ராட்சத விண்கல் ஒன்று நாளை பூமியைக் கடக்க இருப்பதை நாசா உறுதி செய்துள்ளது. ஆனால், இந்த விண்கல்லால் பூமிக்கு ஏதும் ஆபத்தில்லை என அது விளக்கமளித்துள்ளது. சுமார் 270 மீ சுற்றளவுடைய 2012 டிடி5 என்ற ராட்சத விண்கல்லானது நாளை பூமியிலிருந்து 50 லட்சம் மைல் தொலைவில் கடக்க இருக்கிறது.
இதனால் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்த விண்கல் குறித்து ஏற்கனவே பல்வேறு பீதிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. மோதினால் பூமி அழியும் இந்த விண்கல் பூமி மீது மோதப் போகிறது. அப்படி மோதினால், பூமியே அழிந்து விடும். மனித குலமே மண்ணாகப் போகிறது என்று தகவல் பரவி உள்ளது. இதனால், சில நாடுகளில் மக்கள் அழிவிற்கு ஆயத்தமாகத் தொடங்கி விட்டனர். கடைசி கடைசியாக பார்த்துக் கொள்ளும் அளவுக்கு மக்கள் மன நிலை போய் விட்டது. உண்மைதான், ஆனால் அழியாது இந்நிலையில், இந்த விண்கல் நாளை பூமியைக் கடக்கப் போவது உண்மை தான், ஆனா அதனால் பூமிக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அப்படியேதான் இருப்போம் இந்த விண்கல் பூமியைக் கடந்த பின்னரும் கூட பூமி அப்படியேதான் இருக்கும். நாம் தொடர்ந்து நல்லபடியாக இருப்போம் என்று நாசா விளக்கம் கொடுத்துள்ளது.
கடவுள் துகள் ஆய்வகத்தால் ஆபத்தா? அதேசமயம், கடவுள் துகள் குறித்த கண்டுபிடிப்புக்காக உருவாக்கப்பட்ட லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடர், தனது ஈர்ப்பு சக்தி காரணமாக மிகப் பெரிய விண்கல்லை பூமியை நோக்கி இழுக்கப் போவதாகவும் ஒரு பீதி கிளம்பியுள்ளது. ஆனால் இதையும் நாசா மறுத்துள்ளது
Category: செய்திகள்
சமூகத்தின் விடிவுக்காக அரசியல் செய்வோம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி வாழ்த்து!
முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக அரசியல் என்கிற படகில் பயணித்து அவரையே தியாகம் செய்தவர் தேசிய தலைவர் மர்ஹூம் ஏ. எச். எம் அஷ்ரஃப் அவர்கள், இவருடைய அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், மனிதாபிமானம், சாணக்கியம் ஆகியவற்றுடன் முஸ்லிம்களின் அரசியல் தலைமை செயற்பட வேண்டும் என இன்றைய தியாகத் திருநாளில் வாழ்த்துகின்றார் என்று தெரிவித்து உள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி. உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கைச் சட்டமாக இஸ்லாமிய சமய மார்க்கம் உள்ளது, ஈகை, தியாகம் ஆகிய உயரிய மனிதப் பண்புகள் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பு அம்சங்களாக விளங்குகின்றன, நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை முறை இவற்றுக்கு முன்னுதாரணமாக உள்ளது, இதனால்தான் முஸ்லிம்கள் அனைவரும் ஈகைப் பெருநாளையும், தியாகத் திருநாளையும் தவறாமல் கொண்டாடுகின்றனர், ஸ்ரீலங்கா முஸ்லிம்களை பொறுத்த வரை ஈகை, தியாகம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளமாக அரசியல் வழிகாட்டி அஷ்ரப் அவர்கள் விளங்குகின்றார் என்று ஹஜ்ச் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து உள்ள இவர் தேசிய தலைவர் அஷ்ரப் அவர்களின் ஈகை, தியாகம் ஆகியவற்றை அரசியல் தலைமை ஒருபோதும் மறக்கவோ, மரிக்கச் செய்யவோ கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
மக்காவில் நெரிசலில் சிக்கி 717பேர் பலி 805 பேர் காயம்
புனித மக்காவுக்கு அருகிலுள்ள மினா நகரில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 717ற்கும் அதிகமான ஹஜ் யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளனர். 805ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சவூதி சிவில் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. புனித மக்காவிலிருந்து 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மினா நகரிலேயே இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கையர் எவரும் பாதிக்க ப்பட்டமை தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லையென சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
(“மக்காவில் நெரிசலில் சிக்கி 717பேர் பலி 805 பேர் காயம்” தொடர்ந்து வாசிக்க…)
யாழ் மாவட்டத்தில் இரு வேறு ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாழும் முஸ்லீம்கள் இன்று இரு வேறு ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகையில் காலை ஈடுபட்டனர். இஸ்லாமிய தகவல் வழிகாட்டல் மையம் ஏற்பாடு செய்த தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் பெருநாள் தொழுகை திறந்த வெளியரங்கு உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.இதன் போது மார்க்க சொற்பொழிவு மற்றும் தொழுகை மௌலவி பைசர் மதனி தலைமையில் மேற்கொண்டதுடன் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அடுத்து யாழ் கிளிநொச்சி உலமா சபை தலைவர் மௌலவி அஸீஸ் காசிமி தலைமையில் மற்றுமொரு பெருநாள் தொழுகைகாலை7மணியளவில்ஆரம்பமானது.இத்தொழுகைஒஸ்மானியாஜின்னாமைதானத்தில்நடைபெற்றபோது மார்க்க சொற்பொழிவினை மௌலவி எம்.ஐ மஹ்மூத் பலாஹி மேற்கொண்டார்.இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அத்துடன் ஹஜ் பெருநாள் தொழுகையின் போது நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் மக்கள் சுபீட்சமடைய வேண்டீயம் பிரார்த்திக் கொண்டனா்.ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
தமிழக மீனவர்களைக் கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்
எல்லை தாண்டும் மீனவர்களை தாக்குவதில்லையெனவும் உரிய நாடுகளின் கடல் எல்லைகளில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அந்தந்த நாடுகளின் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதென்றும் இந்திய – இலங்கை அரச தரப்பு அதிகாரிகளிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. புதுடில்லியில் இடம்பெற்ற பாதுகாப்பு உயர் மாநாட்டிலே இவ் முடிவுகள் எடுக்கப்பட்டன.
