விளைவை அரசு எதிர்கொள்ள வேண்டிவரும்!?

அரசியல் தீர்வொன்றை கொண்டு வர இனிமேலும் அரசு தயக்கம் காட்டுமானால் அந்த விடயமானது அத்தோடு மரணித்துப் போகும் விடயமாக இருக்கப் போவதில்லை. பிரச்சினைகள் தொடரும். அதனுடைய விளைவுகளை நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டி வரும். இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

(“விளைவை அரசு எதிர்கொள்ள வேண்டிவரும்!?” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை!

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருப்பதால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தலைமையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

(“உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை!” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனை சந்திக்கிறது அரசியலமைப்பு நிபுணர்குழு!

தேசிய அரசாங்கத்தால் உருவாக்கப் படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவானது எதிர்வரும் புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.யுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவரும் சட்டத்தரணியிமான லால் விஜேயநாயக்க தெரிவித்தார். தற்போதுவரை பொதுமக்களிடமிருந்து 3000ற்கும் மேற்ப்பட்ட பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி உட்பட பிரதமருடன் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(“சம்பந்தனை சந்திக்கிறது அரசியலமைப்பு நிபுணர்குழு!” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடியது!?

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், விரைவில் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன. இதுதொடர்பாக ஆராய்வதற்கு, நேற்று கொழும்பில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், எட்டுப் பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், முதலில் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக நீண்டநேரம் ஆராயப்பட்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோருவதெனவும், துரித நடவடிக்கை எடுப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

(“கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடியது!?” தொடர்ந்து வாசிக்க…)

சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை, சாட்சியமளிப்பதற்காகவே என்னை அழைத்தார்கள்! டக்ளஸ்

சூளைமேட்டு சம்பவத்திற்கு மூன்றாம் நிலை சாட்சியமளிப்பதற்காகவே என்னை அழைத்திருந்தார்கள். அதற்கிணங்க இன்று காணொளி உரையாடல் மூலம் சாட்சியமளித்திருந்தேன் என ஈபிடிபி கட்சியின் தலைரும் பாராளுமன்ற உறுப்பினருமான  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சூளைமேட்டு சம்பவத்திற்கும் எனக்கும் நேரடியாக சம்பந்தமில்லை. சம்பவம் நடந்த பிறகுதான் நான் அவ்விடத்திற்கு சென்றேன். நான் அதைப் பார்க்க போயிருந்த பொழுது காயமடைந்த காரணத்தினால் என்னை அதில் சம்பந்தப்படுத்தினார்கள்.

(“சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை, சாட்சியமளிப்பதற்காகவே என்னை அழைத்தார்கள்! டக்ளஸ்” தொடர்ந்து வாசிக்க…)

விசாரணைகளில் நம்பகத்தன்மையையே ஐ.நா விரும்புகிறது?

போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மையான விசாரணைகளின் மூலம், சிறிலங்கா அரசாங்கம் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதையே ஐ.நா விரும்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்றுமுன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ”சிறிலங்காவில் முறையான விசாரணைகளின் மூலம் நல்லிணக்கம் மற்றும் இருதரப்பு பொறுப்புக்கூறலின் ஊடாக உண்மையான மறுசீரமைப்பிற்கு சிறந்த சந்தர்ப்பமாக தற்போதைய சூழல் அமைந்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் விசாரணைப் பொறிமுறையை முன்னெடுக்கவுள்ள நிலையானது சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை முந்தியது சீனா!

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் வரிசையில் முன்னிலையில் இருந்த இந்தியாவை வீழ்த்தி சீனா அந்த இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில், சீனாவில் இருந்தே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்துள்ளனர் என்று அதிகாரபூர்வ தரவுகளின் மூலம் அறியமுடிந்துள்ளது. பெப்ரவரி மாதத்தில், 32,186 சீனர்கள் சிறிலங்கா வந்துள்ளனர். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.4 வீத அதிகரிப்பாகும். அதேவேளை பெப்ரவரியில், 26,559 இந்தியர்கள் சிறிலங்காவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 33 வீத அதிகரிப்பாகும். கடந்த ஜனவரியில் 28,895 இந்தியர்களும், 26,083 சீனர்களும் சிறிலங்காவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களின் அடிப்படையில், சீனர்களே அதிகளவில் சிறிலங்கா வந்துள்ளனர்.

(“இந்தியாவை முந்தியது சீனா!” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தவின் கோட்டைக்குள் நுழைகிறார் மைத்திரி

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் கோட்டையாக கடந்த ஒரு ஆண்டு காலமாக விளங்கி வந்த நாரஹேன்பிட்டிய அபயராமய விகாரைக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார்.  நாளை சிறிலங்கா அதிபர் அபயராமய விகாரைக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மைத்திரிபால சிறிசேன அபயராமய விகாரைக்குச் செல்வதில் அரசியல் முக்கியத்துவம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபயராமய விகாரையின் ஞாயிறு பாடசாலை மாணவர்களுக்குப் பரிசளிக்கவே அவர் அங்கு செல்லவுள்ளார்.

(“மகிந்தவின் கோட்டைக்குள் நுழைகிறார் மைத்திரி” தொடர்ந்து வாசிக்க…)

வீடியோ கான்பரன்சிங் மூலம் கொலை வழக்கு விசாரணை!

கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை செசன்சு கோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. தமிழக நீதித்துறை வரலாற்றில் வெளிநாட்டில் உள்ள நபரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா. இவர், 1986ம் ஆண்டு சென்னை சூளை மேட்டில் தன் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் தங்கியிருந்தார். அந்த ஆண்டு நவம்பர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி மக்கள் வெடி வெடித்தனர்.

(“வீடியோ கான்பரன்சிங் மூலம் கொலை வழக்கு விசாரணை!” தொடர்ந்து வாசிக்க…)

விமான நிலைய விஸ்தரிப்பு? மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது!

வலிகாமம் வடக்கு பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்பு பணகளுக்காக பொதுமக்களின் நிலங்களை சுவீகரிக்கும் எண்ணம் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். கோப்பாய்- செல்வபுரம் பகுதியில் இடம் பெயர்ந்த மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டப் பணிகளை இன்றைய தினம் அமைச்சர் பார்வையிட்டார்.

(“விமான நிலைய விஸ்தரிப்பு? மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது!” தொடர்ந்து வாசிக்க…)