யுத்தம் முடிந்ததாக அறிவிக்கும் போது பிரபாகரன் உயிருடனேயே இருந்தார் – சரத் பொன்சேகா

வெள்ளைக் கொடி விவகாரத்தை விசாரணை செய்து தவறிழைத்தோர் தண்டிக்கப்படவேண்டும்

* நிலத்தை முத்தமிடும் போது மஹிந்தவுக்கு எதுவும் தெரியாது

* பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய மஹிந்தவுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

(“யுத்தம் முடிந்ததாக அறிவிக்கும் போது பிரபாகரன் உயிருடனேயே இருந்தார் – சரத் பொன்சேகா” தொடர்ந்து வாசிக்க…)

மக்களின் கருத்தறியும் குழு சம்பந்தனுடன் சந்திப்பு ; இறுதி அறிக்கை விரைவில் அரசிடம்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவினர் நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றி நாடு முழுவதிலும் மக்களிடம் பெற்ற கருத்துக்கள் அடங்கிய இறுதி அறிக்கையை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவிருப்பதாக அக்குழுவினர் தன்னிடம் உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

(“மக்களின் கருத்தறியும் குழு சம்பந்தனுடன் சந்திப்பு ; இறுதி அறிக்கை விரைவில் அரசிடம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலமைப்பு சபை ஏப்ரலில் கூடுகிறது, கட்சித் தலைவர் கூட்டத்தில் இறுதி முடிவு

அரசியலமைப்பு சபை ஏப்ரல் முதல் வாரத்தில் கூட இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடை பெற இருக்கும் கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக அறிய வருகிறது. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை கடந்த வாரம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சுதந்திரக் கட்சி மற்றும் மாற்று எதிர்க்கட்சி என்பவற்றின் யோசனைகள் அடங்கலாக மேற்படி பிரேரணை திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

(“அரசியலமைப்பு சபை ஏப்ரலில் கூடுகிறது, கட்சித் தலைவர் கூட்டத்தில் இறுதி முடிவு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக சட்டமன்ற தேர்தல்: விஜயகாந்த் அமைத்துள்ள சக்கரவியூகம்

தனித்துப் போட்டி’ என்று அறிவித்து, தனக்குத் தானே ‘சக்கர வியூகத்தை’ வகுத்துக் கொண்டிருக்கிறார் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவரும் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படுபவருமான நடிகர் விஜயகாந்த். 2016 சட்டமன்றத் தேர்தல் களத்துக்கான வியூகம் பற்றி, பெப்ரவரி 20ஆம் திகதி, பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்தார். பொதுக்கூட்டத்தில் நான் ‘கிங்’ ஆக இருக்க வேண்டுமா அல்லது ‘கிங் மேக்கராக’ இருக்க வேண்டுமா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டு, ‘தொண்டர்கள், கிங்காக இருக்கச் சொல்லி விட்டார்கள்’ என்று அறிவித்தார்.

(“தமிழக சட்டமன்ற தேர்தல்: விஜயகாந்த் அமைத்துள்ள சக்கரவியூகம்” தொடர்ந்து வாசிக்க…)

உயிருடனோ இறந்தோ அசாட் வெளியேற வேண்டும்

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டுமாயின், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், உயிருடனோ அல்லது இறந்தோ, பதவியை விட்டு வெளியேற வேண்டுமென, சிரிய எதிரணிகள் வலியுறுத்தியுள்ளன. சிரியப் பேச்சுவார்த்தைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில், அங்கு வைத்து, இடைக்கால அரசாங்கம் அல்லது நிர்வாகப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை முயன்று வருகின்றது.

(“உயிருடனோ இறந்தோ அசாட் வெளியேற வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

