‘மத்திய அரசிடம் இருந்து சாதி மற்றும் மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது’ என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான உ.வாசுகி தெரிவித்துள்ளார்.
Category: Uncategorised
நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று நடைபெறவிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும், பகிரங்கமாகவே பிரதமருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் பிரேரணை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரமே, இந்தப் பிரேரணையில், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும்.
(“நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம்” தொடர்ந்து வாசிக்க…)
கூட்டமைப்பின் பிடி முன்னணியின் சறுக்கல்
(புருஜோத்தமன் தங்கமயில்)
அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது.
(“கூட்டமைப்பின் பிடி முன்னணியின் சறுக்கல்” தொடர்ந்து வாசிக்க…)
ஸ்ரீதேவி, மிதுன், போனி கபூர்… ராம் கோபால் வர்மா சொன்னதும் நிஜத்தில் நடந்ததும் என்ன?
(எம்.குமரேசன் எம்.குமரேசன்)
`நடிகை ஸ்ரீதேவி, உண்மையிலேயே சந்தோஷமாக வாழ்ந்தாரா அல்லது நிஜத்திலும் நடித்தாரா?’ என்று பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவி, வாழ்க்கையில் பல விஷயங்களில் தோல்வியைச் சந்தித்தவர்தான். கோலிவுட்டுடன் ஒப்பிடுகையில் பாலிவுட் மிகப் பெரியது. பத்மினி, வைஜெயந்தி மாலா, வஹிதா ரஹ்மான், ஹேமமாலினி, ரேகா வரிசையில் தென்னிந்தியாவிலிருந்து சென்று பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்றவர் ஸ்ரீதேவி. பாலிவுட்டில் `லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தைப் பெற்ற ஒரே நடிகை இவர் மட்டுமே! அவரின் சொந்த வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாகவா இருந்தது?
உள்ளுர் அதிகாரசபை தேர்தல் முடிவுகள்
1. தமிழ் மக்களுக்கு – சகல தமிழ்த்தலைமைகளும் ஒன்றுபட வேண்டிய அவசியத்தையும்
2. சிங்கள மக்களுக்கு – அவர்களின் தலைமை மகிந்தவே என்பதையும்
3. சர்வதேசத்துக்கு – இனப்பிரச்சனை என்றும் தீரப்போவதில்லை என்ற சேதியினையும் கூறிநிற்கிறது.
நல்லாட்சியும் மலையக மக்களும்
(கலாநிதி இரா. ரமேஷ்)
1980களின் இறுதிப்பகுதியில் இருந்து, மலையக மக்கள் படிப்படியாக சட்டரீதியாக பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதும், அதன் உண்மையான பயன்களை, முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அதற்கு, அம்மக்களின் சமூகப் பொருளாதார நிலை, பெரிதும் சான்றாகக் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய சமூகங்களின் சமூக அபிவிருத்தி மற்றும் பொருளாதார நிலைமைகளுடன் ஒப்பிடும்போது, இது மேலும் புலனாகிறது.
நிலைக்குமா சங்கரி – சுரேஷ் கூட்டணி
எழுபது வயதைக் கடந்த வயோதிபர்களுக்கு, நகரசபைத் தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை”- இது வவுனியா நகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து, ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நிகழ்த்திய உரையின் போது கூறிய முக்கியமான ஒரு விடயம். வயோதிபர்களுக்குத் தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற சிவசக்தி ஆனந்தனின் இந்த நிலைப்பாடு, அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். (“நிலைக்குமா சங்கரி – சுரேஷ் கூட்டணி” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கையின் பொருளாதரத்தை கிராமிய அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றலாம்.
கடந்த சில மாதங்களாக முகப்புத்தகத்தில் நீங்கள் கிராமிய பொருளாதாரம் பற்றியும், அதை கிராமிய மட்டத்தில் எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது பற்றியும் எழுதி வருகின்றீர்கள். நீங்கள் யார், இது சம்பந்தமான உங்கள் அனுபவங்கள் என்ன ?
நான் அலியார் மவ்சூக் ( ரியால் ), எனது சொந்த ஊர் அக்கரைப்பற்று, கடந்த பதினைந்து வருடத்துக்கு மேலாக இங்கிலாந்தில் வசிக்கின்றேன்.
1979 முதல் 2001 வரை அடிக்கடி எனது சொந்த வியாபாரம் சம்பந்தமாக இந்தியா, பிலிப்பைன், பேங்காக், நைஜீரியா போன்ற நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரயாணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. (“இலங்கையின் பொருளாதரத்தை கிராமிய அடிப்படையில் எவ்வாறு முன்னேற்றலாம்.” தொடர்ந்து வாசிக்க…)
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்: எங்கு சறுக்கியது பலமான எதிர்க்கட்சி…?
(நீரை.மகேந்திரன்)
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதும், டெபாசிட் போகும் அளவுக்கு வாக்குகள் குறைந்ததும் பல அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் படுதோல்வி என்கிறார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனோ பணநாயகத்தின் பின்னால் செல்லாமல் ஜனநாயகத்தை மதித்ததால் இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்கிறார்.
(“ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள்: எங்கு சறுக்கியது பலமான எதிர்க்கட்சி…?” தொடர்ந்து வாசிக்க…)
கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை
(கா.சு.வேலாயுதன்)
தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்களை அரசில்வாதிகள் சம்மணம்போட்டு அமர்ந்து சம்பாதிக்கும் மையங்களாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், பக்கத்து மாநிலமான கேரளத்தில் கூட்டுறவு சங்கத்தின் மூலம், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனையை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
(“கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை” தொடர்ந்து வாசிக்க…)