தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அடுத்து வரும் காலங்களில் ஒரு குழுவாக இணைந்தே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி இடம்பெறும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர், பங்காளிக் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான விசேட சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுப் புதன்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சர்வவேஸ்வரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.), கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
(“கூட்டமைப்பு குழுவாக இணைந்து செயற்படும்? சம்பந்தன் உறுதி!” தொடர்ந்து வாசிக்க…)