யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரதனா சூத்திரதாரி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை யுத்தக் குற்றவாளியாக பார்க்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியே இந்த நாட்டுக்கு யுத்த வெற்றியை ஈட்டிக் கொடுத்தார் எனவும் அதனை எவரும் மறந்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச சமூத்தை வெற்றி கண்டுள்ளதுடன் உள்ளக விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தை இணங்கச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். யார் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் அவர்களை பாராட்ட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Category: செய்திகள்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்
சமஸ்டி பெற்றுத் தருவோம் என்று மக்களிடம் ஆணை பெற்றவர்கள் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையினால் வெளியிடப்பட்ட பிரேரணையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்துடன் திருப்தியடைந்து மௌனமாக இருப்பது ஏன் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்சார கதிரையில் ஏற்றப்பட வேண்டிய சிறிதரன் எம்.பி!
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டு உள்ள போர்க் குற்ற விசாரணை அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக சாடப்பட்டு உள்ளார். விடுதலைப் புலிகளின் ஆட்கடத்தல், கட்டாய ஆட்சேர்ப்பு ஆகியவற்றுக்கு புலி முக்கியஸ்தர் ஒருவரின் நெருக்கமான உறவினரும், அப்போது பாடசாலை அதிபருமான இவர் உதவி, ஒத்தாசை வழங்கினார் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இவர் அதிபராக இருந்து வந்த பாடசாலையின் மாணவர்களை இவரே புலிகளுக்கு காட்டிக் கொடுத்து வந்தார் என்று இதில் கூறப்பட்டு உள்ளது. இதனால் இவரின் காட்டிக் கொடுப்புகளுக்கு பயந்து பிள்ளைகளை பெற்றோர் பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் மறைத்து வைத்திருந்தனர் என்றும் இதில் உள்ளது. (“மின்சார கதிரையில் ஏற்றப்பட வேண்டிய சிறிதரன் எம்.பி!” தொடர்ந்து வாசிக்க…)
கிளிநொச்சியில் ஜனாதிபதி வட மகாண முதல் அமைச்சர்
இராணுவ முகாமுக்கு வாருங்கள் உணவருந்திச் செல்வோம் – ஜனாதிபதி மைத்திரி
இராணுவத்தை வெளியேறக் கோரும் நான் எப்படி அங்கு வந்து உணவருந்த முடியும் – முதல்வர் விக்னேஸ்வரன்.
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் அங்குள்ள படை முகாம் ஒன்றில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு உணவருந்தச் சென்ற ஜனாதிபதி வடக்கு முதல்வரையும் உணவருந்த அழைத்தார். வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றக் கோரும் நான் எப்படி அங்கு வந்து உணவருந்த முடியும் என்று கேட்டார் வடக்கு முதல்வர். அதற்கு பதலளிக்காத ஜனாதிபதி புன்முறுவலுடன் விடை பெற்றார்.
ஆனால் இந்த விழாவை ஒழுங்கமைத்ததே இராணுவம்தானே. விழா நடைபெற்ற என்னுடை கிராமம் 24 மணிநேரத்துக்கு முன்பிருந்தே அதிஉச்ச பாதுகாப்பு வலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. மகிந்தவின் விழாவுக்கும் இதற்கும் வித்தியாசம் எதுவும் இருக்கவில்லை. டிப்போ ரோட் , வில்சன் ரோட் முழுமையாக போக்குவரத்து தடுக்கப்பட்டு VIPகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். என்னுடைட வீடு உள்ள எமர்சன் ரோட் மாத்திரம் இராணுவ கண்காணிப்பின் கீழ் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு ‘”சதோச “கடையை சிம்பிளாக வந்து திறந்து வைத்துவிட்டு பொருட்கள் வாங்கிக்கொண்டு சென்ற மைத்திரி வருகிறாரா? அல்லது மகிந்த தான் வருகிறாரா என்ற குழப்பமே இங்கே கிளிநொச்சியில் பலருக்கும் வந்துவிட்டது.
பின்பு ஏன் முதல்வர் ஐயா சாப்பாட்டில் மட்டும் அரசியல் காட்டுறார்.
ஒருவேளை அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தை இந்தாள் ஒவரா பார்த்திருப்பாரோ?
(பி.கு: பத்து வருடங்களுக்கு முன்பு 2004-2005 களில் பிரபாகரன் வெளிநாட்டு ராஜததந்திரிகளை சந்திக்கவரும்போதும் இப்படிதான் புலிகளும் எனது கிராமத்தில் குவிக்கப்படுவார்கள்)
(Rajh Selvapathi)
மீண்டும் ஜப்பான் இலங்கையில் கடை விரிக்கின்றது
இலங்கை – ஜப்பான் உறவை கட்டியெழுப்ப இருநாடுகளுக்கான அமைச்சர்கள் மட்ட உயர்குழு
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் சமூக, பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முழுமையான தொடர்பாடலை வலுப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த உயர்மட்ட அமைச்சர்களையும், அதிகாரிகளையும் உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதற்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் தீர்மானித்துள்ளனர்.
