நாளை புலரும் பொழுது புத்தாண்டு

உலக நாடுகள்  புதிய 2025ஆம் ஆண்டினை வரவேற்பதற்கு தம்மைத்  தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன.  2024ஆம் ஆண்டானது சர்வதேச ரீதியில் எண்ணற்ற நிகழ்வுகளைச் சந்தித்துள்ளது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டு உலகில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகளை மீட்டுப் பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.

கனடாவில் நடைபெறப்போகும் ஆட்சி மாற்றம் மக்கள் நலன் சார்ந்ததா..?

(தோழர் ஜேம்ஸ்)

கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவை(Justin Trudeau) பதவியில் இருந்து அகற்றுவது என்ற விடயம் கனடா அளவிலும் அமெரிக்க இந்தியா அளவிலும் அதிகம் பேசப்படும் விடயமாக அண்மைய காலங்களில் அமைந்திருக்கின்றது.

வாகன இறக்குமதி குறித்து IMF கூறுவது என்ன?

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.

“இனவாதத்துக்கு இடமளியேன்” – அனுரகுமார

இனவாதத்துக்கோ, மதவாதத்துக்கோ, அதன் ஊடாக அரசியல் செய்வதற்கோ இனிமேல், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க​மாட்டேன், என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே கூறினார். 

தேசியம் தோற்கடிக்கப்பட முடியாது

(தோழர் ஜேம்ஸ்)

ஆஜன்ரீனாவில் பிறந்த செகுவேரா கியூபா புரட்சியிற்கு பிடல் காஸ்ரோவுடன் இணைந்து போராடி அந்த மக்களின் விடுதலைக்கு வழி வகுத்தான். இது நடைபெற்றது 55 வருடங்களுக்கு முன்பு. கியூபா தேசியத்தின் வெற்றியாக இதனை பலரும் அன்று பார்த்தனர்… அது மக்களின் வெற்றியாக கொண்டாடினர்.

ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஊடகங்களுக்கு  தெரிவித்தார். புதிய அரசாங்கம் தேசத்தை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை நகர்கிறது என்பதை உலகிற்கு எடுத்துரைக்க உத்தேசித்துள்ளதாகவும், இலங்கை பிரஜைகளுக்கு நிலையான மற்றும் அழகான நாட்டை உறுதி செய்யும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

ரவி, நாமல், சத்தியலிங்கம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்ஷ மற்றும் தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவு செய்யபட்டு அவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்?

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் செவ்வாய்க்கிழமை (05) நடக்கவிருக்கிறது. சரி பாதி வாக்காளர்கள் ஏற்கெனவே வாக்களித்துவிட்டார்கள். வாக்குச் சீட்டைப் பெற்று, வீட்டிலிருந்தோ அஞ்சல் வழியாகவோ வாக்களிக்கவும் வசதி உண்டு. பொது இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் சாவடிகளிலும் வாக்குப் பெட்டிகளிலும் வாக்கைச் செலுத்தலாம். அமெரிக்காவில் தேர்தல் ஆணையம் இல்லை. மாகாண அரசுகள்தான் தேர்தலை நடத்துகின்றன. ஒவ்வொரு மாகாணத்திலும் இந்த வழிமுறைகளில் மாற்றம் இருக்கும். ஆனால் எல்லோரும் ஜனாதிபதி வேட்பாளருக்கு நேரடியாக வாக்களிப்பார்கள்.

சமாதானத்திற்கான போரரசியல் – 3

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1993 இல் தனது தேர்தல்  பிரசாரத்தில் வாக்குறுதியளித்தபடி, குமாரதுங்க புலிகளுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளில் இறங்கினார். பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்த பல உந்துதல்கள் இருந்தபோதிலும், அவரது முயற்சிகள் தைரியமானவை என்று பரவலாகக் கருதப்பட்டது. 

போருக்குப் பிந்தைய அனுசரணை அரசியல்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் போருக்குப் பிறகான அனுசரணை அரசியல் என்பதை ராஜபக்‌ஷ முன்னெடுத்த போரும் இராணுவத்தின் முதன்மை நிலையுமே தீர்மானித்தன.தனது அனுசரணை அரசியலுக்காக அவர் சிங்கள, பௌத்த பேரினவாதத்தைக் கையிலெடுத்தார்.