காணிகள் விடுவிப்புக்கு த.தே.கூ வரவேற்பு

வலிகாம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தினரின் வசமிருந்த 701 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களின் மீள்குடியேற்றத்துக்கென அரசாங்கம் விடுவித்துள்ளமையை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று(31) தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், விடுக்கப்படாத காணிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். விடுவிக்கப்படக் கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்திருந்தார்.

(“காணிகள் விடுவிப்புக்கு த.தே.கூ வரவேற்பு” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பு – மு.கா. பேச்சு: அழைப்பைப் புறக்கணித்தனர் செல்வமும் சித்தார்த்தனும்!

த.தே.கூட்டமைப்புக்கும் மு.காங்கிரஸுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொள்ள அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), த.சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) ஆகியோருக்கு அழைப்பு விடுத்த போதும் வரவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு அறிவிக்காமல் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(“கூட்டமைப்பு – மு.கா. பேச்சு: அழைப்பைப் புறக்கணித்தனர் செல்வமும் சித்தார்த்தனும்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவை துரோகிகள்- எதிரிகள் கூட்டு -செய்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மறுப்பு

எதிரிகள்- துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுலை இயக்கம் (ரெலோ) ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அந்த இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரெலோவின் தலைமைக் குழுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

(“தமிழ் மக்கள் பேரவை துரோகிகள்- எதிரிகள் கூட்டு -செய்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மறுப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்கிறது- சித்தார்த்தன் மறுக்கிறார்.

தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்க முடியாது. கூட்டமைப்பே கேட்க முடியும் அவ்வாறு கேட்டால் அதற்கான விளக்கத்தைக் கொடுப்பேன் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

(“தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்கிறது- சித்தார்த்தன் மறுக்கிறார்.” தொடர்ந்து வாசிக்க…)

உயர் பாதுகாப்பு வலயம் விடிவிப்பு

யாழ்ப்பாணம்- உயர்பாதுகாப்பு வலயம் 2ம் கட்டமாக வலி,வடக்கு மற்றும் வலி,கிழக்கு பகுதிகளில் மொத்தமாக 701.5 ஏக்கர் நிலம் நேற்றைய தினம் 29.12.15 மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட் டிருக்கின்றது. வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி,கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233 ஏக்கர் நிலமும் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கலப்பு முறையில் ஜூனில் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் 2016
கலப்பு முறை
தொகுதி வாரி முறை
விகிதாசார முறை
விருப்பு வாக்கு
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் நடைபெறும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

(“கலப்பு முறையில் ஜூனில் மாகாண சபைத் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)

மீனவர்கள் நிவாரணம்: ரூ.1,000 ‘லபக்’கிய அதிகாரிகள்

சென்னையில், வெள்ளத்தில் சிக்கித் தவித்தோரை, படகு மூலம் மீட்டதற்காக, மீனவர்களுக்கு தரப்பட்ட உதவித்தொகை, 5,000 ரூபாயில், அதிகாரிகள், 1,000 ரூபாயை ‘லபக்கி, 4,000 ரூபாய் மட்டும் வழங்கி வரும் அதிர்ச்சி தகவல், வெளியாகி உள்ளது. சமீபத்திய கனமழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தோரை படகு மூலம் மீட்க, மீன்வளத் துறை அதிகாரிகள், காசிமேட்டில் துவங்கி, மாமல்லபுரம் வரை வசிக்கும் மீனவர்களுக்கு, ஒரு படகுக்கு, 5,000 ரூபாய் வீதம், உதவித்தொகை நிர்ணயம் செய்து மீட்பு பணியில் களமிறக்கினர். ஆனால், வழங்கப்பட்ட உதவித்தொகை யில், 1,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதாககுற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

(“மீனவர்கள் நிவாரணம்: ரூ.1,000 ‘லபக்’கிய அதிகாரிகள்” தொடர்ந்து வாசிக்க…)

கொழும்பில் சிறப்பாக நடந்த ஹீலர் பாஸ்கரின் செவி வழி தொடுகை சிகிச்சை பயிற்சி முகாம்!

இலங்கை வந்து உள்ள உலக பிரசித்தி வாய்ந்த செவி வழி தொடுகை சிகிச்சை நிபுணர் ஹீலர் பாஸ்கர் கடந்த வாரம் கொழும்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தினார். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற இச்சிகிச்சை முகாமில் நூற்றுக் கணக்கான நோயாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இம்முகாம் வரப்பிரசாதமாக அமைந்தது. இதே போல எதிர்வரும் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் துர்க்கா மணி மண்டபத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் ஒன்றை நடத்துகின்றார் ஹீலர் பாஸ்கர். ஆர்வலர்கள் 0773023492 என்கிற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு விபரங்களை அறிய முடியும்.

சென்னையில் காற்று விற்பனை

120 முறை சுவாசிக்கும் ஒட்சிசன் குடுவையின் விலை 975 ரூபா இந்தியாவில் முதல் முறையாக துாய்மையான ஒட்சிசன் எனப்படும் பிராண வாயு குடுவை விற்பனைக்காக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை, எழும்பூரில் இனவேட்டிவ் என்ற தனியார் நிறுவனம் ஒட்சிசன் குடுவைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஒரு குடுவையில் 120 முறை சுவாசிக்கும் அளவிற்கான 99.6 சதவீதம் துாய்மையான ஒட்சிசன் நிரப்பப்பட்டு உள்ளது. எளிதாக அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் உள்ள அந்த குடுவையின் விலை 975 ரூபாயாகும்.

(“சென்னையில் காற்று விற்பனை” தொடர்ந்து வாசிக்க…)

ஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்!

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்து காத்திருக்கின்றார் தமிழ் இளைஞன் ஒருவர். எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் ஐ. நா. செயலாளர் நாயகமாக வருவார் என்று இவர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார். அதாவது மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக இப்பதவியை அடைந்து விடுவார் என்றார். இவர் இப்போது இலங்கை வந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இவரை எதிர்வரும் வியாழக்கிழமை சந்திக்க முடியும்.

(“ஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்!” தொடர்ந்து வாசிக்க…)