Category: Uncategorised
தொழிலாளர் தின நிகழ்வு
தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு திருகோணமலையில் நடக்கயிருப்பதால் தொழிலாளர்கள், தோழர்கள் மற்றும் நண்பர்கள் இவ் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி
விவசாயிகளுக்கான முதல் போராட்டத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்த நாராயணசாமி நாயுடு
தங்களின் ஜீவாதார பிரச்சினை களுக்காக கடந்த 18 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் நடத்தும் நூதன போராட்டங்களால் தலைநகர் டெல்லியில் பதற்ற மான சூழ்நிலை உருவாகிக் கொண் டிருக்கிறது. இந்த வேளையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயி களுக்கான முதல் உரிமை போராட் டத்தை நடத்தியவர் கோவையை அடுத்த செங்காலிபாளையத்தைச் சேர்ந்த விவசாயத் தோழர் நாராய ணசாமி நாயுடு. அவரைப் பற்றி நினைவு கூர்கிறார்கள் அவரோடு போராட்டக் களங்களில் இருந்தவர் கள்.
கந்தன் கருணைப் படுகொலைகள்
(சாகரன்)
30 விநாடிகளில் 60 இற்கும் மேற்பட்ட உயிர்க் கொலைகள். உலகின் பிரசித்தி பெற்ற ஆயுதம் SMG (ஏகே 47, (ஏனையவர்களின் தகவல் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளது) இனால் தொடர்ச்சியான குண்டுப் பாய்ச்சல்கள். தொடர்ந்தாற்போல் குற்றுயிராய் இருந்தவர்கள், தப்பி ஓடி மதகிற்குள் புகுந்து மறைந்தவர்களை குண்டு வீசி மரணத்தை உறுதி செய்த கொலைகள். எல்லாம் 30 நிடத்திற்குள் முடிக்கப்பட்டுவிட்டன. பிணக் குவியலுக்குள் பிணம் போல் இரத்த வெள்ளத்திற்குள் முழ்கி அசையாமல் இருந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பிய கோர நிகழ்வு. இவரின் வாக்கு மூலமும் அதனைத் தொடர்ந்த பதிவுகளும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் குறிப்பீடுகள் சம்பவத்தை உறுதி செய்திருக்கும் பதிவுகளும் நடைபெற்று 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. மனித உரிமை அமைப்புக்களோ ஐ.நா. சபையே ஏறெடுத்துப் பார்க்காத படுகொலைகள் இது. வெலிக்கடைப் சிறைப்படுகொலையை விஞ்சிய வீச்சுப் படுகொலை. கறுப்பு ஜுலையை பின்னுக்கு தள்ளிய மார்ச் 30 படுகொலை அது கந்தன் கருணைப் படுகொலை. எம்மவர்களால் எம்மவர்கள் மீது எமது மண்ணில் எமது சுற்றத்தவர் பார்த்திருக்க நடைபெற்ற கைதிகளின் படுகொலை இது.
சந்திரிகாவின் தெல்லிப்பழை விஜயம்…
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன்று சனிக்கிழமை (25) யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குபட்பட்ட வீமன்காமம் பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன்பின்னர், வலிகாமம் வடக்கு மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்தினால் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் உள்நாட்டு விசாரணையை முன்னெடுக்கவேண்டும்
(வரதராஜப்பெருமாள்)
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோருவதை காட்டிலும் உள்நாட்டு விசாரணைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று வடக்கு,கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு விசாரணை ஒன்றில் பின்பற்றப்படும் முறையே சர்வதேச விசாரணை ஒன்றிலும் பின்பற்றப்படுகிறது. எனவே உள்நாட்டு விசாரணைகள் தொடர்பாக ஆராயவேண்டும் என்றும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். முதலில் உள்நாட்டு விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சர்வதேச விசாரணை தொடர்பாக சிந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை என்றக்கோரிக்கையை முன்வைப்பது, விவேகமற்ற செயல் என்றும் வரதராஜப்பெருமாள் கூறியுள்ளார்.
நிரந்தரத் தீர்வை நோக்கி நகரட்டும் கடலோடிகளின் பிரச்சினை!
இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட சம்பவத்தின் அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை. அவரது மரணத்துக்கு நீதி கேட்டு ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியின் பேரில் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. இலங்கை, தமிழக அரசுகளின் சார்பில் சில தற்காலிக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தொடர்கதையாகி வரும் மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம்.
(“நிரந்தரத் தீர்வை நோக்கி நகரட்டும் கடலோடிகளின் பிரச்சினை!” தொடர்ந்து வாசிக்க…)
மீட்கப்பட்ட புதுக்குறிச்சி ஏரி: இளைஞர்களின் முயற்சிக்கு இயற்கை அளித்த கொடை
(இந்தக் கட்டுரை எமக்கும் பொருந்துகின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான ஈழத்தின் தமிழ் பகுதிகளுக்கும்) எனவே இதனை பிரசுரம் செய்கின்றோம் – ஆர்)
(அ.சாதிக் பாட்சா)
புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.
புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் புதுக்குறிச்சியைச் சேர்ந்த நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து அங்கு உள்ள 110 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை சீரமைத்து வருவது குறித்து ‘தி இந்து’வில் ‘நீர்நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்’ எனும் தலைப்பில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அன்று செய்தி வெளியாகியிருந்தது.
(“மீட்கப்பட்ட புதுக்குறிச்சி ஏரி: இளைஞர்களின் முயற்சிக்கு இயற்கை அளித்த கொடை” தொடர்ந்து வாசிக்க…)
‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’
அடுத்த தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை அரசியல் நாற்காலியில் இருந்து கீழ் இறக்க செயற்படவுள்ளதாக கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்ப ட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். (“‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’” தொடர்ந்து வாசிக்க…)