இளநீர் விலை 300 ஐ தாண்டியது

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இளநீர் விலை கடந்த நாட்களில் 300 ரூபாயைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய அளவிலான இளநீர் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். 

கொலையாளியை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்றத்தில் இதனை இன்று (20) தெரிவித்தார்.

உணவகங்களில் திடீர் சோதனை

பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில்  கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

எம்.பி ஆகிறார்‌ ரணில்

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றத்தில் வைத்து சுடப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற வளாகத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றி வருகின்றார். இதன்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வரலாற்றில் மிகப்பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது

கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் ஒரு பொருளாதார சூழலை நாங்கள் உருவாக்கி வருகிறோம். 2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவோம். யாரும் பயப்பட வேண்டாம். முதன்மைக் கணக்கு இரண்டரை தசமப் புள்ளிகளின் உபரியைப் பராமரிப்பதாகும். மாற்று விகிதங்கள் இனி அதிகமாக ஏற்ற இறக்கமடையாத ஒரு செயல்முறை அமைக்கப்பட்டு வருகிறது.

திராய்க்கேணி படுகொலைகள்

‘ஜிகாத்’ ஊர்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய புலிகளை எதிர் கொள்ள இயலாத முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டில்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், புத்தாண்டு காலத்தில் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைத்  தொடர்ச்சியாக விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

12 பேரை நாடுகடத்த உத்தரவு

சுற்றுலாப் பயணிகளாக வந்து விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த   சீன பிரஜைகள் 12 பேரையும் ஒரு வியட்நாம் பிரஜையையும்  உடனடியாக நாடு கடத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார்.