தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். 2008ஆம் ஆண்டு காத்தான்குடி, ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
ஈ பி டி பி க்குள் பிளவு வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?
காத்திருந்த செய்தி கிடைத்ததும் போட்டுத் தாக்கும் முனைப்பு மீண்டும் முளைவிடுகிறது. உடைந்தது ஈபிடிப!, பிளந்தது கட்சி! வெளியேறினார் சந்திரகுமார்! என தம் விருப்பு தலையங்கம் இட்டு தம்மை திருப்திப்படுத்த முற்பட்ட எதிர்பார்ப்பு அன்பர்கள் அறியாத ஒரு விடயம், ஈபிடிபியில் தலை இருக்க வால்கள் ஆட முடியாது. அவை வாலாட்ட மட்டுமே முடியும் என்பதே. தன்னை முன்னிலை படுத்துவதில் தேவானந்தாவுடன் யாரும் போட்டி போட முடியாது. நண்பர் கூட்டத்திற்கும் தலைமை வகிப்பார், இயக்கத்திலும் முன்னிலை பெறுவார் கட்சியிலும், அரசியலிலும் தன் தலைமையை தக்க வைப்பார்.
(“ஈ பி டி பி க்குள் பிளவு வெறு வாய்களுக்கு கிடைத்த அவல்?” தொடர்ந்து வாசிக்க…)
பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!
பெரு நிறுவனங்கள் முதல் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் வரை ஊழியர்களின் நிலைமை மிக மோசம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நான் பணிபுரிந்த ‘ஹப்ஸ்பாட்’ எனும் மென்பொருள் நிறுவனத்தில், ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுவதைப் ‘பட்டம் பெறுதல்’ என்று அழைப்பார்கள். அணியினர் அனைவருக்கும் பாஸிடமிருந்து குதூகலமான மின்னஞ்சல் ஒன்று வரும். “அன்புள்ள அணியினருக்கு, நம்முடன் பணிபுரிந்த ‘இன்னார்’ பட்டம் பெற்றுவிட்டார் என்பதைத் தெரிவிக்கவே இந்த மின்னஞ்சல்.
(“பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!” தொடர்ந்து வாசிக்க…)
முதலாளிக்கும் மூளை இருக்கின்றது
பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று. இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன, பைத்தியக்காரன் பத்துலட்சம் டொலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள். புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர்.
சி.வி – ஜனாதிபதி சந்திப்பு இன்று இடம்பெறாது
(“சி.வி – ஜனாதிபதி சந்திப்பு இன்று இடம்பெறாது” தொடர்ந்து வாசிக்க…)
பற்குணம்(பதிவு 11)
எங்கள் பெரிய அண்ணன் திருமணமாகி அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.எங்கள் குடும்பத்தில் அம்மா வழியிலும் சரி,அய்யா வழியிலும் குடும்பத்துக்கு ஒரு பெண்பிள்ளைதான்.ஆனால் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஆண்பிள்ளைகள் .அந்த பெண்பிள்ளை வெற்றிடத்தைப் மாமா மகள் ராணி என்பவள் நிரப்பினாள்.இதன் பின் எங்கள் குடும்ப வாரிசாக பெண் பிள்ளையாக அண்ணன் மகள் பிறந்தாள்.இவள் மீது பற்குணம் மிகுந்த அன்பு செலுத்தினார்.அதே போலவே அவளும் சித்தப்பா என மிகுந்த பாசம் வைத்திருந்தாள்.
பொது ஜனம் கேட்கின்றார்
இந்தியாவில் இருந்து பேச்சாளர்களை வரவழைத்து பட்டிமன்றம் நடத்தும் வடமாகாண கல்வி அமைச்சு அந்த பணத்தில் இந்த வன்னிப் பாடசாலைகளுக்கு ஏன் கூரை அமைத்து கொடுக்க முடியாது?
யாழ்.மண் சாதாரண மண்ணல்ல! இந்தியத் துணைத்தூதுவர்
யாழ் மண் சாதாரண பூமி கிடையாது. அந்த மண்ணை சாதாரணமாக நாங்கள் கருதவதில்லை. இதுவொரு புண்ணிய பூமி, இதுவொரு இலக்கிய பூமி. இதுவொரு சிந்தனைபூமி, இதுவொரு அறிவுடைய பூமி என இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவில் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி பி.ஆர்.அம்பேத்கார் அவர்களது 125ஆவது பிறந்த தினத்தினையும், தமிழ் சித்திரைப்பிறப்பினை கொண்டாடும் முகமாகவும் யாழ். இந்திய துணைத்தூதரகம் மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்வு நேற்று யாழ். நல்லூர் சங்கிலியன் தோப்பில் யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
(“யாழ்.மண் சாதாரண மண்ணல்ல! இந்தியத் துணைத்தூதுவர்” தொடர்ந்து வாசிக்க…)
அரசியலமைப்பு நடவடிக்கைக் குழுவின் முதலாவது கூட்டம் 28 ஆம் திகதி
நாட்டுக்கு ஏற்ற அரசியலமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் நடவடிக்கை குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறும். அரசியலமைப்பு சபையின் நடவடிக்கை குழு கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார். அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய நடவடிக்கை குழுவில் 21பேர் அங்கம் வகிக்கின்றனர். இக்குழு 28ஆம் திகதி முதன் முறையாக கூடுவதுடன் அதன் பின்னர் வாரம் ஒரு முறை கூடி அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும்.
EPDP கட்சியிலிருந்து விலகி, புதிய செயற்பாட்டைத் தொடரவுள்ளேன் – சந்திரகுமார்
தமிழ் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து எனது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமார் அவா்கள் தெரிவித்துள்ளார் தமிழ்பேசும் மக்களுக்குரிய நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளுவதற்கு அர்த்த புர்வமாகச் செயற்படவுள்ளதாகவும் இதற்கான புதிய சூழ்நிலைகள் உருவாகி வரும் சந்தர்ப்பத்தில் பல்வேறு சக்திகளையும் அவற்றின் தனித்தன்மைகளுடன் ஒன்றிணைய வைத்துச் செயலாற்ற விரும்புவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்திருக்கிறார்.
(“EPDP கட்சியிலிருந்து விலகி, புதிய செயற்பாட்டைத் தொடரவுள்ளேன் – சந்திரகுமார்” தொடர்ந்து வாசிக்க…)