ஹெரோயின், கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா கலந்த கோப்பிப் பொடிகள் அடங்கிய பக்கெட்டுகள், கேரளா கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் திங்கட்கிழமை (02) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் மற்றும் கஞ்சா கலந்த கோப்பிப் பொடிகள் அடங்கிய பொதிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, பாலமுனை -02 கிராமத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

(“ஹெரோயின், கஞ்சா வைத்திருந்த இருவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் முன்னாள் புலனாய்வு பொறுப்பாளர் கொழும்புக்கு மாற்றம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான பிரபா என்றழைக்கப்படும் கலைநேசன் (வயது 46), மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் (ரி.ஐ.டி) நேற்றுத் திங்கட்கிழமை (02) காலை, கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தங்களது வீட்டுக்கு நேற்றுக் காலை 6.30க்கு வந்த, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர், தனது கணவனைக் கைது செய்து அழைத்துச் சென்றதாக, அவரது மனைவி கயல்விழி தெரிவித்துள்ளார்.

(“புலிகளின் முன்னாள் புலனாய்வு பொறுப்பாளர் கொழும்புக்கு மாற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் தமிழ் மக்கள் இணைந்து நடாத்தும் மேதினம்

வருடா வருடம் கனடாவின் ரொறன்ரோவில் நடைபெற்று வரும் மே தின நிகழ்வு இம்முறையும் நடைபெற உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து நடாத்தும் மே தினம் இம்முறையும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. பத்மநாபா ஈபி ஆர்எல்டிவ், ஈபிஆர்எல்எவ் என்ற பதாகைகளில் கடந்த காலங்களில் நாம் இணைந்து பங்கு பற்றி வந்தோம். இம்முறை பத்மநாபா ஈபி ஆர்எல்டிவ் இன் புதிய கட்சி  உருவாகத்தின் பின்பு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT) என்ற அமைப்பினராகிய நாமும் நடைபெறவுள்ள மே தினத் நிகழ்வில் இணைந்தே வருகின்றோம் (மேலும்….)

வாக்களிப்போம், மக்கள் நலக் கூட்டணி.

வாட்ஸ் அப் வலம்! இன்றைய தலைமுறை தங்கள் தாய் தந்தையரிடம் இதற்கு விளக்கம் கேட்க வேண்டும். அப்பா, அம்மா, ஏன் இப்படி ஊழல் ஆட்சியை உங்கள் காலம் முழுவதும் காப்பாற்றி வந்தீர்கள்? வாருங்கள், மாற்றுவோம். வாக்களிப்போம், மக்கள் நலக் கூட்டணி.
******
1977. எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். ‘உடன் பிறப்பே…பார்த்தீரா. நடிகரின் ஆட்சியை. நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்’ என்று கடிதம் தீட்டியிருந்தார்.

(“வாக்களிப்போம், மக்கள் நலக் கூட்டணி.” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, – கிழக்கு இணைப்பு என்பது பிரிவினைவாதத்திற்கே வழிகோலும் – சுவாமிநாதனின் புதிய கண்டுபிடிப்பு

வடக்கு கிழக்கு இணைப்பு, தனி மாநிலம் எனக்கூறி தமிழ், சிங்கள மக்களிடையே மீண்டுமொரு பிரிவினைவாதத்தை அரசியல்வாதிகள் ஏற்படுத்தக்கூடாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கடந்த கால சம்பவங்களை மறந்து, சிங்கள மொழியைக் கற்றுக்கொண்டு அனைவருடனும் இணைந்து வாழக்கற்றுக் கொள்ளுமாறு முன்னாள் போராளிகளுக்கு அமைச்சர் அறிவுரை கூறினார்.

(“வடக்கு, – கிழக்கு இணைப்பு என்பது பிரிவினைவாதத்திற்கே வழிகோலும் – சுவாமிநாதனின் புதிய கண்டுபிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று காலி மேதினக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி கலந்து கொள்ளும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சக்திமிக்கதாக பலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்ததோடு,கலந்து கொண்ட கட்சிகள் அனைத்தும் காலியில் நடைபெறும் மேதினக் கூட்டத்திலும் பங்கு கொள்ளுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

(“ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று காலி மேதினக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி கலந்து கொள்ளும்.” தொடர்ந்து வாசிக்க…)

மேதினத்தில் 12 கூட்டங்கள், 16 பேரணிகள்

தொழிலாளார் தினமான மே 1ஆம் திகதியன்று 12 பிரதான கூட்டங்கள் மற்றும் 16 பேரணிகளை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கொழும்பு மற்றும் காலி ஆகிய பிரதான நகரங்களிலேயே பெரும் கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன. அதற்கு அப்பால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா, தலவாக்கலை உள்ளிட்ட நகரங்களில் கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன.

(“மேதினத்தில் 12 கூட்டங்கள், 16 பேரணிகள்” தொடர்ந்து வாசிக்க…)

புலிக்கொடி ஜெயானந்தமூர்த்தி சிங்கக் கொடியுடன்…??

2010ம் ஆண்டு இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் களமிறக்கப்பட்டு பிரதமர் பொறுப்புக்கு கனவு கண்ட திருவாளர் ஜெயானந்த மூர்த்தி அவர்கள், சிறிலங்காவில் தரையிறங்கியுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராக சனநாயக அணியென்ற பெயரில் ஒன்றை உருவாக்கியிருந்தவர் என்பதோடு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரச்சார பீரங்கியாக செயற்பட்டவர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு துரோகிப்பட்டம் கட்டி பரப்புரை செய்து தன்னை தேசியவாதியாக ஜெனீவா மேடையில் முழக்கமிட்டவர். புலிக்கொடியுடன் வெளிநாடுகளை வலம் வந்த ஜெயானந்தமூர்த்தி சிங்கக் கொடி பிடிக்கத் தயாராகி விட்டார் காத்திருங்கள் களத்திற்காக

மூத்த மகனை கருணா குழுவும், மற்ற இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்

“மூன்று பிள்ளைகளையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் இருக்கின்றேன்” கண்ணீருடன் தாய் சாட்சியம்

மூத்த மகனை கருணா குழுவும், மற்ற இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர். தனது மூத்த மகனை கருணா குழுவும் ஏனைய இரண்டு மகன்களையும் புலிகளும் பிடித்துச் சென்றனர். இன்று மூன்று பிள்ளைகளையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் இருக்கின்றேன் என பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த சோமசுந்தரம் ஜெயமேரி எனும் தாய் கண்ணீருடன் சாட்சியமளித்துள்ளார்.

(“மூத்த மகனை கருணா குழுவும், மற்ற இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரி- ரணில் ஆட்சியும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை

 

இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் மே தின அறிக்கை

இலங்கையின் அனைத்து தொழிலாளர்களும், விவசாயிகளும், அடக்கப்படும் தேசிய இனத்தவர்களும், சமூகத்தினரும், சமூகப் பிரிவினரும் இருந்த சில உரிமைகளையும் இழந்து தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் பல விதமான சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவனவாக அறியப்படும் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும் தம்மளவில் சீரழிந்தும் ஆளும் வர்க்கத்தினரின் நடவடிக்கைகளால் பலமிழந்தும் காணப்படுகின்றன. மறுபுறத்தில் இலங்கை முதலாளி வர்க்கத்தினர் வெளிநாட்டு, சர்வதேச முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சேவகம் செய்து தம்மை தக்க வைத்துக் கொள்ளும் நிலையிலேயே இருக்கின்றனர்.

(“மைத்திரி- ரணில் ஆட்சியும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை” தொடர்ந்து வாசிக்க…)