இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி – கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

(“இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்’

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனே காரணமாகும். ஆனால் இந்த அமைப்பு கூட்டமைப்புக்கு குடைச்சல் கொடுக்கும் அமைப்பு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.இது குறித்து அவர் திங்கட்கிழமை (21) தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘தமிழ் மக்கள் பேரவை உருவாக சம்பந்தனே காரணம்’” தொடர்ந்து வாசிக்க…)

ஜோசப் பரராசசிங்கம் கொலை ஏன்? கருணா விளக்கம் !!!

மட்டக்களப்பு போராளிகளை உலகம் முழுக்க சென்று விமர்சனம் செய்ததின் விளைவுதான் பரராசசிங்கம் கொலை. யோசப் பரராசசிங்கம் மட்டுமல்ல நாம் பிரிந்த பிற்பாடு இந்த கலாச்சாரத்தை தொடக்கியவர்வள் புலிகள். ராஜன் சத்தியமூர்தியை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இரக்கம் இல்லாமல் சுட்டு கொன்றார்கள். அவரின் முகம் சாப்பாட்டு பிளேட்டில் சாய்ந்து கிடந்தது. இதை போல் எதுவித தவறும் செய்யாத அப்பாவி கிங்ஸ்லி ராசநாயகத்தை புலிகள் கொன்றார்கள். இதற்கெல்லாம் யார் அஞ்சலி செலுத்தப் போகின்றீர்கள்?

(“ஜோசப் பரராசசிங்கம் கொலை ஏன்? கருணா விளக்கம் !!!” தொடர்ந்து வாசிக்க…)

கடவுள் காப்பாற்ற மாட்டார்! -நாசர்

இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது.. இந்த பத்து நாட்கள் எனக்கு கிடைத்த மன நிறைவு மெக்காவிற்கு சென்றாலும் எனக்கு கிடைக்காது.
(இளைஞர்களின் பலத்த கைதட்டல் ஆரவாரத்துக்கிடயே கறுப்புடை அணிந்து நடிகர் நாசர் அதிரடி)

தமிழக அரசின் பதிவுத்துறை-ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(oferr) இணைந்து நடாத்திய திருமணப்பதிவு முகாம்

தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 19.12.15 அன்று திருமணப்பதிவு முகாம் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையின் உத்தரவுக்கிணங்க பதிவுத்துறையினர் மற்றும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தினர் இணைந்து நடாத்தினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள நான்கு முகாம்களில் இந்த திருமணப்பதிவு முகாம் நடைபெற்றது.

(“தமிழக அரசின் பதிவுத்துறை-ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம்(oferr) இணைந்து நடாத்திய திருமணப்பதிவு முகாம்” தொடர்ந்து வாசிக்க…)

உதயமானது .. ‘தமிழ் மக்கள் பேரவை’

 

தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர். குறித்த அமைப்பினது அங்குரார்ப்பணம் யாழ். பொது நூலகத்தில் சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி இரவு 9 மணி வரையில் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசு கட்சியின் உப தலைவர் சீ.கே. சிற்றம்பலம், வட மாகாண சபை உறுப்பினரும் புளெட் அமைப்பினை சேர்ந்தவருமான க.சிவநேசன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சமயவாதிகள், மருத்துவர்கள் என 30 பேர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

(“உதயமானது .. ‘தமிழ் மக்கள் பேரவை’” தொடர்ந்து வாசிக்க…)

கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது – சிவநேசதுரை சந்திரகாந்தன்

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினாருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்(16)ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் போது அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

(“கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது – சிவநேசதுரை சந்திரகாந்தன்” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண சபையில் ரெலோவுக்கும், ஈ.பி.டி.பிக்கும் இடையே மோதல்…..!

டக்ளஸ் தேவானந்தா வட மாகாண சபை குறித்து தெரிவித்த கருத்தினால் பெரும் கருத்து மோதல் ஏற்பட்டது. வடக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதம் இன்றையதினம் இடம்பெற்றது. மீன்பிடி அமைச்சின் மீதான இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், முதலமைச்சர்கள் சொகுசு வாகனங்களில் திரிகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடக்கு மாகாண சபை ஊழல் புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்று சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

(“வடமாகாண சபையில் ரெலோவுக்கும், ஈ.பி.டி.பிக்கும் இடையே மோதல்…..!” தொடர்ந்து வாசிக்க…)

அழுத்தம் கொடுத்த நிறைவேற்று அதிகார யுகத்தை மாற்றியமைத்துள்ளோம் – ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரம் சட்டவாக்கத்திற்கும் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுத்த யுகத்தை மாற்றியமைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியலுக்கு நீதித்துறை பணியாததால் பிரதம நீதியரசரையே 48 மணித்தியாலத்தில் பதவியிலிருந்து தூக்கியெறிந்த யுகம் மாற்றப்பட்டு அனைத்துத் துறைகளிலும் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

(“அழுத்தம் கொடுத்த நிறைவேற்று அதிகார யுகத்தை மாற்றியமைத்துள்ளோம் – ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)

குமார் குணரத்னத்தின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, நாட்டில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டப்பட்டிருந்த இவர் கேகாலை, அருகுருவெல பகுதியில் வைத்து நவம்பர் மாதம் 04ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.