கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு

புலிகளின் நடவடிக்கையில், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் தொடர்பு பற்றிய விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை (03) சமர்ப்பித்தார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரியவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன்னவும், கே.பி.யிடமிருந்து இப்போதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுவருவதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

(“கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு” தொடர்ந்து வாசிக்க…)

சுதந்திர தினக் கொண்டாட்டம் ! கூட்டமைப்பு பங்கேற்பு ! மஹிந்த புறக்கணிப்பு !

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாடம் இன்று வியாழக்கிழமை காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று காலை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் 4,025 இராணுவம், 984 கடற்படை, 1,216 விமானப்படைச் சிப்பாய்களும், 887 பொலிஸார், 674 சிவில் பாதுகாப்புப் படையினர், 7 மாணவப் படையணியின் அதிகாரிகள் உட்பட 438 மாணவ படையணியினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

(“சுதந்திர தினக் கொண்டாட்டம் ! கூட்டமைப்பு பங்கேற்பு ! மஹிந்த புறக்கணிப்பு !” தொடர்ந்து வாசிக்க…)

‘ஜிகா’ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

உலகை அச்சுறுத்தி வரும் ‘ஜிகா’ வைரஸை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கடந்த 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3,500 குழந்தைகள் இதுபோல் பிறந்திருப்பதால், இதற்கும், ‘ஜிகா’ வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

(“‘ஜிகா’ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள் சாதனை!” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு பிரதமர் ரணில் இணக்கம்.

புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, கட்சிக்குள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வது அவசியமாகும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உலக நாடுகள் எங்கும் தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்தாலும் குறிப்பாக அமெரிக்கா இலண்டன் சுவிஸ் கனடா ஜேர்மனி பிரான்ஸ் நோர்வே மற்றும் இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகளிலும் இருக்கும் கட்சியின் அமைப்பாளர்களுக்கு விடுத்துள்ள உட்சுற்று அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

(“டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு பிரதமர் ரணில் இணக்கம்.” தொடர்ந்து வாசிக்க…)

ரணில் – சரத் பொன்சேகா புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்திலான ஜனநாயகக் கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது. அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதன் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கையொப்பமிட்டனர். அதன் பின்னர் தமது உடன்படிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

(“ரணில் – சரத் பொன்சேகா புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!” தொடர்ந்து வாசிக்க…)

புலி – மஹிந்த இரகசிய ஒப்பந்த விவகாரம்: விரைவில் அம்பலம்

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை புலிகளில் முன்னாள் செயற்பாட்டாளரான எமிழ்காந்தன் அம்பலப்படுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதற்காக, புலிகள் இயக்கத்தினருக்கு பெருந்தொகையான பணத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்தார் என்று கூறப்படும் உடன்படிக்கை, மிக விவரமாக வெகு விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

(“புலி – மஹிந்த இரகசிய ஒப்பந்த விவகாரம்: விரைவில் அம்பலம்” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை!!

சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு திருநாவுக்கரசு என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜராவதற்கு தேவையான செலவுகளை ஏற்பதாக தெரிவித்துள்ளார். சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காணொளி காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அதற்கான வசதிகள் இல்லாததால், அந்தக் கருவிகள் அமைக்க தேவையான செலவுகளை ஏற்பதாக டக்ளஸ் தேவானந்தா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

(“டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை!!” தொடர்ந்து வாசிக்க…)

எமில் காந்தனுக்கான பிடியாணை வாபஸ்

தமிழீழ விடுதலை புலிகளின் உயர்மட்ட தலைவர் என்று கூறப்படும் எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல்களை, மேல்நீதிமன்றம் இன்று வாபஸ் செய்துள்ளது. எமில் காந்தன், சரணடைவதாக வழங்கி உறுதியை அடுத்தே இவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்

தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

(“தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்” தொடர்ந்து வாசிக்க…)

தொடரும் மர்ம மரணங்கள் ? குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறுகிய காலகட்டத்துள் மூவர் மர்மமான முறையில் உயிர் நீத்துள்ளமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, இச் சம்பவங்களின் பின்னணிகள் உடனடியாகக் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகார அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த 24ம் திகதி கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கருகில் 52 வயதுடைய முனியாண்டி குமாரராசா என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மறுநாள் 25ம் திகதி, கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் கிணறொன்றில் இருந்து 29 வயதுடைய பொன்னம்பலம் சிவகரன் எனும் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

(“தொடரும் மர்ம மரணங்கள் ? குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் !” தொடர்ந்து வாசிக்க…)