தமிழ்த் தேசிய அரசியலின் நியாயமான இருதுருவப்பட்ட நிலைப்பாடுகள்

தமிழ்த் தேசிய அரசியல் வழி நின்று செயற்படுகின்றவர்களான, சமஷ்டிக் கோரிக்கையினை வலியுறுத்தி நிற்கின்றவர்களான சி.வி. விக்கினேஸ்வரனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும், சமஷ்டித் தீர்வின் சாத்தியங்கள் குறித்து நேரெதிர் கருத்துக்களை / நேரெதிர் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்தைத் தருவதொன்றாக அமையவில்லை.

(“தமிழ்த் தேசிய அரசியலின் நியாயமான இருதுருவப்பட்ட நிலைப்பாடுகள்” தொடர்ந்து வாசிக்க…)

கேரளத்து ஈழவர்கள் ஒரு நோக்கு.

கேரளத்தில் வாழுகின்ற “ஈழவர்” சமூகம் குறித்த ஆய்வு, இலங்கையில் பண்டைக்காலம் முதல் வாழ்ந்து வருகிற தமிழர்கள் குறித்து அதாவது ஈழத்தமிழர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு பயனுடையதாகலாம் போல் தெரிகிறது. எனவே, இக்கட்டுரையில் கேரளத்தில் வாழுகின்ற ஈழவர் குறித்து கிடைக்கிற தகவல்களைத் தொகுத்து முன்வைக்க முனைகிறேன்.

(“கேரளத்து ஈழவர்கள் ஒரு நோக்கு.” தொடர்ந்து வாசிக்க…)

புலி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பறந்தன

தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) புலனாய்வுத் துறை என்ற பெயரில், அந்த இயக்கத்தின் இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வவுனியாவில் உள்ள வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் சிறி டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அண்மையில், வீசப்பட்டுக் கிடந்த நிலையிலேயே அந்தத் துண்டுப் பிரசுரங்களை பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு பொறுக்கியெடுத்துள்ளனர்.

(“புலி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பறந்தன” தொடர்ந்து வாசிக்க…)

பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா?

(Niroshini)
பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத் தென்பட்டாலும், அது தொடர்கதையாகவே இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளினதும் அதனால் பெண்கள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பெற்றதே ஒழிய, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக மாற்றம் பெற்றுள்ளது.

(“பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா?” தொடர்ந்து வாசிக்க…)

சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தேசங்களை மதம் ஆளுகிறதா அல்லது மதங்களைத் தேசங்கள் ஆளுகின்றனவா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் கூறுவது கடினம். மதம், தேச அலுவல்களில் செலுத்தும் செல்வாக்கை நாமறிவோம். அதற்கு எந்த மதமும் விலக்கல்ல; பல தேசங்களுக்கு மதம் நல்லதொரு கவசமாகிறது. மறுபுறம், அவ்வாறு கவசமாதல், அம்மதம் அத்தேசங்களில் வரன்முறையற்று நடந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது. மதத்துக்கும் தேசத்துக்குமிடையிலான உறவைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மதத்தின் பெயரால், நேற்று நிராகரித்ததொன்று, இன்று ஏற்கப்பட்டலாம்; நாளை அது மதத்தின் ஓர் அம்சமாகவும் மாறலாம். இவ்வாறு மதம் ஆட்சியாளர்களின் வசதிக்குரியதாகத் தொடர்கிறது. இதற்கும் எம் மதமும் விலக்கல்ல.

(“சவூதி அரேபியா: ‘மிஷன் 2030’ நிர்வாண கனவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)

இம்முகாமிலிருந்த பெண் கைதிகள் எதிர்பாராத சமயங்களில் நித்திரையிலிருந்து அடித்து எழுப்பப்பட்டு சுரங்க அறைகளுள் இழுத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வெளியே துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் கேட்கும். அடுத்தது நீ தானென கைதிக்கு சொல்லப்படும். கடுமையான சித்திரவதைக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், சிறிய முகாம்களுக்கு – பெரும்பாலும் தென்மராட்சிக்கு மாற்றப்படுவர். தென்னந்தோப்புக்குள் அமைந்த இம்முகாமில் ஒரே சமயத்தில் 50 பேர் வரை சிறை வைக்கப்படுவர். இங்கு சித்திரவதை செய்வதில் இன்பம் காண்பதன் உச்சக்கட்டம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்கும்.
வேறு முகாம்களிலும் பெண் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

(“புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில்….?

மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சரமான விஜயகலா மகேஸ்வரனுக்குள்ள தொடர்பு
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் கொழும்புக்கு தப்பிச் செல்ல உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ள மத்திய, ஊவா மாகாணங்களுக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் வங்கிக்கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா ரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசந்த சில்வா ஊர்காவற்றுறை பிரதான நீதிவான் மொஹம்மட் ரியாழிடம் நேற்று பெற்றுக்கொண்டுள்ளார்.

(“மாணவி வித்தியா படுகொலை காரணமான சுவிஸ் குமாரை காப்பாற்ற பின்னனியில்….?” தொடர்ந்து வாசிக்க…)

திரு பிரபா சுகிர்தரன் ரட்ணசபாபதி

அன்னை மடியில் : 15 சனவரி 1972 — ஆண்டவன் அடியில் : 20 யூலை 2017
லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரபா சுகிர்தரன் ரட்ணசபாபதி அவர்கள் 20-07-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஜோதி, லோகேஸ்வரி தம்பதிகளின் முதற் பேரனும்,

காலஞ்சென்ற இளையதம்பி ரட்ணசபாபதி (ஈழப்புரட்சி அமைப்பு – EROS), தில்லை மாலினிதேவி(மாலினி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ரேஹான், பிருந்தன், ஆயிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திங்கட்கிழமை 24/07/2017, 03:20 பி.ப — 04:00 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK

பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956160779

தகவல்
குடும்பத்தினர்

திரு முத்துலிங்கம் சந்திரசேகரம்பிள்ளை

திரு முத்துலிங்கம் சந்திரசேகரம்பிள்ளை

கல்முனையை  பிறப்பிடமாகவும், கனடா மற்றும் களுவாஞ்சிக்குடியை   வதிவிடமாகவும் கொண்ட திரு முத்துலிங்கம் சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை பேச்சிபிள்ளை அம்மா தம்பதிகளின் மகனும், களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த அம்பிகா  அவர்களின் அன்புக் கணவரும், சுகுமாரி, சுகுமதி, சுயிவா அவர்களின் அன்புத் தந்தையுமாவார்.

திருமதி சிவமணி திலகரெத்தினம், மற்றும்  காலஞ்சென்றவர்களான திருமதி பொன்னம்மா நாகமணி,  திருமதி சரஸ்வதி பூபாலபிள்ளை,  திரு கிஸ்ணபிள்ளை சந்திரசேகரம்பிள்ளை  ஆகியோரின் சகோதரும், திரு சிவம் வினாயகமூர்த்தி, திரு சோமா ஞானபண்டிதன், திரு சுத்தானந்தம், திரு  பரமானந்தம் வல்லிபுரம் ஆகியோரின் அன்பு மாமனாரும், அவிநாஸ், அஸ்னா, கவித், அமிதா, சிவாணி, சாயிசிவா ஆகியோரின் பாசமிகு பாட்டனாருமாவார்.

அன்னார் மட்/ கல்லடி சிவாநந்த வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

தகவல்
குடும்பத்தினர்


அஞ்சலி நிகழ்வுகள்:
ஜுலை 05 புதன்கிழமை  மாலை  5:00 – 9:00

ஜுலை 06 வியாழக்கிழமை காலை  9:00 – 11:00

தகனக் கிரியை: ஜுலை 06 வியாழக்கிழமை காலை   11:30


முகவரி:    Glen Oaks Funeral Home, 3164 Ninth Line, Oakville, ON, L6H 7A8

 

தொடர்புகளுக்கு
பரமானந்தம் வல்லிபுரம் (மருமகன்) :  905 – 499 7941, அம்பிகா (மனைவி) : 289- 521 3686,

சுகுமாரி (மகள்) : 905– 285 0319, சுயிவா (மகள்): 416 – 895 1831, சுகுமதி (மகள்): 416 – 878 3504

லண்டனில் தியாகிகள் தினம்–2017

“பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யானது “பத்மநாபா மக்கள் முன்னணி” என்ற பெயருடன் ஒரு சமூக இயக்கமாகவும், “தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” (S.D.P.T). என்ற பெயருடன் ஒரு அரசியல் கட்சியாகவும் மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம், ஐக்கியம், தமிழ் சமூகத்தில் ஐனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றிற்காகப் போராடி மரணித்த தோழர்கள், போராளிகள், அரசியல்வாதிகள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களுக்கான இவர்களது 27வது வருட அஞ்சலி நிகழ்வு, வெளிநாட்டுப் பிராந்திய லண்டன் கிளையினரால் கடந்த 24 ஜூன் 2017ல் லண்டனில் நடாத்தப்பட்டது.

(“லண்டனில் தியாகிகள் தினம்–2017” தொடர்ந்து வாசிக்க…)