சுந்தர் எனும் தோழனாய்

ஒரு வருசம் கடந்து போனது உன் நினைவில்.எப்படி இன்னும் நம்ப மறுக்கிறது மனம் ,கடந்து செல்லும் நினைவுகள் ,காலம் எனும் கடலில் நாம் கரைந்து போகும் என்பார்கள்.எல்லாம் நிஜமாய் எப்போதும் நம்முள். 1974 முதல் சந்திப்பு தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து ”ஈழ விடுதலை இயக்கம் ” (தமிழீழ விடுதலை இயக்கமல்ல) மகிழ்த்த நேரம்,சேனையூர் மகாவித்தியாலய ஆசிரியர் விடுதியில் ஆசிரியர் புலோலியூர் .தா.ஜெயவீரசிங்கம் அவர்களோடு அன்னலிங்க அய்யா,தங்க மகேந்திரன் அத்தோடு சுந்தரும்.ஈழவிடுதலை இயக்க பரப்புரைக்கு புறப்படுகிறோம் .சம்பூரில் தோடம் பழம்,கிளிவெட்டியில் தவகுமார்,கங்கு வேலியில் கிருபா,பட்டித்திடலில் கவிஞர் ,வீரப்பா,மல்லிகைத்தீவில் சுரேஸ்,பள்ளிகுடியிருப்பு,பச்சநூல் ,கூனித்தீவு ஈச்சலம்பத்தை, என கொட்டியாரத்தின் கிராமங்கள் தோறும் பலநூறு பேரின் அணி சேர்ப்பு.நடந்தே கழிகிறது எங்கள் பயணம் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் எங்களோடு இணைகின்றனர்.

(“சுந்தர் எனும் தோழனாய்” தொடர்ந்து வாசிக்க…)

லீகுவான்யூ “ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்”

லீகுவான்யூ “ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்”. அதனால், அவர் நல்லவர் என்று நாம் போலித் தமிழர் கட்சியினர் சொல்லித் திரிகின்றனர். சொந்த நாட்டு மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சர்வாதிகார ஆட்சி நடத்திய லீகுவான்யூ, தமிழர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் நல்லவராகி விட்டாராம். சிங்கப்பூரில் மலே தேசியவாதிகளையும், சீனக் கம்யூனிஸ்டுகளையும் சிறையில் அடைத்து வருத்திய லீகுவான்யூ, நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராம்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய லீகுவான் யூ, அயலில் இருக்கும் அச்சே மக்களுக்கு ஆதரவாக பேசாத காரணம் என்ன? இந்தோனேசியாவின் அச்சே மாநிலம், சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கிறது. மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்ட அச்சே மக்கள், நீண்ட காலமாக தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். அச்சே மாநிலத்தில், இந்தோனேசிய படையினர் நடத்திய இனப்படுகொலையை கண்டித்து, லீகுவான்யூ ஒரு வார்த்தை பேசி இருப்பாரா?

(“லீகுவான்யூ “ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்”” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். உயர் பாதுகாப்பு வலயத்தில் 700 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

 

வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து 700 ஏக்கர் காணி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களுக்கு மீள கையளிக்கப்படவுள்ளது. இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் மேற்படி 700 ஏக்கர் காணிகளை மக்களுக்குக் கையளிப்பதுடன் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65,000 வீடுகளுக்கான காணிகளையும் பார்வையிடவுள்ளார். 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்படவுள்ளது.

(“யாழ். உயர் பாதுகாப்பு வலயத்தில் 700 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்!

“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்” என்று விஜயகாந்த் அறிவித்ததையடுத்து சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கிடக்கிறது. பாஜக கூட்டணி அல்லது திமுக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என ஏதாவது ஒன்றில் தேமுதிக ஐக்கியமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ‘தனித்துக் களம் காணுவோம் ,எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்’ என்று விஜயகாந்த் முடிவாகக் கூறியது மற்ற கட்சிகள் மத்தியில் உண்மையிலேயே ஒருவித கலக்கத்தை உண்டாக்கிவிட்டது.

(“விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்!” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு டிவி நிகழ்ச்சி… ஒரே இரவில் ‘ஜோக்கர்’ ஆன ‘டொனால்ட் ட்ரம்ப்’!

அரசியல் – உலகின் பழமையான தொழில்; ஆனால் அதன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நவீனப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது என்றால் அது மிகையல்ல. பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் உலகெங்கிலும் வேறுபட்டுத் தெரிந்தாலும், மனிதனின் அடைப்படை மனோபாவம் மாறுவதில்லை. வெகுஜனங்களைப் பொறுத்த வரையில் அது இரண்டு பிரிவுகளின் கீழ் வகுக்கப்படுகிறது. அவை முறையே, நாம் ஆளப்படவேண்டியவர்கள் என்பதும், நாம் ஆள வேண்டியவர்கள் என்பதுதான்.

(“ஒரு டிவி நிகழ்ச்சி… ஒரே இரவில் ‘ஜோக்கர்’ ஆன ‘டொனால்ட் ட்ரம்ப்’!” தொடர்ந்து வாசிக்க…)