பொய்களின் சாம்ராஜ்யத்தில் உண்மை தேசத்துரோகம்.

ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் தமிழ் ஊடகங்களில் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை துளியளவும் நம்ப வேண்டாம். உக்ரைன் – ரஷ்யா இராணுவ மோதலை விட ஊடக யுத்தம் பெரிதாக நடந்து வருகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் ரஷ்ய ஆங்கில ஊடகங்களை ஏன் தடைசெய்துள்ளார்கள் என்பது தெரியுமா? உண்மை வெளியில் தெரியக் கூடாது என்பதற்காகவே.

மனித உடலும் வீணையும் :

(TSounthar Sounthar)

மிகப்பழங்காலத்தில் உலகின் பல பாகங்களிலும் நரம்புக்கருவி குடும்பத்தைச் சேர்ந்த வாத்தியங்களில் Harp, Lyre, lute போன்ற வாத்தியக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை இந்தியாவில் கின்னரம் என்றும் யாழ் என்றும் வழங்கப்பட்டது.

அன்று இந்தியாவும் இலங்கையும் இன்று ரஷ்யாவும் உக்ரேனும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ரஷ்யப் படைகள், பெப்ரவரி 24ஆம் திகதி அந்நாட்டுக்கு மேற்கேயுள்ள உக்ரேன் மீது படையெடுத்தது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அந்தப் படையெடுப்பை ஆக்கிரமிப்பாகக் குறிப்பிடவில்லை. ‘இராணுவ நடவடிக்கை’ என்றே குறிப்பிட்டார்.

தமிழர் நிலங்களை சட்டரீதியாக மீட்க முடிவு

முல்லைத்தீவு – கொக்கிளாயில், கம்பித்தறை மற்றும் வில்லுவெளி ஆகிய தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்களை இல்மனைட் அகழ்வுக்காக கனிப்பொருள் மணல்கூட்டுத்தாபனத்தினர் அபகரித்துள்ளனர்.

ஹிஜாப் சர்ச்சைகள் தேவையற்றவை…உடை கல்விக்கு தடையாகக் கூடாது…அன்புமணி ராமதாஸ்.!!

ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் கல்வி, அமைதி, நல்லிணக்கம் மட்டுமே கோலோச்ச வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தின் மகத்துவம் அர்த்தப்படும் புரிதல்

(நளீர் அஹமட்)

இத்தேசம், 15 ஆம் நூற்றாட்டின் இறுதிக் காலப்பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என அந்நியரின் ஆதிக்க ஆட்சியின் கீழ் இருந்தது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, அந்நிய ஆதிக்க ஆட்சியலிருந்து சுதந்திரம் பெற்றது.

இலங்கை: கொரனா செய்திகள்

தொற்றாளர் தொகையில் சடுதியான உயர்வு. நாட்டில் மேலும் 838 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 601,886 ஆக அதிகரித்துள்ளது.

உலகின் கடும் வெப்பமான ஆண்டாக ’2021’ பதிவு

உலகில் மிக அதிக வெப்பம் மிகுந்த ஆறாவது ஆண்டாக 2021 வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய தகவல்கள் அதற்குச் சான்றாய் அமைந்திருப்பதாக, அமெரிக்கப் பருவநிலை ஆய்வாளர்கள் கூறினர்.  உலக மக்கள் தொகையில் சுமார் கால்வாசிப் பேர் கடந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர். 

மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு!

நாடு பூராவும் தாங்கள் செயலாற்றிவரும் கடற்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் வரலாற்றில் எக்காலமும் இல்லாத மிகப் பாரிய திட்டங்களாகும். இலங்கைத் தீவின் கடல்சார் பொருளாதார வருவாய் தரவல்ல வளங்கள் மிகப்பாரியளவு இருந்தபோதும் கடந்தகாலங்களில் இவற்றை நாம் சரியாக அறுவடை செய்யவில்லை. இப்போ தாங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் புதிய பண்ணைமுறைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியும், உருவாக்கியும் வருகிறீர்கள்.