தீர்வில் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டும்

இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் பங்களிப்பும் இருப்பதினால் எந்த இனமும் பாதிக்கப்படாத வகையில், குறிப்பாக முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சனியன்று வலியுறுத்தினார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளி விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான தீரவு மற்றும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க உதவ வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

(“தீர்வில் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீள்குடியேற்ற மக்களை சந்தித்தார்

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் வாழும் மக்களை நேரில் சென்று சந்தித்தார். கடந்த 25 வருடங்களாக சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் அகதி வாழ்வு வாழும் மக்களையே அவர் நேரில் சென்று கலந்துரையாடினார். அங்கு மக்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்ககையில்,மீள்குடியமர்வு தொடர்பாக ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளளேன் எனவும், எனது அடுத்த கட்ட விஜயத்தில் நான் உங்களை சொந்த இடத்தில் சந்தி்ப்பேன் என தான் நம்புவதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் முகாம் மக்களிடம் தெரிவித்தார்.

திமிங்கிலங்கள் கரையொதுங்குவதில் துலங்கும் மர்மங்கள்!

தென்னிந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தின் சில கரையோரப் பிரதேசங்களில் இவ்வருடம் (2016) ஜனவரி மாதத்தின் நடுப் பகுதியில் சுமார் 300 திமிங்கிலங்கள் கரையொதுங்கியதும், அவற்றில் பெரும்பாலானவை உயரிழிந்ததும் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரித்தை ஏற்படுத்தின. கடல் வாழ் உயிரினமான திமிங்கிலத்திற்கு என்ன நேர்ந்தது என்று பரவலாகப் பார்க்கப்பட்டதோடு இவ்வாறு உயிரிழந்த திமிங்கிலங்களின் உடல் பாக மாதிரிகள் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

(“திமிங்கிலங்கள் கரையொதுங்குவதில் துலங்கும் மர்மங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப கூடிய அரசியல் தீர்வு அவசியம் – சுமந்திரன்

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழுகின்ற ஈழத் தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பக் கூடிய வகையிலான அரசியல் தீர்வையே எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உடனான சந்திப்பில் இந்த விடயத்தை தாம் வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்ஜுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

(“புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்ப கூடிய அரசியல் தீர்வு அவசியம் – சுமந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் வேண்டாம் – மாவை…!

தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழரசுக்கட்சி செயற்படுவதானால் தற்போது அதில் அங்கம் வகித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் கட்சி என்பவை வெளியேற்றப்பட வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளார் மாவை சேனாதிராசா. தமிழ் மக்கள்பேரவையின் இணைத்தலைவர் உள்ளிட்ட ஏற்பாட்டுக்குழுவொன்று தமது உத்தேச அரசியல் தீர்வு திட்ட வரைபு பற்றி மாவை.சேனாதிராசாவை சந்தித்து விளக்கியுள்ளது. யாழ்.நகரின் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி தலைமை காரியாலத்தில் இச்சந்திப்பு நடந்துள்ளது. அப்போது பேச்சுக்களில் பங்கெடுத்த மாவை தான் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்பட பூரண விருப்பம் மற்றும் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

(“முன்னணி மற்றும் ஈபிஆர்எல்எவ் வேண்டாம் – மாவை…!” தொடர்ந்து வாசிக்க…)

EPRLF [சுரேஸ்] வைத்தியர் மாவையிடம் ஓட்டம்!!!

வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான சம்பந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். மிக வித்தியாசமான முறையில் தான் பிறந்த தின பரிசினை வழங்க தீர்மானித்ததாகவும் தனது அன்பையும் பேராதரவையும் தெரிவிக்கவே தான் நேசிக்கும் அன்பான தலைவரின் கட்சியில் இணைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார்.

(“EPRLF [சுரேஸ்] வைத்தியர் மாவையிடம் ஓட்டம்!!!” தொடர்ந்து வாசிக்க…)

மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஐ.நா ஆணையர் இன்று வருகை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இவரின் வருகை இலங்கையில் மாறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஹூசைனின் இலங்கை விஜயத்துக்கு எதிராக மஹிந்த தரப்பினர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், வடக்கு, கிழக்கு உட்பட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அவருடைய வருகையை எதிர்பார்த்துள்ளனர்.

(“மாறுபட்ட அரசியல் சூழ்நிலையில் ஐ.நா ஆணையர் இன்று வருகை” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

“இலங்கை இந்தியா இடையேயான தரைப் பாலத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை”

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் இன்று மாலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டன. இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், இலங்கைக்கு இன்று வெள்ளிக்கிழமை, விஜயம் செய்தார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற மாநாட்டில் சுஷ்மா சுவ்ராஜ் மற்றும் இலங்கை வெளிவவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உட்டபட இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாநாட்டின் முடிவில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் வடமாகாணத்தில் 27 பாடசாலைகளை மீள்புனரமைப்பு செய்தல் ஆகிய இரண்டு ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டன.

சுன்னாகம் நீர் மாசு, பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாண அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளருக்கும் மல்லாகம் நீதவானால் இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.. 2014 ஆம் ஆண்டு உடுவில் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரேதச வைத்திய அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுன்னாகம் பகுதியில் உள்ள மின் நிலையத்தின் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு மல்லாகம் மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விக்கிலீக்ஸ் நிறுவனர் சட்டத்துக்கு புறம்பாக பிரித்தானியாவால் தடுத்து வைக்கப்பட்டார்! – ஐ நா செயற்குழு

விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசான்ஜ் சட்ட விதிகளுக்கு புறம்பாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவின் 5 நீதிபதிகள் சில மணிநேரங்களுக்கு முன் இன்று (பெப்ரவரி 5 2016) அறிவித்து உள்ளது. யூலியன் அசான்ஜ் இன் சுயாதீன நடமாட்டத்தை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. யூலியன் அசான்ஜ் யை அமெரிக்கா உட்பட பிரித்தானியா சுவீடன் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்க முற்பட்ட போது 2012 ம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள எக்குடோரியன் உயர்ஸ்தானிகர் இல்லத்தில் யூலியன் அசான்ஜ் தஞ்சமடைந்தார். தற்போது ஐநா வின் சட்டத்துக்கு புறம்பான தடுத்து வைப்பு;புகள் தொடர்பான செயற்குழு பிரித்தானியாவும் சுவீடனும் யூலியன் அசான்ஜ்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நஸ்டஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

(“விக்கிலீக்ஸ் நிறுவனர் சட்டத்துக்கு புறம்பாக பிரித்தானியாவால் தடுத்து வைக்கப்பட்டார்! – ஐ நா செயற்குழு” தொடர்ந்து வாசிக்க…)