யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் காலமானார்

பிரபல தபேலா இசை மேதை சாகிர் ஹுசைன் தனது 73 ஆவது வயதில் இன்று காலமானார். அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதயக் கோளாறு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பள்ளி வாசலில் திருட்டு

பாலமுனை புதிய பாலமுனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளி வாசல்  உண்டியல் களவாடப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (16) அதிகாலை  இடம்பெற்றுள்ளது. பள்ளி வாசலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர்   உண்டியலை திருடுவது  சி.சி.ரி.வி.காணொளியில் பதிவாகியுள்ளதுடன் இது தொடர்பாக பள்ளி வாசல் நிர்வாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மின்கட்டண திருத்தம் இன்று…

மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை இன்று  (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி 08ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நீதி மன்றம் அருச்சுனாவை எச்சரித்தது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.

முட்டைவிலை குறைகிறது

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக முட்டைகள், 30 ரூபாய்க்கும் 35 ரூபாய்க்கும் சில்லறை விலையில் விற்கப்படும் என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் ஆண்டன் அப்புஹாமி கூறுகையில், அனைத்து சில்லறை விற்பனையாளர்களையும், நேற்று (16) முதல் முட்டையின் விலையை ரூ 35க்கு  விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், 2023ஆம் ஆண்டு பண்டிகைக் காலங்களில், முட்டையின் விலை, 65-70 ரூபாவாக இருந்த போதிலும், தற்போது முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலை நிலைகள் சீரடைந்துள்ளன

”எதிர்காலத்தில் மைத்திரி உரிமை கோர மாட்டார்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் எந்த உரிமையும் கோரப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி ஊடாக இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

”நாமல் மோசடி செய்து பட்டம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன”

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு 11 வருடங்களுக்கு முன்னர் சட்டப் பரீட்சையின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் காலை 10.00 மணிக்கு  இடம்பெற்றது.

மயோட்டே தீவில் புயல்:11 பேர் பலி; 200 பேர் படுகாயம்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள  மயோட்டே தீவை, ஞாயிற்றுக்கிழமை (15),  “சிண்டோ” என்ற புயல் தாக்கியது. கனமழையுடன் வீசிய இந்தப் புயலால், பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  இந்தப் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.