ஏழரை மணித்தியால மின்வெட்டு

எதிர்வரும் இரு நாட்களில், நாளொன்றுக்கு ஏழரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என்று தெரிவித்த அமைச்சு, காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் கூறியது.

மாகாணசபை அமர்வில் பிள்ளையான்

இன்று (15) இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில், மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார். திருகோணமலை பேரவைச் செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில் இன்றையதினம் (15) இடம்பெற்ற அமர்வில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன், சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அழைத்து வரப்பட்டார்.

பற்குணம் (பதிவு 1)

(இது ஒரு தனி நபர் பற்றிய பதிவாக பலராலும் பார்க்கப்படலாம். ஆனால் என்பார்வையில் ‘பற்குணம்’ என்பது ஒரு சமூகத்தின் குறியீடாகவே நான் பார்கின்றேன். இந்தப்பதிவு தமிழ் சமூகத்திற்குள் நிலவி வந்த வருகின்ற ‘சிறுபான்மை’ என்ற கருத்தியலின் உள் கட்டமைப்பை தெளிவுபடுத்த உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு எனவே இதனைப் இங்கு தொடரந்தும் பிரசுரிக்கின்றேன் – ஆசிரியர்)

எங்கள் பிறப்புக்கும் அறிவுக்கும் மூலகாரணமான அய்யாவில் இருந்து ஆரம்பிக்கின்றேன். அய்யா மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர்.ஒரே சகோதரி.சிறுவயதில் தாயை இழந்து தனிமையில் துன்பப்பட்டவர்.அவருக்கு கல்விமீது தீராத ஆசை.எமது கிராமத்தில் அந்தக் காலத்தில் சிறுபாடசாலை இயங்கியது.அதில் உயர் சாதிமாணவரகளுக்கே கற்பித்தனர்.அதில் அய்யாவின் வயதை ஒத்த சிலர் படிக்க விரும்ப அவர்களும் அனுமதித்தார்கள்.ஆனால் வெளியே நின்றுதான் படிக்க வேண்டும்.கோடை காலம் வெயில்.மழைகாலம் வெள்ளம்.இதைச் சகித்தே படிக்கவேண்டும்.

(“பற்குணம் (பதிவு 1)” தொடர்ந்து வாசிக்க…)

குமார் குணரத்னத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியற் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம், இன்று (14) உத்தரவிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டப்பட்டிருந்த இவர், கேகாலை, அருகுருவெல பகுதியில் வைத்து நவம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு இன்று வரை (14) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதுவரை தொடர்ச்சியாக 151ஆவது நாளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் நாடுகளிலிருந்த பினாமிகளின் சொத்துக் குவிப்பு வியாபாரம் ஆட்டம்காண ஆரம்பித்தபோது

மகிந்தவிற்கு பின்னர் ஆட்சியிலமர்ந்த மைத்திரி அரசுடன் ஊடல் கொண்ட விக்னேஸ்வரனைப் புலம்பெயர் குழுக்கள் கையாள ஆரம்பித்தன. புலிகளின் அழிவின் பின்னர் புலம்பெயர் நாடுகளிலிருந்த பினாமிகளின் சொத்துக் குவிப்பு வியாபாரம் ஆட்டம்காண ஆரம்பித்தபோது தமதுவியாபாரத்திற்கு விலைபோகும் வியாபாரிகளை அவர்கள் தேட ஆரம்பித்தனர். அத் தேடலின் விளைவாக வட மாகாண சபையிலிருந்த விக்னேஸ்வரனும் அவரது சகாவான ஐங்கரநேசனும் இந்த வியாபார வலைப்பின்னலில் இணைந்துகொண்டனர்.

இன்றைய செய்திகள்
சிங்கக்கொடி ஏற்றி தேசியவாதி வேடத்தைக் கலைத்த விக்னேஸ்வரன் – பினாமிகள் எங்கே?
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்குத் தீனி போட ஆரம்பித்து இப்போது அண்ணளவாக இரண்டு வருடங்கள் நிறைவுறுகின்றன. சமூக வலைத்தளங்கள், தேசியம் என்ற பெயரில் ஊடக வியாபாரம் நடத்திய இணையங்கள், அரசியல் கட்சிகள் என்று விக்னேஸ்வரனை காட்டி மக்களை ஏமாற்றிய கும்பல்கள் பொதுவாகப் புலம்பெயர் நாடுகளிலேயே நிலை கொண்டிருந்தன. இவர்களில் பொதுவாக அனைவருமே மக்களின் அவலங்களையும் கண்ணீரையும் தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர்.

