வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பைக் கண்டித்து அண்மையில் வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதுபோல, வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு இனச்சுத்திகரிப்பாகும். வடக்கு மாகாணசபை இதனைச் செய்யாது போனால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது. யாழ்.மாவட்டத்தில் பெரும்பான்மையினரான தமிழர்கள் தவறுகளைப் புறக்கணிக்கும் போது, சிங்களப் பெரும்பான்மையினரின் தவறுகளை அவர்களால் கண்டிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தில் உள்ள வடக்கு மாகாணசபையின் கவனத்துக்கு கொண்டு வருவீர்களா என்று, எழுப்பிய கேள்விக்கு, நான் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அல்ல. எனது பார்வையையே குறிப்பிட்டேன். அவர்களே அதனைச் செய்ய வேண்டும்” என்று சுமந்திரன் பதிலளித்துள்ளார்.
Category: செய்திகள்
சீவல் தொழிலாளர்களது வயிற்றிலடித்த டக்ளஸ்! – நடராசாவின் புதிய அவதாரம்
அனைத்திலும் ஆதிக்கம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா சீவல் தொழிலாளர்களது உழைப்பினையும் ஒட்டுமொத்தமாக சுரண்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. யாழ்.ஊடக அமையத்தினில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினில் கலந்து கொண்ட பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் க.நடராசா அதனை அம்பலப்படுத்தியுள்ளார். பனை அபிவிருத்தி சபை நிதியிலிருந்து கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுமார் ஆறுமில்லியன் வரையினில் அப்பட்டமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
(“சீவல் தொழிலாளர்களது வயிற்றிலடித்த டக்ளஸ்! – நடராசாவின் புதிய அவதாரம்” தொடர்ந்து வாசிக்க…)
மகிந்த கோட்டா முப்படையினருக்கு தண்டனை இல்லை என்றால்…
ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும்இ அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்படியாயின் எதற்கு விசாரணை? கண்துடைப்புக்கா? அல்லது…? உண்மையைக் கூறுமாறு கூறாது கூறும் நரித்தந்திரமா? தென்கிழக்காசியப் பிராந்தியத்தையே வல்லரசுகளுக்கு எதிராக வைத்து ஆட்டிய மகிந்தவுக்கா இந்தச்சமிஞ்ஞையைக் கொடுக்கிறார்கள்?
(“மகிந்த கோட்டா முப்படையினருக்கு தண்டனை இல்லை என்றால்…” தொடர்ந்து வாசிக்க…)
இரும்பு பெண்மணி’ இந்திரா காந்தி நினைவுதினம் இன்று…
நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , ‘இரும்பு பெண்மணி’, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின் முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம். ஆம், நவம்பர் 19, 1917இல் பிறந்தார் இவர். பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார்.
அவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
(“இரும்பு பெண்மணி’ இந்திரா காந்தி நினைவுதினம் இன்று…” தொடர்ந்து வாசிக்க…)
முஸ்லீம்களின் வெளியேற்றம் இனசுத்திகரிப்பா? த.தே.கூ. தலைவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும்
தேவையற்ற விடயங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு முன்னுக்கு ஓடிவரும் தலைவர் ஒருவர் முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கான பொறுப்பை ஒவ்வொரு தமிழனும் ஏற்க வேண்டுமெனக் கூறியுள்ளதுடன் இச்சம்பவத்தை இனசுத்திகரிப்பு என்று புது வியாக்கியானத்தையும் தந்துள்ள அந்த தலைவரை நான் கேட்க வேண்டிய கேள்விகள் பல உண்டு. நியாயமான பதில் தருவார் என நம்புகின்றேன். முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது இன சுத்திகரிப்பா? தமிழ் மக்களை முஸ்லீம் மக்கள் இன்றும் அன்பாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். முஸ்லீம்களை வெளியேற்றிய நிலைமையை யார் உருவாக்கினார்கள் அன்று? அப்பாவி தமிழ் மக்கள் மௌனம் சாதித்து வெளியேற்றப்பட்டவர்களுக்காக மௌனமாக அழுதார்களே அன்றி அவர்களால் வேறு என்னதான் செய்திருக்க முடியும். வாய்திறந்திருந்தால் என்னவாகியிருக்கும்?
மனவேதனை அளிக்கிறது – மஹிந்த
பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்து செல்கின்றமை தனக்கு உளத் துன்புறுத்தலாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவுக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று வியாழக்கிழமை சமுகமளித்திருந்தார்.
டேவிட் ஐயா
அரசியல் கைதிகள் விவகாரம்: சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்கவில்லை
பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து, கைதுசெய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிணை மனுவை, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக பிரதான நீதவான் அமில ஆரியசேன, நேற்று புதன்கிழமை(28) நிராகரித்தார். 18 மாதங்களுக்கு மேல் தண்டனை வழங்கப்படாமலும் விடுவிக்கப்படாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில், சட்ட ஆலோசகர் சேனக பெரேரா மற்றும் துஷார என். தசுன்ஆகியோர் சமர்ப்பித்த மனுவைக் பரிசீலித்த பின்னரே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
(“அரசியல் கைதிகள் விவகாரம்: சட்டமா அதிபரின் அறிக்கை கிடைக்கவில்லை” தொடர்ந்து வாசிக்க…)
கிங்ஸ்லி படுகொலை தொடர்பில் அரியநேத்திரனிடம் விசாரிக்க வேண்டும்…! கருணா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராஜநாயகம் படுகொலை தொடர்பில் அவருக்கு பிரதியீடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய பா.அரியநேத்திரனிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் கிங்ஸ்லி ராஜநாயகம் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தனுக்கும் தனக்கும் தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும், புலிகள் அமைப்பில் இணைந்த செயற்பட்ட காலத்தில் தொடர்பினை பேணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(“கிங்ஸ்லி படுகொலை தொடர்பில் அரியநேத்திரனிடம் விசாரிக்க வேண்டும்…! கருணா” தொடர்ந்து வாசிக்க…)
என்ன மாதிரி “கவர் ஸ்டோரி” எழுதி தமிழர்களை கவுக்கிறார்கள் பாருங்கள்- அடிகளாரின் அட்டகாசம் !
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளில் , உலகத் தமிழர் பேரவை(GTF) என்னும் அமைப்பே அதிகமாக இலங்கை அரசுடன் மறைவான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. குறித்த இந்த அமைப்பின் தலைவராக இருப்பது இமானுவேல் அடிகளார் தான். இவரை இலங்கை அரசு தற்போது உத்தியோகபூர்வமாக அழைத்துள்ளது என்றும். அவர் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் என்ற செய்திகளும் , அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சில ஊது குழல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதாவது மைத்திரிபாலவும், வெளிநாட்டு அமைச்சர் மங்களவும் ஒரு முறை இலங்கை வந்து செல்லுங்கள் என்று அடிகாளாரை அழைத்துள்ளார்களாம்.