கம்பனித்தெரு பள்ளிவாசலில் இருந்து, 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜுதீன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிரித்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸார் நடத்திய விஷேட தேடுதலின் போதே, இந்த வாள்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: Uncategorised
India குடியரசுத்தலைவர் பார்வைக்கு
‘காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் கவலையளிக்கிறது’
இணைந்த வடக்குகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜபெருமாளின் ஊடகவியலாளர் சந்திப்பு.
(காணொளியைப பார்க்க….)
தோழர் ஜோ 1வது நினைவுதினம்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது; திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு: வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என ஸ்டாலின் தகவல்
வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு
யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இன்று (14) உயிரிழந்துள்ளார். பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: ஒப்பந்தம் கையெழுத்து
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சர்வதேச மகளிர் தினம் பெண்களாகிய எங்களுக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து, அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், திருக்கோவிலிலுள்ள அவர்களின் அலுவகத்துக்கு முன்பாக கறுப்பு கொடிகளைப் பறக்கவிட்டு, எதிர்ப்பு கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.