தமது அரசாங்கத்தில் எந்த மட்டத்திலாவது தவறு நிகழ்ந்திருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த வகையிலும் உடைக்க இடமளிக்க மாட்டோம் எனவும், அவர் கூறினார்.
Category: செய்திகள்
கிளர்ச்சிக்குழுவினருக்கு ஒத்துழைக்கும் பிரதமர்
நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, கிளர்ச்சிக் குழுவினருக்கு சிரியா பிரதமர் முகமது காஜி ஜலாலி ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
அரிசியை அதிக விலைக்கு விற்ற 50 பேர் சிக்கினர்
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையும், இருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் இன்று (11) முதல் விஸ்தரிக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார குறிப்பிட்டார்.
சிரியா ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்
ஒருங்கிணைப்பு தலைவரானார் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இரத்தினபுரி மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்ட கொடகவெல பிரதேச செயலக பிரிவின் கொடகவெல, ஒபநாயக்க, வெலிகபொல . பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு கடற்பகுதியில் கேரள கஞ்சா சிக்கியது
அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கை
பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று முதல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக அரிசி ஆலைகளில் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த முன்மொழிவை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. தற்போதுள்ள கட்டணங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது’
இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக, விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். நெல் அறுவடை அடுத்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்