லண்டனில் தலைவிரித்தாடிய தமிழ் இளைஞர்களின் வன்முறை

லண்டனில் தலைவிரித்தாடிய தமிழ் இளைஞர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஸ்கொட்லண்ட் யாட் தனிப்படைப் பிரிவு ஒன்றையும் 24 மணிநேர தொலைபேசிச் சேவை ஒன்றையும் சிறிதுகாலம் ஒழுங்குபடுத்தி இருந்தது. அப்போது ஸ்கொட்லன்ட் யாட்டுக்கு ஆலோசணை வழங்க அவர்கள் உருவாக்கிய குழுவில் நானும் இடம்பெற்று இருந்தேன். அவ்வேளை அவர்கள் லண்டனின் 30 வரையான வன்முறைக்குழுக்களின் இருப்பிடங்களை முற்றுகையிட்டு நூறுபேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நடவடிக்கைகளில் ஒன்றுக்கு நாங்களும் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே இணைக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நடைபெற்ற வன்முறைகளின் தன்மையை ஆராய ஸ்கொட்லன்ட் யாட்டின் இருவர் கொண்ட குழு ரொறன்ரோவுக்கும் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2000 – 2005 காலப்பகுதி லண்டனில் தமிழ் இளைஞர்களின் வன்முறை அதன் உச்சத்தில் இருந்த காலகட்டம். 20 வரையான இளைஞர்கள் இந்த வன்முறை தாக்குதல்களின் போது கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். 600 வரையான தமிழ் இளைஞர்கள் இந்த வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர். ஒப்ரேசன் என்வர் நடவடிக்கையைத் தொடர்ந்து வன்முறைகள் வீழ்ச்சி அடைந்தன. இன்னும் பிரித்தானியச் சிறைகளில் 200 வரையான தமிழ் இளைஞர்கள் வன்முறை தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்று வருகின்றனர்.

(Jeyabalan Thambirajah )

அமெரிக்காவின் முதலாவது வரைவுக்கு இலங்கை எதிர்ப்பு

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வில், ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைவுக்கு, இலங்கை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில், ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் எதிர்ப்பை, ஜெனீவாவுக்கான இலங்கையின் தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க வெளிப்படுத்தினார். சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவானது, இலங்கை மீது தவறுகளுக்கான திருத்தங்களை முன்வைப்பதாகவும் முன்னரே ஆரம்பத் தீர்மானமொன்றைக் கொண்ட குணத்தையும் இலங்கை மீது வரையறை விதிப்பதாகவும் காணப்படுவதாகவும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நல்லிணக்க, மீளமைப்பு நடவடிக்கைகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காததுமாகக் காணப்படுவதாக, அவர் தெரிவித்தார்.

(“அமெரிக்காவின் முதலாவது வரைவுக்கு இலங்கை எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மயிலிட்டியில் உண்ணாவிரதம்

இடம்பெயர்ந்து 26 வருடங்களாகியும் தாங்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதை கண்டித்தும், மீள்குடியேற்றத்தை விரைந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மயிலிட்டி வாழ் மக்கள், இன்று செவ்வாய்க்கிழமை (22) மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தற்போது உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் தமது பகுதி விடுவிக்கப்பட்டு, தாங்கள் மீள்குடியமர்த்தப்படுவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளலாம் எனவும், இடம்பெயர்ந்நது தாங்கள் பல துன்பங்களைச் சந்தித்து வருவதாகவும் அந்த மக்கள் கூறினர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் பிரமுகர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் – சரத் பொன்சேகா

நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமது கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட மக்களின் மீது விடுதலைப்புலிகளே தாக்குதல் நடத்தினர். இந்த தகவல்களை அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று படையினர் விடுத்த வேண்டுகோளின் பின்னர் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். முதல் கட்டமாக 50ஆயிரம் பேர் தப்பிவந்தனர். இதன்பின்னர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே அதிகளவான மக்கள் வெளியேறினர். இந்தநிலையில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி 150, 000 பேர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.
இதேவேளை மே 14ஆம் திகதியன்று 85ஆயிரம் பேர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறினர் இதனையடுத்து மே 19இல் போர் முடிவுக்கு வந்தது என்றும் பீல்ட் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை நீதிக்கு முரணாக நடந்த மு. கா தலைவர் ஹக்கீம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் எம். பிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ள விதம் இயற்கை நீதிக்கு முரணானது என்று ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் எம். பிகள் நியமன விவகாரம் ஏற்கனவே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தேர்தல் கேட்டு தோற்றுப் போன வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் எம். பிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றமையை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிப் பிரமுகர்கள் பலரும் வழக்குத் தாக்கல் செய்து உள்ளனர்.

