உலகின் கடும் வெப்பமான ஆண்டாக ’2021’ பதிவு

உலகில் மிக அதிக வெப்பம் மிகுந்த ஆறாவது ஆண்டாக 2021 வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய தகவல்கள் அதற்குச் சான்றாய் அமைந்திருப்பதாக, அமெரிக்கப் பருவநிலை ஆய்வாளர்கள் கூறினர்.  உலக மக்கள் தொகையில் சுமார் கால்வாசிப் பேர் கடந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர். 

மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு!

நாடு பூராவும் தாங்கள் செயலாற்றிவரும் கடற்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் வரலாற்றில் எக்காலமும் இல்லாத மிகப் பாரிய திட்டங்களாகும். இலங்கைத் தீவின் கடல்சார் பொருளாதார வருவாய் தரவல்ல வளங்கள் மிகப்பாரியளவு இருந்தபோதும் கடந்தகாலங்களில் இவற்றை நாம் சரியாக அறுவடை செய்யவில்லை. இப்போ தாங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் புதிய பண்ணைமுறைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியும், உருவாக்கியும் வருகிறீர்கள்.

100 கோடி டொலர் கடன் தருகிறது இந்தியா

டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகோதரத்துவம்

(செங்கதிரோன்)

மு.ப 10.00 மணியிருக்கும். ‘அம்மோவ்… அம்மோவ்…’ என்று கத்திக்கொண்டு ஒழுங்கைக்குள்ளாலே தனது வீட்டை நோக்கி ஓடிவந்தாள் சுனீத்தா. 

இலங்கை: கொரனா செய்திகள்

தொற்றாளர் தொகையில் இன்றும் அதிகரிப்பு. நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 714 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 572,902 ஆக அதிகரித்துள்ளது.

ஓரு தேசம்…

கொடி நாள் கொண்டாடிய மறுநாளே அதன் காவலன் மீது…

தலைமை தளபதியின் மீதே கொடி போர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறானா காலன்…..

விமான விபத்தா….

இல்லை வகுப்பு வாத சக்திகளின் போர் வியூகமா என்பதெல்லாம் இனி தான் விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது.

வெனிசூலா தேர்தலில் சோசலிஸ்டுகள் அமோக வெற்றி!

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் 23 மாநிலங்களுக்கு நொவம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைiமையிலான ஆளும் ஐக்கிய சோசலிச கட்சி 20 மாகாணங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் தலைநகர் கரகாசும் அடங்கும். இருந்தும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மதுரோவின் வெற்றியை ஊழல் மோசடியால் பெறப்பட்டது என அமெரிக்கா சித்தரித்தது போல இந்த மாநிலத் தேர்தல்களையும் அமெரிக்கா அதனடிப்படையில் குறை கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்தக் குற்றசச்சாட்டு அடிப்படையற்ற, வெறும் காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட ஒன்று. 23 மாநிலங்களில் மோசடி மூலம் வெற்றி பெற்றவர்கள் ஏன் மற்ற மாநிலங்களையும் கூட கைப்பற்றாமல் விட்டு வைத்தார்கள்?

அமெரிக்கா என்னதான் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினாலும், அமெரிக்காவின் கூட்டாளிகளான ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தத் தேர்தலைக் கண்காணித்துள்ளனர். ஆனால் அவர்கள் தேர்தலில் மோசடிகள் இடம் பெற்றதாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

அதுமட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாக வெனிசூலாவில் நடைபெற்று வந்த தேர்தல்களைப் புறக்கணித்து வந்த வலதுசாரி எதிர்க்கட்சியினர் இந்தத் தேர்தலில் பங்குபற்றியுள்ளனர். அவர்களை இந்தத் தேர்தலில் பங்குபற்ற வலியுறுத்தி நோர்வேயும் நெதர்லாந்தும் அவர்களுடன் மெக்சிக்கோவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்திருந்தனர். எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே அமெரிக்காவின் ஆதரவு நாடுகளான நோர்வேயும் நெதர்லாந்தும் அவர்களை இந்தத் தேர்தலில் போட்டியிட வைத்திருந்தனர்.

ஆனால், தேர்தல் முறைகேடாக நடந்தது என எதிர்க்கட்சிகளோ அல்லது அவர்களை வலியுறுத்திப் போட்டியிட வைத்த இரு ஐரோப்பிய நாடுகளோ கூட இதுவரை குற்றச்சாட்டுகள் எதையும் முன் வைக்கவில்லை.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் தேசிய சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் இந்தத் தேர்தலைக் கண்காணிக்க வெனிசூலா சென்றிருந்தனர். அவர்கள் தலைநகர் கரகாஸ் உட்பட சில மாநிலங்களில் உள்ள 12 வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பை அவதானித்தனர். அவர்கள் பின்னர் தமது கண்காணிப்பு சம்பந்தமாக அறிக்கையிடுகையில் பின்வருமாறு கூறியுள்ளனர்:

‘எமது அவதானிப்பில் தேர்தல் நடுநிலைமையாகவும், வெளிப்படையாகவும் இருந்ததுடன், வாக்காளர்கள் நம்பிக்கையுடன் இருந்ததையும் காண முடிந்தது. தொழில்நுட்ப ரீதியில் பார்க்கையில் தேர்தல் முறைமை அடிப்படையில் வெளிப்படையானதாகவும், செயல்படும் சக்தியைக் கொண்டதாகவும் (வாக்களிப்பு ஊழியர்கள், இணைப்பாளர்கள், கடமைக்கான தலைவர்கள்), நல்ல வாக்களிப்பு இயந்திரங்களுடன் ஒன்றுபட்ட தேர்தல் முறையைக் கொண்டதாகவும் இருந்தது’.

மேலும் அவர்கள் கூறுகையில்,

‘எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் கூட வாக்களிப்பு முறையில் நம்பிக்கை கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மேலதிகமாக, வாக்களிப்பு நிலையங்களில் அது திறக்கப்பட்ட போதும் முடிக்கப்பட்ட போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தேர்தல் சட்டபூர்வமானவை என்பதும் எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலில் பங்குபற்றியதிலிருந்தும், சாட்சியங்களிலிருந்தும் தெரிய வந்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வெனிசூலாவின் தேர்தலைக் கண்காணித்த அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பாளர்களுக்கோ அல்லது தேர்தலில் பங்குபற்றிய எதிர்க் கட்சியினரின் தெரியாத ‘தேர்தல் மோசடி’ அமெரிக்காவின் காமாலைக் கண்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது என்றால், அது அமெரிக்காவைப் பீடித்துள்ள ஏகாதிபத்தியத் தன்மையுள்ள, ஜனநாயக விரோதமான அடிப்படையான நோயின் தாக்கமே தவிர வேறு எதுவுமல்ல.

திரும்பி வந்தார் திலகர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான  மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது .   

வித்தை காட்டுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்தால் தீர்வு காண முடியாது என்பதையே, நாடாளுமன்றத்தில் கடந்த 12ஆம் திகதி, நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ செயலணியில் மூன்று தமிழர்கள் சேர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானாந்தராஜா ஆகியோரே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.