கேரள பலாத்கார – படுகொலை: இளம்பெண்ணுக்கு நீதி கோரி தீவிரமாகிறது போராட்டம்

இளம் பெண் பலாத்கார படுகொலை சம்பவத்தைக் கண்டித்து கோழிக்கோட்டில் நடந்த போராட்டம்

 

கேரளத்தில் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் நீதி கோரி கோழிக்கோட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இச்சம்பவத்துக்கு நீதி கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. எர்ணாகுளம் மாவட்டம் ராயமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ளது இராவிச்சிரா. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார்.

(“கேரள பலாத்கார – படுகொலை: இளம்பெண்ணுக்கு நீதி கோரி தீவிரமாகிறது போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க சென்றேன்: மோடி

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களைக் காப்பாற்றினேன். இலங்கை அரசுடன் நல்லுறவை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான் என்றும் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழக பாதிரியாரை மத்திய அரசு மீட்டது என்றும் அவர் கூறினார்.

(“இலங்கை தமிழர்களின் நலனைக் காக்க சென்றேன்: மோடி” தொடர்ந்து வாசிக்க…)

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம்.

ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் உள்ளிட்டோர் இணைந்து, ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக, நேற்றைய தினம் (04.05.mm2016) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தகவல் வெளியிட்டுள்ளார்.

(“ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உதயம்.” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தன் எவ்வாறு சமஷ்டியை பெற்றுத் தரப் போகிறார்?

பலமான அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் பெரும் அக்கறை கொள்ளவில்லை. 2004 ம் ஆண்டுத் தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பலம் வாய்ந்த விடுதலைப் புலிகள் மூலம் பெற்றுக் கொண்டு, அவ்வமைப்பையும் பக்கபலமாக வைத்துக் கொண்டு,எம் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தபடி இருந்து விட்டு, இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது மக்களையும் விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்கு வழிவகுத்துஅவர்களைஅரசுக்குக் காட்டிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.

(“சம்பந்தன் எவ்வாறு சமஷ்டியை பெற்றுத் தரப் போகிறார்?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாட்டில் இலவச ஆட்சியா….?

அஇஅதிமுக தேர்தல் அறிக்கை இலவசங்களை அள்ளித் தெளித்துள்ளது. இதை விமர்சிக்கும் திமுகவினர் தமிழக அரசின் 2 லட்சம் கோடி கடனை அடைக்க என்ன வழி என்கின்றனர்.

திமுக மதுவிலக்கை அமல்படுத்தி, விவசாய கடனை தள்ளுபடி செய்து, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்து, பால் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் குறைத்து, இந்த 2 லட்சம் கோடி கடனை எப்படி குறைப்போம் என்று சற்று விளக்கினால் நன்று.

(“தமிழ்நாட்டில் இலவச ஆட்சியா….?” தொடர்ந்து வாசிக்க…)

தெவரப்பெரும, பிரசன்னவுக்கு ஒருவாரம் அமர்வுத் தடை

பாராளுமன்றத்தில் கண்ணியத்துக்கும், கௌரவத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சபை நடுவில் கைகலப்பில் ஈடுபட்ட பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும (ஐ.தே.க) மற்றும் கம்பஹா மாவட்ட ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு ஒருவாரகால தடை விதிக்கப்பட்டுள்ளது.

(“தெவரப்பெரும, பிரசன்னவுக்கு ஒருவாரம் அமர்வுத் தடை” தொடர்ந்து வாசிக்க…)

ஜேர்மனியில் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஆர்வம்

பல்வேறு காரணங்களுக்காக, ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளின் வருகை காரணமாக, அந்நாட்டில் கிரிக்கெட் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, புதிய அணிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் அதிகமாகக் கிடைத்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(“ஜேர்மனியில் அதிகரித்துள்ள கிரிக்கெட் ஆர்வம்” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் நடைபெற்ற மே தினம்

வருடா வருடம் கனடாவின் ரொறன்ரோ நகரில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து தொழிலாளர் உரிமை தினமான மே தின நிகழ்வை நடாத்துவது வழக்கம். இம் முறையும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு ஜனநாயக அமைப்புக்கள் இணைந்து சிந்தனை செயற்பாட்டு மையம் என்ற ஐக்கிய அமைப்பின் கீழ் மே தின நிகழ்வை நடாத்தினர். இதில் பழம் பெரும் தமிழ் இடதுசாரிகள். தொழிற் சங்கவாதிகள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, ஈரோஸ், ஈபிடிபி, சம உரிமை இயக்கம். ரேலோ, புளொட் அமைப்பினர் கனடா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வு நடைபெற்றது.

(“கனடாவில் நடைபெற்ற மே தினம்” தொடர்ந்து வாசிக்க…)

நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு வார காலத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தார்.

(“நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு” தொடர்ந்து வாசிக்க…)