வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை!?

பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட காணாமற்போனோர் குறித்த விசாரணைகள், நேற்றுடன் முடிவடைந்தன.

(“வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை!?” தொடர்ந்து வாசிக்க…)

ஊழல் விசாரணை ஆணைக்குழு செயலர் பதவி நீக்கம்!?

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் செயலர் பதவியில் இருந்து லசிலி டி சில்வா திடீரென நீக்கப்பட்டுள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் நேற்று இந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி, சிறிலங்கா அதிபரின் செயலர் பி.பி.அபயகோன் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

(“ஊழல் விசாரணை ஆணைக்குழு செயலர் பதவி நீக்கம்!?” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைந்ததாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!

எமது மக்களின் அபிலாசைகளை தீர்க்காத எந்தவொரு தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது வடக்கு கிழக்கு இணைந்தாகவும் ஆனால் தமிழ் மக்களை பிரிக்காததாகவும் அமைய வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மத்தியில் சமகால நிலைமைகள் பற்றி அவர் நேற்று திங்கட்கிழமை மாலை விளக்கமளிக்கையிலேயே மேற்படி கருத்தை அவர் வெளியிட்டார். அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில்,

(“வடக்கு கிழக்கு இணைந்ததாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸிடம் விசாரணை?

ஈ பி டி பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை நீதிமன்றம் காணொளி மூலம் விசாரணைகளை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் 5ஆம் திகதி இந்த விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தா 1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுகரசு என்ற நபரை சுட்டுக் கொலை செய்துள்ளதாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

(“டக்ளஸிடம் விசாரணை?” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையான் கைதின் பின்னணியில் கூட்டமைப்பு!

பிள்ளையான் கைதின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது. வடக்கு கிழக்கை இணைக்கும் யோசணைக்கு எதிர்ப்பு தெரிவித்தமையே கூட்டமைப்பு பிள்ளையானை காட்டிக் கொடுக்க காரணம் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க,கருணா அம்மான் மற்றும் கே.பி ஆகியோரை கைது செய்வதாக கூறி மார் தட்டிக்கொண்ட அரசாங்கம் இன்று மௌனித்து இருப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பேதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ. டீ. வீரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(“பிள்ளையான் கைதின் பின்னணியில் கூட்டமைப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

சமஸ்டித் தீர்வை உருவாக்க இந்தியா தலையிட வேண்டும்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமஸ்டி ஆட்சிமுறையை உருவாக்க இந்தியா தலையீடு செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, மேற்படிப்புக்காக இந்தியா சென்று திரும்பியவர்களை வரவேற்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக பிபிசி சந்தேசய தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் நடராஜனும் கலந்து கொண்டிருந்தார். “தமிழ் மக்கள் ஆபத்தான அரசியல் சூழலில் இருந்த போது தமிழ் மக்களைக் காப்பாற்ற எவ்வாறு இந்தியா தலையிட்டதோ அது போன்றே, இப்போதும் கூட இந்தியா இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(“சமஸ்டித் தீர்வை உருவாக்க இந்தியா தலையிட வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் யோசித ராஜபக்ச?

யோசித ராஜபக்ஸ கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணச்சலவை மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசித ராஜபக்ஸ கடந்த மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

(“கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் யோசித ராஜபக்ச?” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரனின் யோசனையை நிராகரித்தார் முதல்வர்!

யாழ்.நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையினர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவை நியமிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட யோசனையை நிராகரித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

(“சுமந்திரனின் யோசனையை நிராகரித்தார் முதல்வர்!” தொடர்ந்து வாசிக்க…)

ஈரோஸ் ஜனநாயக முன்னணி!?

ஈழப் புரட்சி அமைப்பினால் ஈரோஸ் ஜனநாயக முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஈரோஸ் அமைப்பின் ஆர்.ராஜேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சி அறிவிப்பு நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தோழர்கள் கலந்து கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு மலையக மக்களின் தற்கால தேவைகளை உணர்ந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணி எனும் அரசியல் கட்சியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

(“ஈரோஸ் ஜனநாயக முன்னணி!?” தொடர்ந்து வாசிக்க…)

செங்கைஆழியான் காலமானார்.

பிரபல எழுத்தாளரும், ஒய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான செங்கைஆழியான் என அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா யாழ்ப்பாணம் பிரௌன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75ஆகும். புவியியல்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற குணராசா புவியியல் பாடநூல்கள் பலவற்றை எழுதியதுடன் பல தொடர்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என ஆக்க இலக்கியங்களையும் படைத்துள்ளார். வீரகேசரி வெளியீடாக வெளிவந்த வாடைக்காற்று நாவல் பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. அது தவிர சிரித்திரன், வீரகேசரி தினகரன் ஆகியவற்றில் தொடர்கதைகளையும் எழுதியுள்ளார். வீரகேசரி வெளியீடாக 10க்கு மேற்பட்ட இவரின் நாவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளராகவும் இவர் பணியாற்றினார்.