பிரமுகர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட முப்படை வீரர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டது தொடர்பான சமீபத்திய அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
Category: Uncategorised
பாதை தவறினால் தட்டிக்கேட்க தயங்க வேண்டாம்
ஜனநாயகம் விலை உயர்ந்தது. அதைப் பெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி அளப்பரியது. தெருவில் இருந்து எடுக்க முடியாது என்பதுடன் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதில் இருந்து இந்த நாட்டுக்கு புதிய பாதை திறக்கும். ஒட்டுமொத்த இலங்கை சமூகத்திற்கும் இது செல்லுபடியாகும்.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்
’விஜய்யுடன் கூட்டணி இல்லை’ – சீமான்
2026 இல் தனித்து போட்டியிடுகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நேற்று பதிலளித்த சீமான், 2026 இல் தனித்து போட்டியிடுகிறேன். இப்போதைக்கு 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்துவிட்டேன் என்றார்.
21/4 தாக்குதலின் உண்மை நிலையை வெளிப்படுத்துவோம் – சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மக்களின் எதிர்பார்த்துள்ளது போல உண்மை தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அனைவரும் தயாராக இருக்கிறோம். இதற்கான தெளிவான வேலை திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன. இது தொடர்பான விடயங்கள் பாராளுமன்றத்தில் கூட சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஆளுநரும் புது சர்ச்சையும்
(மொஹமட் பாதுஷா)
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஒரு தரப்பும், அதனை ஒத்திவைப்பதற்கு இன்னுமொரு தரப்பும் பகீரத பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றமை கண்கூடு. எது எவ்வாறிருப்பினும் மிகக் கிட்டிய காலமொன்றில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டிய நிலை வரும் என்ற அடிப்படையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நகர்வுகளையும் சமகாலத்தில் சிறிய, பெரிய அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.
புதிய கூட்டணிக்கு கைச்சாத்து
இடுப்பை தொட்டவருக்கு குடை நெளிய தாக்குதல்
ஒரு தேசத்தின் ஓலக்குரல் கேட்கிறதா?
(ச.சேகர்)
“எப்படி வாழ்ந்த நாங்க, இப்ப இப்பிடி கஷ்டப்படுறோமே, இந்த விலைக்கு சாமான் விக்குது…, இவ்வளவு இல்லயா இருந்துது, ஏன் இப்ப இந்தளவு கூடிருச்சு…” இவ்வாறான வார்த்தைகளே இன்று எம்மில் பலர் மத்தியில் சரளமாக பேசப்படுகின்றது. ஏன் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்து தாம் உழைத்து வந்த பணத்தில் இங்கு செலவிடுவோரும் தெரிவிப்பது, என்ன சாமான் எல்லாம் நெருப்பு விலை விக்குது என்பதையே.
நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சொல்லும் செய்தி
(புருஜோத்தமன் தங்கமயில்)
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ள விடயம், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தன்னுடைய நீதித்துறை செயற்பாடுகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுக்கு நீதிபதி சரவணராஜா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.