யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்துக்கு மகேஸ்வரி நிதியத்தினர் வழங்கவேண்டிய 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பான விசாரணை, கோப்பாய் பொலிஸார் மற்றும் இரகசியப் பொலிஸார் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றி இறக்குவதற்காக பாரவூர்தி உரிமையாளர்கள் வழங்கிய 5,000 ரூபாய் அங்கத்துவ வைப்புப் பணம் மற்றும் ஒவ்வொரு முறையும் மணல் ஏற்றியிறக்கும் போது வழங்கிய 300 ரூபாய் சேமநிதி என 10 மில்லியன் ரூபாய் நிதியை திரும்பத் தரக்கோரி பாரவூர்தி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
(“மகேஸ்வரி நிதியத்தின் மீதான விசாரணை ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)