கொழும்பின் சதியா? யாழின் விதியா? –

(கம்பவாரிதி ஜெயராஜ்)

உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத் தலைமைக்கான ஆயத்தத்தை தமிழ்மக்கள் பேரவை என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான். கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும், முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தேர்தல் தோல்வியின் பின், தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து, கிடைக்காமல் போனதில் கோபமுற்றிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தனது மூத்த உறுப்புரிமையை வைத்து, தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன, பேராசிரியர் சிற்றம்பலமும் என,கூட்டமைப்பின் உட்பகைவர்கள் ஒன்றுசேர்ந்து, இதுவரை பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டி, இரட்டை வேடம் போட்டுவந்த முதலமைச்சரின் தலைமையில், இரகசியக் கூட்டம் போட்டு, மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை, உருவாக்கியிருக்கிறார்கள்.

(“கொழும்பின் சதியா? யாழின் விதியா? –” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை மீதான மூன்றாவது யுத்தத்துக்கு தயாராகும் சர்வதேசம் !

இலங்கையில் மூன்றாவது யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் கடந்த அரைநூற்றாண்டுகளாக செய்த தியாகங்கள் இழப்புக்கள் துன்பங்களுக்கெல்லாம் அவர்களுக்கு கிடைத்தது என்ன? தனது ஆயுதபலத்தின் ஊடாக இலங்கையில் தன்னிச்சையான சுதந்திர தேசம் ஒன்றை உருவாக்கி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த தமிழர்களின் இன்றைய நிலை என்ன? தமிழ் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதா? அல்லது தமிழர்களின் போராட்டம் அவர்களது இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துகொண்டிருக்கின்றதா? என்ற பல கேள்விகளுடன் தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்து ஆராயவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

(“இலங்கை மீதான மூன்றாவது யுத்தத்துக்கு தயாராகும் சர்வதேசம் !” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் வன்முறை

1956 பொதுத் தேர்தலில் திரு.வி.என. நவரத்தினம் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.இது காங்கிரஸ் கட்சியின் பலமான கோட்டை.இவரை ஒருநாள் வழியில் கண்ட காங்கிரஸ் எம்.பி குமாரசாமி என்னை எதிர்த்து என்ன தைரியத்தில் போட்டியிடுகிறாய் என கிண்டலாகவே கேட்டார்.அந்தளவு உறுதியான செல்வாக்குடன் குமாரசாமி இருந்தார்.

(“தேர்தல் வன்முறை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக வழி நடத்தும் பொருட்டும் அதனை மக்கள் மயப்படுத்தும் பொருட்டும் சிவில் சமூகக் குழுக்கள், அரசியற் கட்சிகள், தொழிற் சங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கடந்த 19 டிசம்பர் 2015 அன்று உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை தமிழ் சிவில் சமூக அமையம் வரவேற்பதோடு இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியில் பங்கெடுப்பதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

(“தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு

சமூகங்களுக்கிடையிலான மோதல்களைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்களை  தடுப்பதற்காக, தண்டனைக் கோவையிலும் குற்றவியல் நடைமுறைக் கோவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, அரசாங்கம் முன்வைத்த இரு நகல் சட்டமூலங்களை அரசாங்கமே வாபஸ் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்தே அரசாங்கம் பின் வாங்கியது.

(“வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)

சூளைமேடு அழைப்பாணை பொய்யான செய்தி – டக்ளஸ்

இந்தியா, தமிழகம் சூளைமேடுப் பகுதியில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தி பொய்யானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மாணவர்களுக்கு ஹெரோய்ன் விற்ற நால்வர் கைது

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே வைத்து, மாணவர்களுக்கு ஹெரோய்ன் போதைப்பொருட்களை விற்பனைச் செய்துகொண்டிருந்தனர் என்ற குற்றஞ்சாட்டில் நால்வரை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நால்வரிடமிருந்தும் ஹேரோய்ன் பக்கற்றுகள் நான்கை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிழவரின் துணிவு – கம்பவாருதி ஜெயராஜ்

சம்பந்தன் உணர்ச்சிவயப்படாது நிதானமாக பேசியபேச்சொன்று சென்ற வாரப்பத்திரிகைகளில் பரவலாய் இடம்பிடித்தது. தனது அரசியல் அனுபவத்தை,அப்பேச்சில் காட்டியிருக்கிறார்சம்பந்தன். மட்டக்களப்பில் இடம்பெற்ற, தனதுகட்சி ஆதரவாளர்களுக்கான கூட்டம்ஒன்றிலேயே, இவ்வுரையை நிகழ்த்தியிருக்கிறார்.பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் வடமாகாண முதலமைச்சருக்குமிடையிலான முரண்பாடு,பெரும் சர்ச்சையாய் வெடித்து,அண்மைக்காலமாகப் பெரும் பரபரப்பு நிலவியது.

(“கிழவரின் துணிவு – கம்பவாருதி ஜெயராஜ்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி – கொழும்பு மற்றும் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித்தடங்களை விரைவில் துவக்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

(“இலங்கை- இந்திய பயணிகள் கப்பல்சேவை ‘விரைவில் தொடங்கலாம்’” தொடர்ந்து வாசிக்க…)