(“தமிழக மீனவர்களைக் கண்டித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)
மகிந்தரின் வழியில் சீ.வி.கே அதிரடியில்….!
தமிழரசுக்கட்சியனை விமர்சித்து கேள்வி எழுப்பும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களை தடை செய்யவேண்டுமென வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரியுள்ளார்.
இலங்கையினில் வெளியிடப்படும் அனைத்து இணையங்களும் முறைப்படி பதிவு செய்யப்படுவதற்கும் அவை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்ததுவதற்கு கூடிய சட்ட ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் பதிவு செய்யப்படாத மற்றும் விதிகளை மீறும் புலம்யெபர் இணைய தளங்களை தொழில்நுடப ரீதியாக தடைசெய்யும் அதிகாரத்தை ஏற்படுத்தும் சட்ட ஏற்பாடுகளைநடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இலங்கை அரசின் புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரை கோரியுள்ளார்.
இது தொடர்பினில் வடமாகாணசபை அமர்வினில் பிரேரணையொன்றினையும் சீ.வி.கே.சிவஞானம் கொண்டுவந்திருந்தார்.
(“மகிந்தரின் வழியில் சீ.வி.கே அதிரடியில்….!” தொடர்ந்து வாசிக்க…)
சீ.வி.கே.சிவஞானத்திற்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு! விசாரணைக்குழு அமைக்க கோரிக்கை!!
வடமாகாணசபையின் பேரவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு எதிராக சுமார் 14 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்களினை கூட்டுறவு அமைப்புக்கள் எழுப்பியுள்ளன. யாழ்.மாவட்ட கூட்டுறவு கிராமியப்பணத்தை தனியார் வங்கியொன்றினில் வைப்பிலிட்டதன் மூலம் 13 கோடியே 87இலட்சத்தினை நட்டமாக அடையக்காரணமானதாக கூட்டுறவு அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. குறித்த தனியார் வங்கியினில் தனக்கான இலாபத்தை எதிர்பார்த்து பணத்தை வைப்பிலிட்டதாகவும் வங்கி முடக்கநிலையினை அடைந்ததால் வைப்பிலிடப்பட்ட பணம் இழக்கப்பட்டுவிட்டதாகவும் அவை தெரிவித்துள்ளன.இவை தொடர்பினில் விசாரணைகளை மேற்கொள்ளவும் இழக்கப்பட்ட நிதியை மீளப்பெற்று கூட்டுறவு கட்டமப்பினை வளப்படுத்த முன்வரவேண்டுமெனவும் அவை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்,உறுப்பினர்களை கோரியுள்ளன.
போர்க்குற்ற விசாரணைகளின் போது புலிகளுக்கு நிதி வழங்கியோரும் உள்ளடக்கப்படுவர்!- ஐநா பேச்சாளர்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பேச்சாளர் ரவீனா தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் சார்பில் வெளிநாடுகளில் இயங்கியவர்களுக்கும் விசாரணைகளில் ஒரு பங்காக இருப்பர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பேச்சாளர் ரவீனா சம்டாசனி தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசாங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியிட்ட அடிப்படையில் அதில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்தகட்ட பணியாக இருக்கிறது என்று ரவீனா தெரிவித்துள்ளார்.
சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து இன்று (22) யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 12 ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சேயா சதெவ்மி கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று (22) காலை யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர விரிவுரைகளை புறக்கணித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை யாழ். அளவெட்டி பகுதி இளைஞர்கள் சேயா சதெவ்மியின் கொலைக்கு நீதி கோரி தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
ஜேர்மன் மாதிரி அடிப்படையில் புதிய தேர்தல் முறைமை
ஜேர்மன் மாதிரி என இலங்கையில் பிரபலமாக சொல்லப்படுகின்ற தேர்தல் முறைமை உள்ளடங்கலான புதிய அரசியலமைப்புத் திட்டம் ஒன்று தொடர்பிலான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதன் மூலம் சிறுபான்மை சமூகங்களிடையே நீண்டகாலமாக நிலவும் மனக்குறையை தீர்க்கமுடியும் எனவும் பரந்தளவிலான பொருளாதாரதச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு உண்மையான சமவாய்ப்புள்ள சமூக பொருளாதார சந்தையை உருவாக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஜேர்மனியின் வெளிவிகார அமைச்சர் பிராங்க்-வோல்டர் ஸ்டெய்மயருடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை மேற்கொண்ட பின், நடாத்திய இணைந்த பத்திரிகையாளர் மாநாட்டிலேயே மங்கள சமரவீர இக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.