பேருந்திலோ, தொடர்வண்டியிலோ அதிகபட்சம் அரைமணி நேரம் யாருடனாவது புதிதாக பேசிக்கொண்டு வந்தால் போதும், அடுத்த நிமிடம் “நீங்க எந்த ஆளுங்க…?” என்று கேட்டுவிடுவதுதான் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம். தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடும் வழக்கம் தமிழ்நாட்டில் தற்போது குறைந்துவிட்டதால் இப்படி சாதியை நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ளும் தவறான பழக்கம் நம் மக்களிடையே தோன்றியிருக்கலாம். இதோ இப்போது சங்கர் என்ற தலித் இளைஞரை சாதிக்கு பலி கொடுத்துவிட்டது தமிழ்நாடு. அண்மைக்காலங்களில் தமிழகத்தை உலுக்கிய “தலித் இளைஞர்களின்” கொலைகளில் இது மூன்றாவது கொலை.
துறைமுக நகர் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி
கொழும்பு துறைமுக நகர்வேலைத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அங்கீகாரம் அளித்திருப்பதை சீன தொடர்பாடல் கட்டுமான துணை நிறுவனம் நேற்று உறுதி செய்தது. இதேவேளை பரஸ்பர நன்மையளிக்க கூடிய தீர்வை நோக்கியதான இலங்கை அரசாங்கத்தின் நேர்மறைவான ஒருபடி முன்னோக்கிய கடப்பாடுகளையும் மேற்படி நிறுவனம் பாராட்டியுள்ளது.
(“துறைமுக நகர் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி” தொடர்ந்து வாசிக்க…)
187 கிலோ மன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு
மன்னார் -சிலாபத்துறை, முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுக் காலை(16) இடம்பெற்றது. மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மாவட்ட மதுவரி திணைக்கள பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் சிலாபத்துறை கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடத்தியுள்ளனர்.
(“187 கிலோ மன்னாரில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு” தொடர்ந்து வாசிக்க…)
பற்குணம் -(பதிவு-2)
எங்கள் அம்மாவின் பெயர் வள்ளிப்பிள்ளை.மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் பிள்ளை.சிறுவயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் அண்ணன்கள் அரவணைப்பில் வாழ்ந்தவர்.அய்யாவும் அம்மாவும் காதல் திருமணம்தான்.அம்மா மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். யாழ் குடாநாட்டின் பெரும் வயல்நிலப்பரப்பான தனங்கிளப்பு வயல்களில் அம்மாவின் காலடிகள் பதித்தவர்.எனது கிராமத்தில் இருந்து கேரதீவுப் -சங்குப்பிட்டி பால எல்லைவரை சென்று கூலிவேலை செய்து உழைத்தவர்.
பிரதமரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் மகிந்த
எனது அரசாங்கத்தின் வெளிப்படுத்தப்படாத கடன்களும் கடன் பொறுப்புகளும் இப்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை அறிக்கையொன்றை ராஜபக்ஷ விடுத்திருக்கிறார். அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
வங்கிகளுடன் அவை நடவடிக்கைகளில் தாமாகவே செயற்படுகின்றன. அரச நிறுவனங்களினால் கடன் பெற்றுக் கொள்ளப்படுகின்றமை பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட சட்டங்களின் மூலமே நிருவகிக்கப்படுகிறது.
(“பிரதமரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் மகிந்த” தொடர்ந்து வாசிக்க…)
சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறும்
சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகளை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். சிரிய முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான ஐ.நா சபையினால் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த திங்கட்கிழமையன்று, இரவு நேரத்திலேயே இந்த அறிவிப்பு விடுவிக்கப்பட்டது.
(“சிரியாவிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறும்” தொடர்ந்து வாசிக்க…)
எமது அரசியல் போராட்டத்தில் திருமதி மங்கையற்கரசி ஓர் விடிவெள்ளி – ஆனந்தசங்கரி
இலங்கை தமிழர் வரலாற்றில் தமிழ் மக்களின் பிரச்சனையில் தீவிரமாக செயற்பட்டு பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்களையும் பட்டு நியாயமற்ற முறையில் உயிர் பறிக்கப்பட்ட ஒரு உத்தம தலைவன் எம்மை விட்டு பிரிந்து 27 வருடங்களுக்குள் அமிர்தலிங்கம் யார் என்று கேட்கின்ற இளைய தலைமுறையினருக்கு திருமதி மங்கையற்கரசி யாரென்று விளங்கப்படுத்துவது சுலபமான காரியமல்ல.
(“எமது அரசியல் போராட்டத்தில் திருமதி மங்கையற்கரசி ஓர் விடிவெள்ளி – ஆனந்தசங்கரி” தொடர்ந்து வாசிக்க…)
ஏழரை மணித்தியால மின்வெட்டு
எதிர்வரும் இரு நாட்களில், நாளொன்றுக்கு ஏழரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என்று தெரிவித்த அமைச்சு, காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் கூறியது.
மாகாணசபை அமர்வில் பிள்ளையான்
இன்று (15) இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில், மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார். திருகோணமலை பேரவைச் செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில் இன்றையதினம் (15) இடம்பெற்ற அமர்வில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன், சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்டார்.
பற்குணம் (பதிவு 1)
(இது ஒரு தனி நபர் பற்றிய பதிவாக பலராலும் பார்க்கப்படலாம். ஆனால் என்பார்வையில் ‘பற்குணம்’ என்பது ஒரு சமூகத்தின் குறியீடாகவே நான் பார்கின்றேன். இந்தப்பதிவு தமிழ் சமூகத்திற்குள் நிலவி வந்த வருகின்ற ‘சிறுபான்மை’ என்ற கருத்தியலின் உள் கட்டமைப்பை தெளிவுபடுத்த உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு எனவே இதனைப் இங்கு தொடரந்தும் பிரசுரிக்கின்றேன் – ஆசிரியர்)
எங்கள் பிறப்புக்கும் அறிவுக்கும் மூலகாரணமான அய்யாவில் இருந்து ஆரம்பிக்கின்றேன். அய்யா மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர்.ஒரே சகோதரி.சிறுவயதில் தாயை இழந்து தனிமையில் துன்பப்பட்டவர்.அவருக்கு கல்விமீது தீராத ஆசை.எமது கிராமத்தில் அந்தக் காலத்தில் சிறுபாடசாலை இயங்கியது.அதில் உயர் சாதிமாணவரகளுக்கே கற்பித்தனர்.அதில் அய்யாவின் வயதை ஒத்த சிலர் படிக்க விரும்ப அவர்களும் அனுமதித்தார்கள்.ஆனால் வெளியே நின்றுதான் படிக்க வேண்டும்.கோடை காலம் வெயில்.மழைகாலம் வெள்ளம்.இதைச் சகித்தே படிக்கவேண்டும்.