சம்பூர் கொக்கட்டிச்சேனை மக்களை வெளியேறுமாறு உத்தரவு?

நீண்டகால அகதி வாழ்விலிருந்து மீண்டு தற்போது சொந்த மண்ணில் சுயதொழில் செய்துவரும் சம்பூர் கொக்கட்டிச்சேனை மக்களை இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன் வெளியேறுமாறு மூதூர் பிரதேச செயலகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமது காணிப் பிணக்கை தீர்க்குமாறு கோரி கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணியிடம் கொக்கட்டிச்சேனை மக்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.

(“சம்பூர் கொக்கட்டிச்சேனை மக்களை வெளியேறுமாறு உத்தரவு?” தொடர்ந்து வாசிக்க…)

மக்களின் காணிகளை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று கொழும்பில் நடந்த சந்திப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

(“மக்களின் காணிகளை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது!” தொடர்ந்து வாசிக்க…)

சுப்பிரமணிய சாமி மீது தக்காளி, முட்டை வீச்சு?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் நடைபெறும் சர்வதேச தீவிரவாதம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி இன்று வந்தார். கருத்தரங்கம் நடைபெறும் கல்லூரி வளாகத்தை நோக்கி இன்று காலை அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, உள்ளூர் காங்கிரஸ் தலைவரான நரேஷ் திவேதி தலைமையில் காங்கிரசார் அவரது காரை வழிமறித்து சுப்பிரமணிய சாமிக்கு எதிராக கோஷமிட்டனர். கூட்டத்தில் இருந்த சிலர் சுப்பிரமணிய சாமி மீது தக்காளி மற்றும் முட்டைகளை வீச முயன்றனர்.

(“சுப்பிரமணிய சாமி மீது தக்காளி, முட்டை வீச்சு?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்தேசிய மக்கள் முன்னனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வருடாந்த பொதுக்கூட்டம்?

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த பொதுக்கூட்டம் இலங்கை இளங் கலைஞர் மன்ற மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். கட்சிகளின் எதிர்கால நடவடிக்கை மற்றும் இதுவரை இடம்பெற்ற செயற்பாடுகள் என்பவை பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் மீண்டும் மன்னார் ஆயர்!

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக தனது பணியை முன்னெடுக்க முடியாத நிலையில் ஓய்வு பெற்றுள்ளார். எனினும் இன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் ஆராம்பமான ‘மன்னாரின் சமர் மாபெரும் மின்னொளியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

(“மக்கள் மத்தியில் மீண்டும் மன்னார் ஆயர்!” தொடர்ந்து வாசிக்க…)

மாவை கைவிட சுரேஸிடம் சரண் அடைந்தார் ஜங்கரநேசன்!

வடக்கு மாகாணசபையின் இன்றைய குழப்பங்களின் மத்தியில் மீண்டுமொரு முறை தனது அரசியல் சாணக்கியத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன். வடமாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னர் நான்கு அமைச்சர்களையும் தமிழரசுக்கட்சி தன்னுடைய எதேச்சதிகார திமிருடன் தெரிவு செய்திருந்தது. இதனால் கூட்டமைப்பு பெயரளவிலா என அப்போது கேள்வி எழுப்பிய அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆ.எல்.எவ் தனக்கு கிடைக்கவேண்டிய அமைச்சுப் பதவியையும் தமிழரசுக் கட்சியே எடுத்துக் கொண்டாதாகவும் அதனால் தமது கட்டுப்பாட்டுகளை மீறி தமது கட்சியை சேர்ந்த ஐங்கரநேசன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அறிவித்து ஐங்கரநேசனை தமது கட்சியை விட்டு நீக்கியிருந்தது. இந்நிலையில் ஐங்கரநேசன் தமிழரசுக்கட்சியின் செல்லப் பிள்ளையாக மாறியதுடன் மாவை சேனாதிராசாவின் நம்பிக்கைக்குரியவராகவும் மாறியுமிருந்தார். தனது முந்தைய தலைவரான சுரேஸ் தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அப்போது முன்வைத்து வந்துமிருந்தார்.

