இலங்கை: கொரனா செய்திகள்

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும், நாளை (08) கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக, கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல் வைத்தியஅதிகாரி வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மற்றொரு சர்வதேச பிரேரணை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் அரச தலைவர்கள், படை அதிகாரிகளைக் குறி வைத்து, ஒரு பிரேரணையை நிறைவேற்றி, மூன்று மாதங்கள் முடிவடையும் முன்னர், ஐரோப்பிய நாடாளுமன்றமும் இலங்கை அரசாங்கத்தைக் கதி கலங்கச் செய்யும் வகையில், பிரேரணை ஒன்றைக் கடந்த 10 ஆம் திகதி நிறைவேற்றியுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோஃபார்ம் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. 10 இலட்சம் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று(09) அதிகாலை 5.02 மணியளவில்  வந்தடைந்துள்ளது.

கொரனா: பெருவில் மோசமான உயிரிழப்பு வீதம்

பெருவானாது கொரோனாவால் உயிரிழந்த தமது உத்தியோகபூர்வ எண்ணிக்கையை 180,764ஆக நேற்று ஏறத்தாழ மூன்று மடங்காக்கியுள்ளது. அரசாங்க மீளாய்வொன்றைத் தொடர்ந்தே பெரு இவ்வாறு உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மாற்றியுள்ள நிலையில், உலகின் மோசமான இறப்பு வீதத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் ஆயிரத்து 434 ​பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 825ஆக அதிகரித்துள்ளது. 

நினைவேந்தலில் ஈடுபட்டஎண்மர் கைது

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் வைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்த 8 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், இன்று (18) கைதுசெய்து செய்யப்பட்டுள்ளனர் என கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

சாணத்தில் குளித்து, கோமியத்தை அருந்தும் முட்டாள்தனம்

சாணத்தில் குளித்தல், சாணத்தை அள்ளி உடல்முழுவதும் தேய்த்துக்கொள்ளல், கோமியத்தைக் குடித்தல், அதில் நீராடுதல் தொடர்பிலான புகைப்படங்களுடன் கூடிய செய்திகள், இந்திய ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன. சாணமும் கோமியமும் விஷகிருமிகளை அழிக்கும் கிருமிநாசினிகளாகவே, முன்னைய காலங்களிலிருந்து பார்க்கப்படுகின்றன.

கே.ஆர்.கௌரி: பொதுவுடைமை நாயகி!

கேரளத்தின் உத்வேகமிக்க கம்யூனிஸ்ட் தலைவரான கே.ஆர்.கௌரி (102), முதுமை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக செவ்வாய் அன்று காலமானார். கேரளப் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காகக் குரல் கொடுத்த கௌரி, கேரளச் சட்டமன்றத்தில் அதிக காலம் பணியாற்றிய பெண் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தின் மிக வயதான பெண் உறுப்பினர், வயதான பெண் அமைச்சர், தேர்தல்களில் அதிக வெற்றியைப் பெற்றவர் எனப் பல முதன்மைகளுக்குச் சொந்தக்காரர். கேரளம் இதுவரை பார்த்த திறமையான நிர்வாகிகளுள் ஒருவர்.

எம்பிக்கொரு நீதி ஏழைக்கொரு ஒரு நீதியா?

நேற்றைய தினம் செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரனின் பிரேத்தியேக செயலாளர் முரளி என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு ள்ளார். 
அதனடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இலங்கை தமிழர்களுக்கானதா சீமானின் அரசியல்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கின்றது. கலைஞர் மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், தி.மு.கவின் தலைவராக மு.க. ஸ்டாலின் எதிர்கொண்ட, முதலாவது சட்டமன்றத் தேர்தலிலேயே அவர், அறுதிப் பெரும்பான்மையுள்ள வெற்றியைப் பெற்றிருக்கின்றார்.