முள்ளிவாய்க்கால் நினைவு: புலிகளுக்கானது அல்ல’” தொடர்ந்து வாசிக்க…)