(“மாவை கைவிட சுரேஸிடம் சரண் அடைந்தார் ஜங்கரநேசன்!” தொடர்ந்து வாசிக்க…)

மார்ச் 17ல் அரசியல் அமைப்பு வரைவு நிறைவு பெறும்!

இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு வடமாகாண மக்களுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கான வடமாகாணசபையின் குழு மார்ச் மாதம் 17ம் திகதி தமது வரைபை நிறைவு செய்யும் என வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு வடமாகாண மக்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக வடமாகாண சபையினால் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆகியோரின் கூட்டு தலமையில் 19 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருந்தது.

(“மார்ச் 17ல் அரசியல் அமைப்பு வரைவு நிறைவு பெறும்!” தொடர்ந்து வாசிக்க…)

இராணுவ பிரசன்னம் படிப்படியாக நீக்கப்படும்?! ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற பூசை விழாவின் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.  வட மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பில் ஆறு மாதங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதையும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட தரப்புடன் பேசி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.  அதிகாரப் பகிர்விற்கு 13ஆம் திருத்தம் சிறந்த தீர்வு என்று கருத்துத் தெரிவித்த ரெஜினோல்ட் குரே அரசியலமைப்பின் பிரகாரமே தமக்கு கடமையாற்ற முடியும் என்று கூறியதுடன் அதற்கமைய 13ஐ பெறுவதில் உள்ள தடைகளை நீக்க முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தாடி வளர்த்தல் மற்றும் மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் புடவை அணிதல் ஆகிய கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விரும்பினால் மாத்திரம் அவற்றைப் பின்பற்றலாம் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, இன்று வெள்ளிக்க்கிழமை (26) முதல் நடைமுறைக்கு வருவதாக, கலைப் பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமாரனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகின. கல்விசார் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள், விரிவுரை மண்டபங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் மற்றும் டிசேட் அணிந்து வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தாடியுடன் விரிவுரைகளுக்கு வருவதும் தடை செய்யப்படுவதாகவும், மாணவிகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புடவை அணிந்து விரிவுரைகளுக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன், இவை பேரவையில் எடுக்கப்பட்ட முடிவாகவும் கூறப்பட்டது.

(“புதிய கட்டுப்பாடுகளை தளர்த்தியது யாழ். பல்கலைக்கழகம்!” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பில் தமிழ் யுவதிகள் முஸ்லீமா..? நடப்பது என்ன…?

மட்டக்களப்பில் புனித இஸ்லாத்துக்கு மாறும் இளம் தமிழ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக மட்டக்களப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக்காரணம் வறுமையே எனத்தெரியவருகின்றது. வறுமையின் நிமித்தம் காரணமாக கடைகளில் வேலை செய்யும் யுவதிகள் முஸ்லிம் இளைஞர்களை காதலிப்பதுடன் அவர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயம் புனித இஸ்லாத்தை தழுவவேண்டியேற்படுவதாக அண்மையில் ஏறார் கடையொன்றில் வேலைசெய்துஇஸ்லாத்துக்கு மாறிய பன்குடாவெளியைச்சேர்ந்த 22 வயது யுவதியொருவர் தெரிவித்தார். அத்துடன் நாம் வறுமையிண் வாடுகின்றோம் எமது ஆலயங்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன இச் சொத்தினை எம்மைப்போன்ற ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தலாமே? பள்ளிவாசல்கள் செய்யும் வேலையினை ஏன் எமது ஆலயங்கள் செய்யக்கூடாது என கேள்வி எழுப்புகின்றனர்.

(“மட்டக்களப்பில் தமிழ் யுவதிகள் முஸ்லீமா..? நடப்பது என்ன…?” தொடர்ந்து வாசிக்க…)