(“இயற்கை நீதிக்கு முரணாக நடந்த மு. கா தலைவர் ஹக்கீம்!” தொடர்ந்து வாசிக்க…)

சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 25 வது ஆண்டை அந்த ஊர் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை நினைவு கூர்ந்தனர்.
சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு. ஆண்டுகள் பல கடந்தும் இதுவரையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கவலையுடன் கூறுகின்றார்கள். 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

துப்பாக்கியால் சுட்டும், கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர் இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழுவினர் சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

(“சவுக்கடி படுகொலை 25வது ஆண்டு” தொடர்ந்து வாசிக்க…)

அரசிடமிருந்து பெற்றுக்கொண்ட மொத்த அமைச்சு பதவிகள் இதுவரை ஐந்து!

புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவி, பிரதிக் குழுக்களின் தவிசாளர் பதவி ஆகியவற்றுக்கு மேலாக மாவட்ட அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஜே. ஆர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள் முறைமையை செழுமைப்படுத்தி மீண்டும் அமுலுக்கு கொண்டு வருகின்ற நடவடிக்கையில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 11 மாவட்ட அமைச்சர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 08 மாவட்ட அமைச்சர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 03 மாவட்ட அமைச்சர்களும் நியமனம் பெறுகின்றனர்.யாழ். மாவட்ட அமைச்சராக சிவஞானம் சிறிதரன், வன்னி மாவட்ட அமைச்சராக சார்ள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராக ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரே பதவி பெற்று உள்ளன. தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டால் மட்டுமே அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வோம் என இவர்கள் தேர்தலுக்கு முன்னர் மங்கம்மா சபதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

(Brin Nath with Karthigesu Nirmalan-Nathan)

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூவருக்கு அமைச்சுப் பதவி!

புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவி, பிரதிக் குழுக்களின் தவிசாளர் பதவி ஆகியவற்றுக்கு மேலாக மாவட்ட அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஜே. ஆர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள் முறைமையை செழுமைப்படுத்தி மீண்டும் அமுலுக்கு கொண்டு வருகின்ற நடவடிக்கையில் மிக தீவிரமாக ஈடுபட்டு உள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இதன்படி ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 11 மாவட்ட அமைச்சர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 08 மாவட்ட அமைச்சர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து 03 மாவட்ட அமைச்சர்களும் நியமனம் பெறுகின்றனர்.

(“தமிழ் தேசிய கூட்டமைப்பில் மூவருக்கு அமைச்சுப் பதவி!” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவின் நகல் பிரேரணை- ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு பெருகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியி டப்பட்ட இலங்கை மீதான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக் கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதனை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு சாதகமான பிரேரணையொன்றை நிறைவேற்றவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பநாளில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றும்போது குறிப்பிட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவை அமைப்பது, காணாமல் போனவர்களுக்கான அலு வலகமொன்றை நிறுவுதல், நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான அலுவலகத்தை அமைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

(“அமெரிக்காவின் நகல் பிரேரணை- ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய மீனவர்களின் கோரிக்கை கடற்றொழில் சங்கங்களால் நிராகரிப்பு

இந்திய மீனவர்கள் ரோலர் இயந்திரங்களை பயன்படுத்தி பலவந்தமாக வடக்கு கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பது தொடர்பில் இந்தியாவுக்கு சமூகமளிக்குமாறு அந்நாட்டு மீனவர் சங்கம் பிரதிநிதிகள் விடுத்திருந்த கோரிக்கையை வடக்கு கடற்றொழில் சங்கங்கள் நிராகரித்துள்ளன. இந்த கோரிக்கையை நிராகரித்தமைகான காரணம் என்ன என்பது தொடர்பில் வடக்கு கடற்றொழில் சங்கத்தின் ஆலோசகர் விநாயகமூர்த்தி சகாதேவனிடம் கேட்டபோது, மீனவர் விவகாரம் தொடர்பில் இலங்கை பிரதமரும் இந்திய பிரதமரும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையில், இந்த பிரச்சினைக்கு சாதாரண மீனவர்கள் பேச்சுநடத்தி தீர்வு காண முடியும் என்று நம்பவில்லை என்பதனால் அந்த அழைப்பை நிராகரித்தோம். இந்திய மீனவ சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள் இந்த கோரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.