உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர் எம்.ஏ . சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அலைபேசி உரையாடலின் போது தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கைதிகளுக்கு எடுத்துரைத்தார் என்றும் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

LTTE இன் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவி காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் அரசியல் பிரிவு முன்னாள் பொறுப்பாளர்  தமிழினி என்றழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி காலமானார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

நியாயமான சம்பளத்திற்காகவும் நியாயமற்ற நிபந்தனைகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் அணித்திரண்டு போராட வேண்டும்

முதலாளிமார் சம்மேளனத்தினால் நாட் சம்பளமாக ரூபா. 1000/= பெறக்கூடிய ஒரு முறையை பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டு அது தொழிற்சங்கங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன. எனினும் முதலாளிமார் சம்மேளனம் அந்த முறையை பகிரங்கப்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தது. அந்த முறை தொடர்பாக தொழிற்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுடன் பேசிவிட்டு முடிவு தெரிவிக்க உடன்பட்டதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டிருந்தது. தொழிற்சங்கங்களும் அதனை பகிரங்கப்படுத்தாத நிலையில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த சம்பள முறை என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது.

(“நியாயமான சம்பளத்திற்காகவும் நியாயமற்ற நிபந்தனைகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் அணித்திரண்டு போராட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

வருட இறுதிக்குள் சாதகமான தீர்வு: உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் அரசாங்க மட்டத்தில் நிச்சயம் சாதகமான தீர்மானம் பெற்றுத்தரப்படுமென்பதால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக்கைதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். “போலியான வாக்குறுதிகளை வழங்கி சிறைக் கைதிகளை ஏமாற்ற நான் விரும்பவில்லை. இவ்வருடம் முடிவதற்கு இன்னும் இரண்டரை மாதங்களேயுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து கைதிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார்செய்ய எனக்கு இக்காலப் பகுதியை அவகாசமாக தாருங்கள்” எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக் கைதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

(“வருட இறுதிக்குள் சாதகமான தீர்வு: உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில்

 

டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. மிகக்குறைந்தளவானவர்களே கலந்து கொண்டனர். ஊடகங்கள் எதுவும் அவரின் இறுதி நிகழ்வு பற்றிய செய்திகளையோ அவரைப்பற்றிய விவரங்களையோ வெளியிடவில்லை. அவர் ஒரு காலங்கடந்த மனிதராகவே ஊடகங்களால் கைவிடப்பட்டிருந்தார். குறைந்த பட்சம் இணையத்தளங்களையும் முகப்புத்தகத்தையும் பார்த்துக்கூட அவரைப்பற்றிய தகவல்களை அறியும் நிலையில் இலங்கைத்தமிழ் ஊடகங்கள் இருக்கவில்லை. அல்லது அவர் புளட்டுடன் அடையாளம் காணப்பட்டவர் என்பதால், தற்போது அவர் எந்தப் பட்டியலில் (துரோகியா தியாகியா ) உள்ளார் என்ற குழப்பத்தில் அவரைப்பற்றி எழுதவும் வெளிப்படுத்தவும் தயங்கியிருக்கலாம். இறுதி நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆனால் டேவிட் ஐயா எந்த இடம் பெயர்ந்து வந்த மலையக மக்களின் ஈடேற்றத்துக்காக முன்னின்று உழைத்தாரோ, யாருடைய வாழ்க்கை முன்னேற்றம் காண வேண்டும் என்று விளைந்தாரோ அவர்களில் இருந்து ஒருவர் கூட உரையாற்றவில்லை. அப்படி ஒருவருக்கான இடமும் கிடைக்கவில்லை. அவரைச் சிலர் தமக்கான நிகழ்கால – எதிர்கால அரசியலுக்குத் தத்தெடுக்க முனைந்ததுதான் ஆகப் பெரிய அவலமாக இருந்தது.

(Sivarasa Karunagaran)

புலி உறுப்பினரை நாடுகடத்த உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கனேடிய அமைப்பை இயக்குவதற்காக டொரோன்டோவுக்குச் சென்ற, தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனக் கூறப்படும் மாணிக்கவாசகம் சுரேஷ் என்பவரை நாடு கடத்துமாறு, கனேடிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனேடிய குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஷை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

(“புலி உறுப்பினரை நாடுகடத்த உத்தரவு” தொடர்ந்து வாசிக்க…)

வெலே சுதாவுக்கு மரண தண்டனை

கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் 7.05 கிராம் ஹெரோய்னை தன்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்து சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளார்.

தமிழ் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றுத் தொடர்ந்தது. உண்ணாவிரதமிருந்த நான்கு கைதிகளின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கை ஜனாதிபதியின் செயலாளர், சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.

(“தமிழ் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மீரியபெத்தை மண்சரிவு, ஒருவருட பூர்த்தி

பதுளை, மீரியபெத்தை மண் சரிவில் பலியான 37 பேரினது ஆத்ம சாந்திக்காக ஒரு வருட திதி நிகழ்வுகள், பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி இந்து ஆகம விதிப்படி நடைபெறவுள்ளன. பூணாகலை தமிழ் மகா வித்தியாலய வளவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆத்ம சாந்திக்கான பூஜைகள் இடம்பெறவுள்ளதுடன், மலர் அஞ்சலிகளும் இடம்பெறும். அத்துடன், மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாக்கத்தை தேயிலைத் தொழிற்சாலை நலன்புரி நிலையத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டிருக்கும் 75 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

(“மீரியபெத்தை மண்சரிவு, ஒருவருட பூர்த்தி” தொடர்ந்து வாசிக்க…)

மலேஷிய எம்.எச். விமானத்தை தாக்கியது ரஷ்ய தயாரிப்பு

மலேஷிய ஏர்லைன் விமானம் எம்.எச்.17 ரஷ்யா தயாரிப்பு புக் ஏவுகணை தாக்கியே வீழ்த்தப்பட்டிருப்பதாக நெதர்லாந்து பாதுகாப்பு சபை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேற்படி அனர்த்தம் குறித்து நேற்று வெளியான இறுதி அறிக்கையில், விமானத்தின் முன்பாக இடது புறத்தில் ஏவுகணை தாக்கியதன் விளைவாக அது உடைந்து விழ ஆரம்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு மற்றும் மேற்குலகம் குற் றம்சாட்டுகிறது. எனினும் குறித்த ஏவுகணை உக்ரைன் அரச கட்டுப்பாட்டு பகுதில் இருந்தே ஏவப்பட்டதாக ரஷ்யா குறிப்பிடுகிறது.

(“மலேஷிய எம்.எச். விமானத்தை தாக்கியது ரஷ்ய தயாரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)