“சின்ன மாமியே” புகழ் கமலநாதன் மாஸ்டர்!

சின்ன மாமியே பாடலுக்குச் சொந்தக் காரரான கமலநாதன் மாஸ்டர் காலமான செய்தியை அறிந்தேன். அன்னாருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். ஒரு காலத்தில் இன்னாரின் பிள்ளை இவர் என்று சொல்லப்படும் பிள்ளை பிரபலமானதும் அப் பிள்ளையின் தாய் தான் இவர், தந்தை தான் இவர் என்று மாறுவது இன்றைய உலக வழமை. ஊடகத்துறையில் ஒலிபரப்புத்துறையில் என்னுடன் பணியாற்றிய இளம் ஒலிபரப்பாளர் ஒருவரின் குடும்பத்தில் நான் கண்ட சமூக அனுபவம் இது. எமக்குத் தெரிந்த விளையாட்டுத்துறையில் பிரபலமான கமலநாதன் மாஸ்டரை பொப் பாடல் சின்ன மாமியே புகழ் கமலநாதன் மாஸ்டர் என்று சொல்லவேண்டிய நிலைக்கு ஊடக ஜனரஞ்சகம் நம்மை மாற்றியுள்ளது. அவர் பிறந்த வதிரிக் கிராமத்திற்கு அயல் கிராமமான கரவெட்டியில் பிறந்து வளர்ந்து அக் கிராமத்துடனும் இணைந்து வாழ்ந்தவன் என்ற வகையில் அவருடைய பிரிவில் சில குறிப்புக்களை இங்கு பகிர விரும்புகிறேன்.

(““சின்ன மாமியே” புகழ் கமலநாதன் மாஸ்டர்!” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம் – வடமாகாண சபை

இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவசர பிரேரணையாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.

(“புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம் – வடமாகாண சபை” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கத்தின் ஆக்கத்துக்கு முட்டுக்கட்டை இடமாட்டோம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பின் ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், இது ஆரம்பம் என்பதால், முக்கியமானதாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த விவகாரத்தையிட்டு, முன்வைத்த காலை அரசாங்கம் பின்வைக்கக்கூடாது. அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரிசனையை, பிற்போக்குவாதிகள் தங்களுக்குச் சாதகமாக்குவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கோரியுள்ளது.

(“அரசாங்கத்தின் ஆக்கத்துக்கு முட்டுக்கட்டை இடமாட்டோம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வெலிக்கடைச் சிறையில் ஞானசார தேரர்

பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகம் அல்லோல கல்லோலப்பட்டது. நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிடிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்ததையடுத்து, கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

(“வெலிக்கடைச் சிறையில் ஞானசார தேரர்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க பிள்ளையார் களத்தில்!

 

யாழ். இராசாவின் தோட்டம் வீதியில் பொறுப்பற்ற விதமாக கழிவுகளை கொட்டிவந்த பொறுப்பற்ற மக்களை திருத்த பிள்ளையாரே களத்தில் இறங்கிவிட்டார். சூழலை பாதுகாக்க சட்டங்களால் முடியவில்லை. சாமிகளால் முடிகிறது…..?. குங்குமம் பொட்டர் விக்னேஸ்வரனின் ஐடியாவோ….?(குடாநாட்டான்)

காணாமற் போனோர் உறவுகளை மிரட்டிய சிவாஜிலிங்கம்!

தமிழ் மக்கள் ஏதாவது ஓர் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் நடத்தினால் ஓடிவந்து அங்கிருந்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதில் சிவாஜிலிங்கம் முதல்வர்! மாவீரர்கள் தினம் வந்துவிட்டால் கோவிலுக்குப் போகும் இதர பக்தர்களுடன் போவிலுக்கு மூன்று பேருடன் நுழைந்து, கற்பூரம் பொளுத்திவிட்டு, அதனைப் படம் பிடித்து, மாவீரர் தினம் கொண்டாடியதாக கதை விடும் இவர், காணாமற்போனோரது உறவுகள் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இதுவரை அழையா விருந்தாளியாக தலைகாட்டி வந்தார். இவர் போன்ற சிலர் இடையில் கலந்துகொண்டு, அரசியல்லாபம் தேடிக்கொள்வதால் தங்களது கோரிக்கைள் எடுபடாததை உணர்ந்த காணாமற்போனவர்களது உறவினர்கள், இவருக்குத் தெரியாமல் நேற்றைய தினம் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை யாழ் பஸ் நிலையத்தில் ஆரம்பித்திருந்தனர். இதனை சற்றும் எதிர்பார்த்திராத சிவாஜிலிங்கம், அதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு தொலைபேசி எடுத்து, ‘எனக்கு சொல்லாமல் ஏன் இதனை செய்தீர்கள்? ஏதாவது பின்விளைவுகள் வந்தால் யார் பொறுப்பு? இனிமேல் என்னிடம் சொல்லாமல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது’ என மிரட்டியுள்ளார். அரசியலில் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் பாருங்கள்!

நீடித்து நிலைக்கும் தட்டிவான் பயணம்!

 

உலகமயமாக்கலிலும் மாற்றமுறாது தொடரும் பருத்தித்துறை – கொடிகாமம் தட்டிவான் பயணம் காலமாற்றம் காணாதது. இயற்கை காற்று உடலை தழுவும். அதில் கலந்துவரும் புழுதி மண் வாசனை புத்துணர்ச்சி தரும். இந்த இயற்கை இன்பம் சொகுசு வாகன பயணத்தில் கிடைக்குமா? கோடைகாலத்து குளிரூட்டி எம் மண்ணின் பருவகால காற்று. மாரி காலத்தில் உடலை சூடேற்ற பயணிகளை நெருக்கி அடையும் நடத்துனர். தட்டிவானுக்கு ஏசி தேவை இல்லை. ஹீற்றர் போடும் அவசியம் இல்லை இயற்கையோடு வாழ்ந்து ஓசோன் படலத்தை பாதுகாக்கும் எம் பயணத்தை ஒரு தடவை ஊர் வந்து அனுபவி புலம் பெயர் தமிழா!

(Ram)

அதிசயம் ஆனால் உண்மை!

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான,ஆச்சர்யமளிக்கும், நிகழ்வுகள் சில, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

(“அதிசயம் ஆனால் உண்மை!” தொடர்ந்து வாசிக்க…)

தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவிகளின் மரணம். மூன்று மாணவிகளும் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதம் தற்போது சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காலேஜில நாங்க படிச்சத விட வேலை பார்த்ததுதான் அதிகம் என்றும் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

(“தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!” தொடர்ந்து வாசிக்க…)