பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதிக்கு மணவாழ்க்கை கசந்தது

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான பில்கேட்ஸ்-மெலின்டா தம்பதியினர் விவாகரத்து செய்துகொள்ளவுள்ளனர். இதுதொடர்பில் தன்னுடைய டுவிட்டர் கணக்கில், பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படும். மிகப்பெரிய பணக்கார தம்பதியினர் மட்டுமன்றி மிகப்பெரிய நன்கொடையாளர்கள் தாங்கள் இருவரும் இனியும் திருமணவாழ்வில் முன்செல்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து 27 ஆண்டுகால திருமணவாழ்வை முடிவிற்கு கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சகல வைபவங்களும் திருமணங்களும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடை திங்கள் முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலம் கல்யாணசுந்தரம்

பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?

35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார். பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.

சித்திரவதையின் உச்சம்

இந்த புகைப்படத்தைப் பார்த்தவு டன் இதயத்தில் இனம் தெரியாத வலி. அதன் பின்னணியை வாசித்த போது இதயம் கண்ணீர் விட்டு அழுதது….படத்தில் உள்ள இவரின் பெயர் மன்சூர் ஷஹாதீத், பலஸ்தீன முஸ்லீம். 17 வருடங்கள் இஸ்ரேலிய சிறைச் சாலையில் கடும் சித்திரவதைக் கும், பலவந்த தனிமைபடுத்தலுக் கும் ஆளாகியதால் மனநிலை பாதிக்கவைக்கப்பட்டவர். இஸ்ரேலிய இனவாத சக்தியின் கொடூர கொடுமைப்படுத்தல் காரணமாக மனநிலை பாதிக்கப் பட்ட நிலையில் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெனீவா அழுத்தங்களுக்கு பயமின்றி முகம் கொடுப்போம் -ராஜபக்ஸ

ஜெனீவா அழுத்தங்களுக்கு பயமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுதந்திர நாடான இலங்கையால் ஜெனீவா அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தனியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு தவிசாளர் விஜயம்

உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் ரட்நாயக் மற்றும் உறுப்பினர் விவுசன் தலைமையிலான குழு, கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு நேற்று (07) விஜயம் மேற்கொண்டது.

வியட்நாமில் அமெரிக்கா

(Maniam Shanmugam)

அமெரிக்கா தனது வல்லாதிக்க கொள்கைகளை எதிர்ப்பவர்களை மிரட்டி அடிபணிய வைப்பதற்கு “மனித உரிமை மீறல்” என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தி வருகின்றது. ஆனால் இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா உலகம் முழுவதும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் எல்லோரும் அறிந்த சங்கதி.

சிறுமியின் மரண விசாரணை அறிக்கை கோரும் ஆளுநர்

பெரியகல்லாற்றில் சடலமாக மீட்கப்பட்ட 11 வயதுச் சிறுமியின் மரணத்துக்கான விசாரணையைத் துரிதமாக நடத்தி, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரைக் கேட்டுக்கொண்டார்.

மாகாணசபை தேர்தலுக்கு ரூ.4000 மில்லியன்?

மாகாணசபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டதன் பின்னரே, தேர்தலை நடத்துவதற்கான வழிமுறை குறித்து ஆராயப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாதவிடாய் வரியும் ’ சம்மட்டியை ’ கையிலேந்தி நிற்கும் சிலையும்

பிரதான நகரங்கள், சில சந்திகளில் கம்பீரமாய் காட்சியளிக்கும் சிலைகளில் காகங்கள் எச்சமிட்டிருப்பதை பார்த்து பலரும் சிரித்திருப்பர். ஆனால், சிலைகளின் பின்னிருக்கும் வருத்தங்கள் தெரியாமலே போய்விடும். சிலைகளுக்குப் பின்னாலும் ஏதோவொரு வகையில் ‘இரத்தம் தோய்ந்த’ கதைகள் உண்டு.