கூட்டு எதிரணி உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற புதிய முன்னணிக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த முன்னணியின் தலைமை பொறுப்பை, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கும் பட்சத்திலேயே, அப்பதவியை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
Category: செய்திகள்
மலேஷிய விமானத்தை தேடும் குழு மற்றொரு கப்பலை கண்டுபிடித்தது
காணாமல்போன எம்.எச்.370 விமானத்தை தேடிவரும் குழுவினர் விபத்தில் மூழ்கிய 19ஆம் நுற்றாண்டு கப்பல் ஒன்றின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளனர். இந்திய சமுத்திரத்திற்கு கீழ் கடந்த கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் மனிதனால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் மர்மப் பொருளொன்று பற்றி கடலுக்கு அடியில் தேடுதலில் ஈடுபட்டு வரும் சோனார் உபகரணம் சமிக்ஞை வழங்கியது.
(“மலேஷிய விமானத்தை தேடும் குழு மற்றொரு கப்பலை கண்டுபிடித்தது” தொடர்ந்து வாசிக்க…)
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தும் அதனை இந்த நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியவில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று(15) 30 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது கடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் காணப்பட்ட ஆகக் குறைந்த விலை இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(“உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)
நான் தீவிரவாதியல்ல – சி.வி
என்னை என் கட்சியின் ஒரு பகுதியினரும் ஊடகங்கள் ஊடாக மூளை சலவை செய்யப்பட்டுள்ள வட, தென்னிலங்கையின் ஒரு பகுதியினரும் ஒரு தீவிர போக்குடையவர் என்கின்றார்கள். என்னைப் பொறுத்த வரையில் நான் தீவிரவாதியல்ல. எம் மக்களின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் ஒருவன் நான் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மீள்குடியேற்றத்துக்கான பகுதியினாலேயே விழாவில் கலந்துகொண்டேன் – மாவை சேனாதி
தேசிய பொங்கல் விழா இடம்பெற்ற ஆலயம் அமைந்துள்ள பலாலி பகுதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களின் இருப்பிடங்கள் என்பதால் இதனை நேரடியாக பிரதமரிடம் எடுத்துக்கூறவே தேசிய பொங்கல் விழா வழிபாட்டில் கலந்துகொண்டேன் என மாவை சேனாதிராசா தெரிவித்தார். 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இடங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனை விடுவிக்க ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நாம் ஏற்கெனவே வலியிறுத்தியுள்ளோம். இந்த நில விடுவிப்புக்காக நாம் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். எனினும், இன்னமும் முழுமையாக விடுவிக்கபடவில்லை. இப்போது தான் பகுதி பகுதியாக விடுவிக்கின்றனர். இவை முழுமையாக விடுவிக்கபடவேண்டும்.
(“மீள்குடியேற்றத்துக்கான பகுதியினாலேயே விழாவில் கலந்துகொண்டேன் – மாவை சேனாதி” தொடர்ந்து வாசிக்க…)
பட்டம் விடுவோம்…
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் மாபெரும் இராட்சத பட்டங்கள் ஏற்றும் போட்டி வெள்ளிக்கிழமை (15) மாலை இடம்பெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் பட்டப்போட்டிகள் வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் இடம்பெற்றது. இந்த பட்டப்போட்டியில் பல வடிவங்களை கொண்ட இராட்சத பட்டங்களை போட்டியாளர்கள் வானில் பறக்க விட்டனர்.
அத்து மீறல்களும் இனத் துவேசிகளும்
ஜெர்மனி கெல்ன் (Köln) நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நடந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான சர்ச்சை இன்னமும் தொடர்கின்றது. ஜெர்மனியில் மட்டுமல்லாது, பிற ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஊடகங்களில் விவாதிக்கப் பட்டு வருகின்றது.
கருணாவின் தொடர்பினால் ரவிராஜ் கொலை தகவல்களை மறைத்தேன்
அந்த காலகட்டத்தில் இருந்த அரசின் புலனாய்வுப் பிரிவின் கருணா அம்மான் தரப்பினருடன் தொடர்புகள் வைத்திருந்ததால் ராவிராஜ் கொலை தொடர்பான தகவல்களை மறைத்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான விசாரணையின் போது அரச சாட்சியாளரான முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் கொன்ஸ்டபிள் பீரித்தி விராஜ் நேற்று கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் திலினி கமகே முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது தெரிவித்தார். குறுக்கு விசாரணையின் போது பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். நீதிமன்றத்தில் பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி இங்கு முதலாவது சாட்சியாளரான விஜேவிக்ரம மனம்பேரி பீரித்திவிராஜ் என்பவரிடம் இவ்வாறு குறுக்கு விசாரணை செய்தார்.
(“கருணாவின் தொடர்பினால் ரவிராஜ் கொலை தகவல்களை மறைத்தேன்” தொடர்ந்து வாசிக்க…)
VAT, NBT வரிகள் இடை நிறுத்தம்
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன பாராளுமன்றில் அனுமதி பெறும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறித்த வரிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன பாராளுமன்றில் அனுமதி பெறும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறித்த வரிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய முகாமை அகற்றக்கோரி பிரேரணை
முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர் பிரிவின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமை அகற்றி, அந்தக் காணிகளை மக்களுக்கு வழங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரேரணையொன்று, வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நிறைவேற்றப்பட்டது.