இஸ்ரேல்-பலஸ்தீன வன்முறை உக்கிரம்

கத்திக் குத்து சம்பவங்களில் 3 இஸ்ரேலியர் 3 பலஸ்தீனர் பலி. இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிப்பு கிழக்கு nஜரூசலம் பகுதிகளில் நேற்று செவ்வாயன்று இடம்பெற்ற குறைந் தது ஐந்து வௌ;வேறு தாக்குதல் சம்பவங்களில் மூன்று இஸ்ரேலியர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்துள் ளனர். தாக்குதல்தாரிகள் என்ற சந்தேகத்தில் மூன்று பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் ஜபல் அல் முகப் பிர் பகுதியில் இஸ்ரேல் பஸ் ஒன்றில் நடத்தப்பட்ட தாக் குதலில் இரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டு 15 பேர் காய மடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஆறு அல்லது ஏழு இஸ்ரேலியர்கள் படுகாயத்திற்கு உள்ளாகி இருப்பதாக இஸ்ரேல் அவசர சேவை பிரிவின் பேச்சாளர் மகேன் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

(“இஸ்ரேல்-பலஸ்தீன வன்முறை உக்கிரம்” தொடர்ந்து வாசிக்க…)

கண்ணீர் அஞ்சலி

 

வவுனியா பூவரசங்குளதில் 18.03.1959 இன்று பிறந்தவரும் புழல் இலங்கை அகதிகள் முகாமில் 1990 முதல் வசித்து வந்தவருமான தோழர்அர்ஜீன் 11.10.15 அன்று உடல் நலக்கோளாறு காரணமாக புழல் அகதிகள் முகாமில் இயற்கை எய்தினார். வவுனியாவில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களுக்கு பசியாற சமைத்துப் போட்டது மட்டுமல்லாமல் கட்சிப்பணிகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபட்டவர்.நோய் வாய்ப்பட்ட காலங்களிலும் அவர் புழல் முகாமில் நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வுகளுக்கு தவறாது சமூகம் தருபவர். கட்சியையும் தோழர்களையும் என்றும் மதித்து நடப்பவர். அன்னாரது பிரிவால் துயருற்று இருக்கும் அவரது குடுப்பத்தாருக்கு ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பத்மநாபா.-ஈ.பி.ஆர்.எல்.எப்

(“கண்ணீர் அஞ்சலி” தொடர்ந்து வாசிக்க…)

கீரிமலை கடற்படை முகாம் அகற்றப்பட்டது

கீரிமலை கேணிக்கு அண்மையிலுள்ள இரண்டு வீடுகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த சிறிய கடற்படை முகாம், திங்கட்கிழமை (12) அகற்றப்பட்டு முகாம் அமைந்திருந்த வீடுகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. மேற்படி முகாம் முன்னர் 3 வீடுகளை உள்ளடக்கி அமையப் பெற்றிருந்து. ஒரு வீடு ஏற்கெனவே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மிகுதி 2 வீடுகளும் தொடர்ந்தும் கடற்படை முகாமாகவே இருந்தன. தற்போது கடற்கடை முகாம் முற்றாக அகற்றப்பட்டமையால், 2 வீடுகளும் வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனனிடம் கையளிக்கப்பட்டது. பிரதேச செயலர் மேற்படி 2 வீடுகளையும் அதன் உரிமையாளர்களிடம் கையளித்தார்.

சுமுகமான தீர்வுக்கு வடக்கு முதல்வரால்ஏழு யோசனைகள்

தமிழ்க் கைதிகள் விவகாரம் – ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் அவசர கடிதம்

தமிழ்க் கைதிகளின் பிரச்சினையை இரக்கத்துடனும் அனுதாபத்துடனும் கையாள, வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் 07 யோசனைகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, சிறைச்சாலைகளில் உள்ள தமிழ்க் கைதிகள், தங்களை நீண்ட காலமாகத் தடுத்து வைத்திருப் பதை வெளிப்படுத்தும் முகமாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றனர்.

(“சுமுகமான தீர்வுக்கு வடக்கு முதல்வரால்ஏழு யோசனைகள்” தொடர்ந்து வாசிக்க…)

சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா!

1995ல் கைது செய்யப்பட்டு நாடு கடத்த முயற்சிக்கப்பட்ட கனடா உலகத்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்த சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்துவதற்கான உத்தரவை கனடிய உச்சநீதிமன்றம் 2002ல் இடைநிறுத்தி அவருடைய வழக்கு மீள்விசாரணைக்கான அனுமதியை வழங்கியிருந்தது.

(“சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடு கடத்தும் உத்தரவை அமுல்படுத்தும் கனடா!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் நாடெங்கிலு முள்ள சிறைச்சாலைகளில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். தம்மை விடுதலை செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில், தாம் விடுதலை செய்யப்படும்வரை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(“தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்” தொடர்ந்து வாசிக்க…)

கைதிகளை ஒரு வாரத்தினுள் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் ஒரு வார காலத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமது வலுவான கோரிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப் படுவார்கள் என கடந்த ஜனவரி மாதத்திலிருந்து எதிர்பார்க்கின்றோம், இவர்களின் விடுதலை மேலும் இழுத்தடிக்கப் படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

(“கைதிகளை ஒரு வாரத்தினுள் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையான் கைது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வாக்குமூலத்தின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாக, சட்டதரணி தெரிவித்துள்ளார்.

ஞானாசாரவுக்கு பிடிவிறாந்து

வழக்கில் ஆஜராமையை அடுத்து, பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசாரா தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சந்திரகாந்தனை இலகுவாக கைது செய்ய முடிகின்றது குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு. ஆனால் மஞ்சள் காவி அணிந்து பல காலமாக இனவாதம் பேசிவரும் ஞானசார தேரரை மட்டும் கண்டு பிடித்து கைது செய்ய முடியவில்லை என்பதிலேயே தெரிகின்றது இலங்கை அரசினதும் அதன் படைகளினதும் பாகுபடுத்தி பார்க்கும் கண்ணோட்டம்.

அமெரிக்காவுடன் போருக்குத் தயார் – வடகொரியா

வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா விமரிசையாக இடம்பெற்றதோடு, அமெரிக்காவுக்கெதிரான போர் தொடர்பான அந்நாட்டின் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அந்நாட்டின் வரலாற்றில், மிகப்பெரிய இராணுவ மரியாதை இடம்பெற்ற சந்தர்ப்பமாக இது அமைந்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த அந்நாட்டின் ஆட்சியாளரான கிம் ஜொங் உன், ‘கட்சியினுடைய புரட்சிகரமான ஆயுதங்களின் காரணமாக, ஐக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தொடுக்கப்படும் எந்தவொரு போருக்கும் நாம் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவிததார். கடந்த காலங்களை விடத் தீர்க்கமானதாகக் காணப்பட்ட இந்த உரை, அமெரிக்கா மீது அந்நாடு காட்டிவரும் எதிர்ப்பு மனநிலையில் அடுத்த கட்ட அறிவிப்பாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த உரையின் போது, வடகொரியாவின் அணுஆயுதத் திட்டம் தொடர்பான எந்தவொரு நேரடியான கருத்தினையும் கிம் ஜொங் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.