போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முறைப்பாடுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குழுவொன்று முன்வந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பல அரசியல்வாதிகள் கனடா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கு நடாத்திய ஆதரவு கூட்டங்களில் தெரிவித்த கருத்துகள் அடங்கிய ஒலிப்பதிவுகள் தங்களிடம் இருப்பதாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அறிவித்துள்ளனர். இதற்காக முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலரின் உதவியும் இவர்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது.
Category: செய்திகள்
பேரிடர் மேலாண்மை தோல்வி – பொன்ராஜ் வேதனை
சென்னையில் பேரிடர் நிகழ்ந்து, 48 மணி நேரமாகியும் பாதிக்கப்பட்ட மக்கள், உதவிக்காக கட்டடங்களின் மேல் காத்திருபது, பேரிடர் மேலாண்மை தோல்வி அடைந்துவிட்டதை காட்டுவதாக, முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேதனை கருத்துகள் பரவி வருகின்றன. மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், முகநுால் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
(“பேரிடர் மேலாண்மை தோல்வி – பொன்ராஜ் வேதனை” தொடர்ந்து வாசிக்க…)
முன்னாள் புலிகள் நால்வர் விடுவிப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாதுகாப்பு பிரிவினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர், அவர்களுடைய உறவினர்களிடம் நேற்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்தே அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஒருவருட புனர்வாழ்வுக்கு பின்னர் அந்த நால்வரும் விடுவிக்கப்பட்டதுடன் கணினி பயிற்சிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்த புனர்வாழ்வு முகாமில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 50 பேர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
‘சென்னை மக்களுக்கு எனது அனுதாபங்கள்’
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இந்தக் கடினமான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சென்னையில், கடந்த சில தினங்களாகப் பெய்த் கடும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், 269பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச்சைக்கொடி
தேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளது. நிதியொதுக்கீட்டு சட்டமூலமொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
(“2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச்சைக்கொடி” தொடர்ந்து வாசிக்க…)
பட்ஜெட் பாஸ்
2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.அதில், திட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய வாக்கெடுப்பின் போது 13 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
1988, 1989 சம்பவங்களை விவாதிக்க தயார்
1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கத் தயார் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க, நேற்று(02) யோசனை தெரிவித்தார். 1988, 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, அதே காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட வன்முறைகள் குறித்து விவாதிக்க தயார் என்றால், தாமும் விவாதம் மேற்கொள்ள தயார் என குறிப்பிட்டார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி குறித்த காலப்பகுதியில் அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
(“1988, 1989 சம்பவங்களை விவாதிக்க தயார்” தொடர்ந்து வாசிக்க…)
குற்றம் செய்த புலி உறுப்பினர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வு என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்க யோசனையில் இருந்து தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உதலாகம அறிக்கை வரை அனைத்து யோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தி இந்த இறுதித் தீர்மானத்தை வௌியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த அவரது நிலைப்பாடு என்ன என இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சந்திரிக்கா, சுமார் 300 பேர் வரையிலேயே உள்ளதாகவும் அவர்களை மூன்று கட்டங்களாக விடுவிக்க வேண்டும் எனவும் கூறினார்.
தெரிந்த நடிகர் தெரியாத விவசாயி- “வில்லன்” கிஷோர்
தான் சம்பாதிச்ச பணத்தில் பெங்களூர் அருகே நிலம் வாங்கி, தானே கெமிக்கல் உரங்கள் இன்றி இயற்கை விவசாயம் செய்கிறார் நம்ம தமிழ் சினிமா வில்லன் கிஷோர்.விதைக்கிற மற்றும் அறுவடை சீசனில் சினிமா வாய்ப்பு வந்தால் எனக்கு வேறு பட வேலைகள் இருப்பதாகச் சொல்லி சினிமா வாய்ப்பை தள்ளி விட்டு விவசாயம் செய்கிறார்,தன் மனைவி தனக்கு விவசாயத்தில் பேருதவி செய்வதாகச் சொல்கிறார். கம்பு, தினை,சாமை போன்ற சிறு தானியங்கள் பயிடுகிறார் 6 ஏக்கரில் பழமரங்கள் வைத்துள்ளார்.வாழை மட்டும் பயிரிடுவதில்லை,வாழைப் பழங்களின் வாசனைக்கு யானைகள் வந்து பயிர்களை அழித்துவிடுமாம்.கிஷோர் இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் தீவிர ரசிகர். விவசாயத்திற்கு_உயிர்கொடுப்போம். விஷ குளிர்பானத்தை வேரறுப்போம்.
சிறிதரன் என்றால் ஆயுதம் தாங்காத பயங்கரவாதி
அரசியல் என்பது ஓர் ஆயுதம் தாங்கிய போர்! போர் என்பது ஆயுதம் தாங்கிய அரசியல்! கனடாவில் சிறீதர அரசியல் நகர்வுகள் என்பது உண்மையில் ஆயுதம் தாங்கி போராகவும்இ போர் என்பது ஆயுதம் தாங்கி ஒரு அரசியலாகவுமே காணப்படும் சூழலில் நாம் ஆயுதம் இல்லாத யுத்தத்திற்குள் அரசியல் நடத்துகின்றோம். இதுவே இன்றைய களச்சூழல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனடாவில் தெரிவித்துள்ளார். கனடாவில் உள்ள புலன் பெயர் தமிழர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.