(சரவணன்)

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின பிரச்சினையை பொருத்தவரை அதனை பதிவு செய்யும் நபர், அனுகுபவர்களின் மனநிலை, வெளிப்படுத்தும் பாங்கு அதற்கான சூழல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே அவர்களது பிரச்சினையின் தன்மை பொதுச்சமூகத்தால் அளவிடப்படுகிறது அல்லது கவனம் பெறுகிறது.

சீனாவின் காலியம் ஆதிக்கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது

செமிகண்டக்டர்களை தயாரிப்பதற்கான முக்கியமான கனிமமான உலகின் 95 சதவீத கச்சா கேலியத்தை சீனா உற்பத்தி செய்கிறது, ஆனால் இயற்கை வளங்கள் வேகமாக குறைந்து வருவதால் நிலைமை நீடிக்காது என்று சீன நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசாங்கத்தின் மீதான மக்கள் விருப்பம் அதிகரிப்பு

வெரிடே ரிசர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பின்படி, 2023 பெப்ரவரி மற்றும் 2022ஆக்டோபர்  ஆகிய இரண்டு மாதங்களினதும் 10% ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்கள் அங்கீகாரத்தின் மதிப்பீடு, 2023 ஜூன் இல் 21% ஆக இரட்டிப்பாகியுள்ளது.

சென்னை- இலங்கை இடையே முதல் பயணக் கப்பல் சேவை ஆரம்பம்

சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்வி எம்பிரஸ்” மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கள்கிழமை முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

40 நிலையங்களுக்கு மீண்டும் அனுமதி

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூஆர் கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 12ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் குறித்த எரிபொருள் நிலையங்களின் சேவைகளுக்கு ஒருவாரத்துக்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் 11 ஆம் திகதியுடன் வாரம் நிறைவடையவுள்ளதால் 12ஆம் திகதி முதல் எரிபொருள் முற்பதிவுகள் வழங்கப்படும் என்று தெரியவருகிறது.

அமைச்சரவையில் டக்ளஸ் அதிருப்தி

வெடுக்குநாறி விவகாரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின்  வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய உணர்வுகள் ஆழமானவை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிருப்தி வெளியிட்டார்.

பலஸ்தீன மேற்குக் கரை மற்றும் காஸா போன்று மாறிவரும் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை

இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்கிறது. பலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல், முழு நகரையும் உரிமையாக்க முற்படுவதை அங்கீகரித்துள்ள அமெரிக்காவும் வேறு சில ஐரோப்பிய நாடுகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு இலட்சம் யூதர்கள் குடியேற்றப்பட்டதைக் கண்டிக்கவில்லை. சர்வதேச சட்டங்களின்படி இக் குடியேற்றங்கள் தவறு என்றும் அமைதிக்குத் தடையாக உள்ளதாகவும் பலத்தீனம் கூறினாலும், இஸ்ரேல் அதனைத் தொடர்ந்து மறுக்கின்றது.

பலருக்கும் மது கசந்தது

இலங்கையை பொறுத்தவரையில் மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கின்றனமை கண்டறியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டின் கலால் வரி வருமானம் 350 கோடி ​ரூபாவினால் குறைந்துள்ளது என கலால் திணைக்கள அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு உண்மையில் உயர்ந்துள்ளதா?

(ச.சேகர்)

அண்மைய சில நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் நிதி அமைச்சைச் சேர்ந்தவர்கள் இதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்கள் காரணமாக அமைந்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.