(“மீண்டும் ஜப்பான் இலங்கையில் கடை விரிக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)
இந்தோனேசியாவில் இனப்படுகொலை
இந்தோனேசியாவில், பல இலட்சம் கம்யூனிச சந்தேகநபர்கள் அழிக்கப் பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவணப்படும் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இனப்படுகொலையில் பங்கெடுப்பதற்காக, கத்தோலிக்க இளைஞர்களை அணிதிரட்டிய, டச்சு – கத்தோலிக்க பாதிரியார் பற்றி அதிலே அதிக கவனம் செலுத்தப் பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த எசுயிஸ்ட் பாதிரியார் யோப் பேக் (Joop Beek) சர்வாதிகாரி சுகார்த்டோவுக்கு நெருக்கமானவராக இருந்தார். கத்தோலிக்க மாணவர்களை அணிதிரட்டி கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான இனப்படுகொலையில் பங்கெடுக்கச் செய்தார்.
புலிகளை நம்பியோர் கொல்லப்படுவார்…….?
சமாதான காலத்தில் சரிக்கப்பட்ட தோழர் சுபத்திரன்.(றொபேட்) சுபத்திரனின் தந்தையார் தம்பிராஜா இலங்கைப் பொலிசில் கடமையாற்றியவர். புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுபத்திரன் ஈ பி ஆர் எல் எஃப் என்ற காரணத்தால் அவரது குடும்பம் புலிகளால் நாடு கடத்தப்பட்டது. சுபத்திரனின் தாயார் கனடாவில் காலமானார். சமாதான காலத்தில் சுபத்திரன் புலிகளின் தளபதியான இளம்பரிதியுடன் உறவாக இருந்தார். இளம்பரிதி(முன்னாள் ஆஞ்சினேயர்) தனது ஊரை சேர்ந்தவர் என்பதால் தன்னை கொல்லமாட்டார்கள் என்று தோழர் சுபத்திரன் நம்பி விட்டார். ஆனால் புலியை நம்பியது சுபத்திரனின் தவறு. யாழ் வேம்படி மகளிரி கல்லூரிக்கு அருகாமையில் வசித்த சுபத்திரன் தந்து வீட்டு மொட்டை மாடியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வேம்படி மகளிர் கல்லூரி மாடியிலிருந்து சினைப்பர் தாக்குதல் மூலம் புலிகளால் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை நிகழ்த்தியவன் புலிகளின் யாழ் பொறுப்பாளர் ஈஸ்வரன்.
(Rahu Rahu Kathiravelu)
உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 06 பேர் மயக்கம்
கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக மூன்றம்சக் கோரிக்கையை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகளில் 06 பேர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, திருகோணமலை தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் அமைப்பின் செயலாளர் பி.தட்சாயன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (02) 04 பேரும் சனிக்கிழமை (03) 02 பேரும் மயக்கமடைந்ததாகவும் அவர் கூறினார். பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கவேண்டும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வேலை வழங்கவேண்டும், அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பட்டதாரிகள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண் கொள்ளை ஒரு தொடர் கதை
இயக்கத் தேவைகளுக்காக புளொட் அமைபின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் மண் வியாபாரம் செய்து கொண்டிருந்தனா. புலிகளும் மண் வியாபாரம் செய்தனர். புளொட் அமைப்பின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர் ரவிமூர்த்தியும், இன்னொரு உறுப்பினரும் அரியாலைக்கு மண் அள்ளச் சென்றனர். அப்போது அங்கு அங்கு வந்தார் ரிச்சார்ட். “நாம் மட்டுமே இதனை எடுக்கமுடியும்” நீங்கள் வேறெங்காவது சென்று பாருங்கள்” என்றார் ரிசார்ட். ரவிமூர்த்தி கேட்கவில்லை. பிரச்சனைப்பட்டார். ரிச்சார்ட்டுக்கு பொறுக்கவில்லை. பிஸ்டலை எடுத்து ரவிமூர்த்தியை சுட்டு விட்டார்.மற்றொரு புளொட் உறுப்பினரையும் சுட்டார். இருவரும் அதே இடத்தில் கொலை செய்யப்பட்டனர். பின்பு 2009 மே மாதத்தின்பின்பு மண் கொள்ளையில் புலிகளின் விண்ணன் என்பவர் ஈபிடிபி இன் மகேஸ்வரி நிதியத்திற்காக மண் கொள்ளையில் ஈடுபட்டார். இலங்கைத் தமிழ் மக்களின் மண்ணைக் கொள்ளை செய்வதில் பேரினவாத அரசுகள் தொடர்ந்தும் ஈடுபட்டும் வருகின்றனர். இதனை எதிர்த்து மூர்கத்தனமாக போராடிய விடுதலை அமைப்புக்களே பின்பு மண் கொள்ளையிலும் ஈடுபட்டனர்.எனவே மண் கொள்ளை என்பது ஒரு தொடர் கதை.
Sun Sea கப்பலில் போர்க் குற்றவாளிகள்
எம்.வீ.சன்.சீ.கப்பலின் மூலம் கனடாவுக்கு அகதிகளாக சென்ற இரண்டு பேர் யுத்தக்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு 500 இலங்கை அகதிகள் வரையில் இந்த கப்பலில் கனடாவைச் சென்றடைந்தனர். இந்த கப்பலில் உள்ள அகதிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், கடினமான விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது இரண்டு பேர் யுத்தக்குற்றங்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் குடிவரவு சபையை மேற்கோள்காட்டி, அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது