மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இயங்கும் கூட்டு எதிரணியுடன் கைகோர்க்கவுள்ளதாக தெரியவருகிறது. மக்கள் சேவகர்கள் கட்சியை ஸ்தாபித்த அமரசிங்க, தினேஷ் குணவர்தன மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளுடன் அண்மையில் பேசியுள்ளார். அச்சந்திப்பில், கூட்டு எதிரணியுடன் சேர அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இவர், கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி, புதிய கட்சியைத் தோற்றுவித்தார். அத்துடன் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்படுவதற்கு அவர், ஏற்கெனவே இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Category: செய்திகள்
வினயமான வேண்டுகோளை ஏற்றார் விக்னேஸ்வரன்!
வட மாகாணசபை பேரவைத்தலைவர் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கடந்த 18-01-2016 திகதி நடத்திய ஒன்றுகூடலின் பின் முதல்வரிடம் கலந்துரையாட வேண்டிய மூன்று விடயங்கள் சம்மந்தமாக 20-01-2116 திகதி நேரம் ஒதுக்கி தரும்படி அவர்களால் வினயமாக விடப்பட்ட கோரிக்கையை முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்று அவர்கள் கேட்டுக்கொண்டபடி 20-01-2016 திகதி மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளார்.
(“வினயமான வேண்டுகோளை ஏற்றார் விக்னேஸ்வரன்!” தொடர்ந்து வாசிக்க…)
வெற்றிலை சின்னத்தில் சு.க போட்டியிடும்
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் சகலரையும் ஒன்றிணைத்து ஐ.ம.சு.முவின் வெற்றிலைச் சின்னத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சு.க போட்டியிடுமென அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். சு.கவில் பிளவை ஏற்படுத்தினால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் சு.கவில் உள்ளவர்களுக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
(“வெற்றிலை சின்னத்தில் சு.க போட்டியிடும்” தொடர்ந்து வாசிக்க…)
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் விவாதம் நடக்காது
புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளைத் தொடக்குதல் மீதான தீர்மானத்தை எடுப்பதற்கான விவாதம் எதிர்வரும் 26ஆம் திகதியன்று இடம்பெறாது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தீர்மானத்தை எடுப்பதற்கான விவாதத்தை எதிர்வரும் 26ஆம் திகதியன்று நடத்துவதற்கு, முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதனை ஒத்திப் போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, அடுத்தவாரம் வேறுவிடயங்கள் நிரலிடப்பட்டுள்ளன. இவற்றுள் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் தாக்குதலும் அடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(“புதிய அரசியலமைப்புத் தொடர்பில் விவாதம் நடக்காது” தொடர்ந்து வாசிக்க…)
சு.கவுக்குள் பிளவு…?
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுப்பதற்கு அவசரமாக கட்சியின் மத்திய குழுவை இவ்வாரம் கூட்டுவதற்கு கட்சி தீர்மானித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிருப்தியாளர்கள் எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தனியான முன்னணியில் போட்டியிடப்போவதாகக் கூறியிருந்தனர். தாமரைச் சின்னத்தில் ‘புதிய சுதந்திரக் கட்சி’ என்ற பெயரில் இவர்கள் போட்டியிடுவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டிருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் விக்னேஸ்வரனை சந்திக்க வினயாமான வேண்டுகோள்!!!
அதிகார பகிர்வு சம்மந்தமாக சுவிற்சலாந்து, தென்னாபிரிக்க பிரதிநிதிகளுக்கும் வட மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையேயான கலந்துரையாடல் நேற்று 18-01-2016 இடம்பெற்றது. இதன்போது அமர்வு முடிவின் பின்னர் தமக்குள் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி சில விடயங்களை முடிவெடுக்க அனைத்து உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் பேரவை தலைவர் அமைச்சர்கள் உட்பட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்த பின் கௌரவ முதலமைச்சருக்கு ஒரு வினயமான வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
(“முதல்வர் விக்னேஸ்வரனை சந்திக்க வினயாமான வேண்டுகோள்!!!” தொடர்ந்து வாசிக்க…)
இன்று பேரவை கூடுகிறது! கொழும்பில் இருந்து சட்டத்தரணிகள் வருகை!
முதலமைச்சரை இணைத்தலைவராக கொண்ட தமிழ் மக்கள் பேரவை இம்மாத இறுதியில் உத்தேச தீர்வுத்திட்ட வரைபை வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் திங்கள் [18-01-2016] கூடும் பேரவை அமர்வில் சட்ட ஆலோசனை வழங்க கொழும்பில் இருந்து இரண்டு சட்டத்தரணிகள் இன்று யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இலிகிதராக பணிபுரிந்து பின்னர் சட்டத்தரணியாகி கடந்த பத்து வருடங்களாக மூத்த சட்டவாளர் திரு சுரேந்திரன் அவர்களின் கீழ் பணிபுரியும் திரு நடராஜா காண்டீபன் மற்றும் மூத்த சட்டத்தரணி சி வி விவேகானந்தனின் மகனும் மூத்த சட்டவாளர் திரு சேதுகாவலரின் கீழ் பயின்றவருமான சட்டத்தரணி திரு புவிதரன் அவர்களுமே யாழ் வந்துள்ளனர்.
(“இன்று பேரவை கூடுகிறது! கொழும்பில் இருந்து சட்டத்தரணிகள் வருகை!” தொடர்ந்து வாசிக்க…)
அப்பாவிகளை கொலை செய்த பிரபாகரன் உங்களுக்கு வீரரோ! – கருணா
பல அப்பாவிகளை கொலை செய்த பிரபாகரன், உங்களுக்கு வீரரா?.. என்னை ரவிராஜின் கொலையில் முடிச்சு போட முயற்சிக்காதீர்கள் என்கிறார் கருணா..! அண்மையில் சில ஊடகங்கள் ரவிராஜ் கொலையுடன் எனது பெயரையும் இணைக்கலாம் என சிந்திக்கின்றார்கள், உண்மையிலேயே இதுபோன்ற அரசியல் கொலைகளை எதிர்த்தவன் நான், துரையப்பா முதல் நீலம் திருசெல்வம் வரை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்த போது இயக்கத்துக்குள்ளயே எதிர்ப்பை காட்டியவன் நான் என்கிறார் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன்.
(“அப்பாவிகளை கொலை செய்த பிரபாகரன் உங்களுக்கு வீரரோ! – கருணா” தொடர்ந்து வாசிக்க…)
டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்!
இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு நவம்பர் 1ல் 4 பேர் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டதில், வழக்குரைஞர் திருநாவுக்கரசு இறந்தார். இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த நிலையில், சென்னை மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி காவல்துறை சார்பில் கோரப்பட்டது.
(“டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்!” தொடர்ந்து வாசிக்க…)
உயிர் காக்கும் விமானப் பயணம்
விமான விபத்தின் போது பயணிகள் பாதுகாப்புடன் தப்பிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப விமானத்தை உக்ரைன் நாட்டு பொறியாளர் வடிவமைத்துள்ளார். இவரது இந்த புதிய முயற்சியால் விமான விபத்தால் உயிரிழப்புகள் பெருமளவு தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் நவீன தொழில்நுட்பங்களுடன் விமானம் தயாரிக்கப்பட்டாலும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நொறுங்கி விழுவது, மலையில் மோதி விபத்திற்குள்ளாவது, நடுவானில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து எரிவது ஆகிய எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவது அன்மைகாலமாக சகஜமாகி வருகிறது.இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.