மீட்கப்பட்ட புதுக்குறிச்சி ஏரி: இளைஞர்களின் முயற்சிக்கு இயற்கை அளித்த கொடை

(இந்தக் கட்டுரை எமக்கும் பொருந்துகின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான ஈழத்தின் தமிழ் பகுதிகளுக்கும்) எனவே இதனை பிரசுரம் செய்கின்றோம் – ஆர்)

(அ.சாதிக் பாட்சா)

புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.
புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் புதுக்குறிச்சியைச் சேர்ந்த நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து அங்கு உள்ள 110 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை சீரமைத்து வருவது குறித்து ‘தி இந்து’வில் ‘நீர்நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்’ எனும் தலைப்பில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அன்று செய்தி வெளியாகியிருந்தது.

(“மீட்கப்பட்ட புதுக்குறிச்சி ஏரி: இளைஞர்களின் முயற்சிக்கு இயற்கை அளித்த கொடை” தொடர்ந்து வாசிக்க…)

‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’

அடுத்த தேர்தலின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை அரசியல் நாற்காலியில் இருந்து கீழ் இறக்க செயற்படவுள்ளதாக கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்ப ட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். (“‘கால அவகாசம் வழங்கிய கூட்டமைப்பினரை விரட்டுவோம்’” தொடர்ந்து வாசிக்க…)

ஆர்மியோடு சிறியரை சரியாசனம் வைத்த ……நல்லிணக்கம்!!!

கோவிலில பரிவட்டம் கட்டுறதுக்கு ஆர்மியை கூப்பிட்ட அந்த கோயில் நிர்வாகம் திருந்தணும். இல்ல அவங்களுக்குத்தான் அறிவில்ல எண்டு பார்த்தால் , மேடைவழிய ,நேர்சரி விளையாட்டுப்போட்டிகூட மிச்சம்வைக்காமல் கிடைக்கிற மேடையெல்லாம் வாய்கிழிய தேசியம் கதைக்கிற ( கவனிக்க “கதைக்கிர ” மட்டும்) சிறியருக்காவது புத்திவேண்டாம்??
ஆர்மியை கூப்பிட விடாமல் செய்திருக்கணும், இல்ல ஆர்மிக்கு பரிவட்டம் கட்டினால் தான் வரமாட்டன் எண்டு சொல்லி வெளியில நிண்டிருக்கணும். அப்ப்டி வெளியில நிண்டிருந்தால் சனத்துக்கும் ஒரு பாடமாக அமைஞ்சிருக்கும். இனிமேல் இப்படி செய்யாமல் விட்டிருப்பினம். ஆனால் , முன்னுக்கு நிண்டு விலாசம் காட்டணும் எண்டு துடிக்கிற சிறியர் , தான் வெளியில போனால், இன்னொருத்தன் வந்திடுவான் எண்ட பயத்தில ஆர்மியெண்டால் என்ன் எண்டு எங்கட வன்னி மண்ணிலயே அவனோடு சேர்ந்து பரிவட்டம் கட்டி இனத்தை கேவலப்படுத்துறார்.
ஜமீன் டிசைன் அப்படி

மரண அறிவித்தல்

(முன்னாள் ஈபிஆர்எல்எவ், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கனடா பொறுப்பாளரும் இன்னாள் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி இன் ரொரன்ரோ பொறுப்பாளர் ஏ.கே.ஆனந்தன் அவர்களின் மனைவியின் தாயார் இவர்)

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நவரட்ணம் அவர்கள் 27-02-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பத்மநாதன், புவனேஸ்வரி, கமலாவதி(இலங்கை), பஞ்சலிங்கம்(ஜெர்மனி), இராஜேஸ்வரி, சிவா, ஞானேஸ்வரி, லோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, பாலசிங்கம், காலஞ்சென்ற யோகராசா, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கராசா, நகுலேஸ்வரி, குமரேசன், சிவபாக்கியலட்சுமி, வெற்றிவேல், சீலி, ஆனந்தன், சிவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாவதி — இலங்கை
தொலைபேசி: +94215101259
பஞ்சலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி: +49775602849
சிவா — கனடா
செல்லிடப்பேசி: +14166692687
லோகேஸ்வரி — கனடா
செல்லிடப்பேசி: +16478473635

கேப்பாபுலவு

கேப்பா புலவு பிலக் குடியிருப்பு மக்களின் சொந்த நிலமீட்புக்கான அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக மல்லாவி வர்த்தகர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை திங்கட்கிழமை நடாத்தி இருந்தது. இது உண்மையில் வரவேற்கத்தக்க ஒரு விடயம். இப்படியான ஆதரவை தெரிவிக்க ஏனைய நம்முடைய மக்கள் மறந்து விட்டார்களே என்பது தான் வேதனை. ஜல்லிக்கட்டுக்காக வீதியில் இறங்கிய மக்களுக்கு கேப்பாபுலவு மக்களின் கண்ணீர் தெரிய வில்லையே.
தங்களுடைய காணிகளை தருமாறு கேட்டு மக்கள் வீதிகளிலே கிடக்கிறார்கள்.

(“கேப்பாபுலவு” தொடர்ந்து வாசிக்க…)

சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்

இணைந்த வடகிழக்கு மாகாண அரசின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அவர்கள், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடன், வடகிழக்கு மாகாண அரசுக்காண அதிகாரங்களை பகிர்வது தொடர்பான ஒரு சந்திப்பில் கிளிக் செய்த புகைப்படம் ஒன்றையே நீங்கள் இங்கு காண்கிறீர்கள்.
வடகிழக்கு மாகாண அரசு அமைத்து மிகக் குறுகிய காலத்தில் பெரும் நெருக்கடிகளின் மத்தியிலும் பல சாதனைகளை புரிந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். ‘இது மாகாண சபை அல்ல மாகாண அரசு’ என இலங்கை அரசுடன் வாதிட்டவர். மாகாண அரசிற்கான அதிகாரங்களை கேட்டு இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்தவர். ‘எங்களோடு ஒத்துழைப்பீர்களானால் உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம்’ என்ற தொனியில் பேசி ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் விலைக்கு வாங்க முற்பட்ட வேளைகளில் எல்லாம் அதைத் புறக்கணித்து மாகாண அரசுக்குரிய அதிகாரங்களை பெறுவதிலேயே குறியாக இருந்தவர் திரு. வரதராஜப்பெருமாள் அவர்கள். (“சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகாத வடகிழக்கு மாகாண அரசின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்

ஜனநாயக வழிப் போராட்டங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருப்பதால் பலருடைய வேலைகளையும் அது பாதிக்கிறது. பலரால் தொடர்ந்தும் அதில் இயங்க முடியவில்லை. குறைந்த பட்சம் அக்கறையாயும் இருக்க முடியவில்லை.

(“கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து போராடும் தமிழக மக்கள்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவர்கள் / இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. இதன் வீச்சு உலக நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் இடமெங்கும் பரவியது. லட்சக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஓரணியாகத் திரண்டதால் ஆங்காங்கு ஆதரவாக பெற்றோர், பொதுமக்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். நாளுக்கு நாள் போராட்டம் விரிவடைந்தது. ஒருகட்டத்தில் நாற்பது லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், இளைஞர்கள், பென்கள், குழந்தைகள் வந்ததாலும் இந்த அறவழிப் போராட்டம் இரவு – பகல் என ஒரு வாரம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தது உலகின் பார்வையையே போராட்டத்தின் பக்கம் திருப்பியது.

(“ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து போராடும் தமிழக மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)