சிரிய அகதிகளை பொறுப்பேற்கும் நாடுகள் தொடர்பாக, வலதுசாரிகள் ஒரு முக்கியமான நாட்டை மறைப்பதைக் கவனித்தீர்களா? எதற்காக “முஸ்லிம் நாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை?” என்று கேட்டு பொங்கி எழும் வலதுசாரிகள் யாரும், இஸ்ரேல் மீது குற்றஞ் சாட்டவில்லை! அதிசயம்! அதிசயம்!! அதிசயம்!!! வலதுசாரிகளின் (போலி) “மனிதாபிமான உணர்ச்சி” மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்ரேல் சிரியாவின் எல்லையில் உள்ள அயல் நாடு. “மத்திய கிழக்கின் ஒரேயொரு ஜனநாயக நாடு” என்று, அடிக்கடி தற்பெருமை அடிக்கும் நாடு. முன்பொருதடவை, போரில் காயமடைந்த, இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த நாடு. அது மட்டுமல்ல, ஏற்கனவே ஆயிரக் கணக்கான சிரிய பிரஜைகள், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்று பிரதேசத்தில் வாழ்கிறார்கள். இத்தனை “பெருமைகளுக்குரிய” இஸ்ரேல், எதற்காக ஒரு சிரிய அகதியை கூட ஏற்றுக் கொள்ளவில்லை? “ஒரு மிகச் சிறிய நாடான இஸ்ரேலால் அது முடியாத காரியம்” என்று பிரதமர் நெத்தன்யாகு காரணம் கூறுகின்றார். அப்படியானால், அண்ணளவாக இஸ்ரேல் அளவு பரப்பளவு கொண்ட மிகச் சிறிய நாடான லெபனான், இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதே? அது எப்படி? (Kalaiyarasan Tha)
Category: செய்திகள்
டக்ளஸ் தேவா, தொண்டா ஆகியோருக்கும் அமைச்சுப் பதவி?
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கின்றது என்று பிரபல ஆங்கில செய்தித் தளங்களில் ஒன்றான எக்கனமினெக்ஸ்ற் செய்தி பிரசுரித்து உள்ளது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் மலிக் சமரவிக்கிரம சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்கின்றார், டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் அமைச்சுப் பதவி பெறுகின்றனர் என்று இப்பத்திரிகையின் அரசியல் நிருபர் எழுதி இருக்கின்றார். இச்செய்தியை உறுதிப்படுத்த டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரை தொடர்பு கொண்ட போதிலும் முடியாமல் போய் விட்டது.
ஜூலிஸ் பூசிக்கின் – தூக்குமேடைக் குறிப்பு
பாசிச – நாசிச இனவெறியாளன் ஹிட்லரினால், பேர்லின்- பான்கிராட்டஸ் சிறையில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட நாள் இன்று – 08.09.1943. சித்திரவதை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு ,கொலைக் குழிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர்களையும், புதல்விகளையும், கணவர்களையும், குழந்தைகளையும், தாய் – தந்தையர்களையும் இழந்த – அவர்களைத் தேடி அழைந்த, ஆயிரக்கணக்கான எம்மைப்போன்றே அன்று, பாசிச ஜேர்மனிய இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட தன் துணைவனை தேடி அலைந்த அகுஸ்தினா பூசிக்கு கிடைத்தது, ஜூலிஸ் பூசிக் எழுதிய இக் குறிப்புக்கள் மாத்திரமே. என் விடுதலைப் போராட்ட காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பலலரும் வாசித்த ‘தூக்குமேடைக் குறிப்பும்”, ‘வால்காவிலிருந்து கங்கைவரை’, ‘தாய்’ ஆகிய இவ் மூன்றுமே கூடுதலாக இடம்பெற்றிருந்தன.
மாவை சேனாதிராசா
அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தனது 5 வருட சம்பளம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தமது 45 ஏக்கர் காணியை பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஆனால் உங்கள் தலைவர் சம்பந்தர் அய்யா தனது காணியில் குடியிருக்கும் லிங்கா நகர் ஏழை மக்களுக்கு அவ் காணியை வழங்க மறுப்பதுடன் அவர்களை அங்கிருந்து விரட்ட முயல்கிறாரே? இது என்ன நியாயம்? நீங்கள் மக்களுக்கு உங்கள் சம்பளம், சொத்து எதுவும் வழங்க வேண்டாம். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கணக்கு விபரங்களை மக்கள் முன்வைத்தாலே போதும். அதையாவது செய்வீர்களா?
(Ponniya Rasalingam)