விக்கியை இயக்குவதற்கென்றே புலம்பெயர் நாடுகளில் குழுக்களும் தனி நபர்களும் உருவாகியிருந்தனர். அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலைகொண்டிருந்த இக் குழுக்களும் தனி நபர்களும் இந்திய மற்றும் அமெரிக்க நலன்களுக்காகச் செயற்படுபவர்களாகக் காணப்பட்டனர். மக்கள் நலனின் எந்த அக்கறையுமற்ற இக்குழுக்கள் விக்னேஸ்வரன் ஊடாக கட்டமைக்க முனைந்த சந்தர்ப்பவாத அரசியல் இன்று முகத்திரை கிழிக்கப்பட்டு நிர்வாணமாகத் தொங்க ஆரம்பித்துள்ளது.

ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனின் கூட்டணி, சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து நடத்தப்பட்ட அழிவை மூடி மறைத்து யாழ்ப்பாணத்தின் மூன்றில் ஒரு பகுதியின் நீரையும் நிலத்தையும் நஞ்சாக்க உதவியது.

புலிகளின் அழிவிற்குப் பின்னதாகவே தனக்கு அரசியல் பேசும் சுதந்திரம் கிடைத்திருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த விக்னேஸ்வரன் மகிந்த அரசுடன் தனது அரசியல் உறவை வளர்த்துக்கொண்டார். மகிந்தவிற்கு பின்னர் ஆட்சியிலமர்ந்த மைத்திரி அரசுடன் ஊடல் கொண்ட விக்னேஸ்வரனைப் புலம்பெயர் குழுக்கள் கையாள ஆரம்பித்தன. புலிகளின் அழிவின் பின்னர் புலம்பெயர் நாடுகளிலிருந்த பினாமிகளின் சொத்துக் குவிப்பு வியாபாரம் ஆட்டம்காண ஆரம்பித்தபோது தமதுவியாபாரத்திற்கு விலைபோகும் வியாபாரிகளை அவர்கள் தேட ஆரம்பித்தனர். அத் தேடலின் விளைவாக வட மாகாண சபையிலிருந்த விக்னேஸ்வரனும் அவரது சகாவான ஐங்கரநேசனும் இந்த வியாபார வலைப்பின்னலில் இணைந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் வட மாகாண சபையில் விக்னேஸ்வரனால் வாசிக்கப்பட்ட பின்னர் அவர் பிரித்தானியாவிற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின்னர் முழுநேர தேசியவாத நாடகத்தை ஆரம்பித்த விக்னேஸ்வரன் கடந்தவாரத்தோடு அதனை முடிவிற்குக் கொண்டுவந்தார்.

ராஜபக்சவிற்கு எதிரான பொதுக்கூட்டம் ஒன்றில் பேரினவாதிகளுடன் இணைந்து சிங்கக்கொடி ஏந்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் புலம்பெயர் நாடுகள் முழுவதிலும் துரோகியாக்கப்பட்டதற்கான காரணம் வெளிப்படையானது. புலம்பெயர் பிழைப்புவாதிகள் ஊடாக அல்லாமல் நேரடியாகவே அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற கொலைகார அரசுகளுடன் நேரடியாகத் தொடர்புகளைப் பேணிக்கொண்ட கூட்டமைப்பு தமது பிடிக்குளிருந்து விலகிச் செல்கின்றது என்பது மட்டுமே புலம்பெயர் குழுக்களின் ஒரே துயரமாகக் காணப்பட்டது.

இன்று அதே சிங்கக்கொடியை ஏற்றிவைத்து தனது தேசியவாதி வேடத்தை விக்னேஸ்வரன் கலைத்துக்கொண்டார். இனிமேல் விக்னேஸ்வரனைப் பிரதியிட புதிய தனி நபர்களைத் தேடும் முயற்சியில் புலம்பெயர் வியாபாரக் குழுக்கள் ஆரம்பித்துவிடும். தவிர, விக்னேஸ்வரன் சிங்கக்கொடியை ஏற்றியபடியே புலம்பெயர் அமைப்புக்களின் கட்டுப்பாட்டினுள் செயற்படுவாரானால், அவரது தேசியவாதி வேடம் தொடரும் வாய்ப்புக்களும் உண்டு.

தமது அன்றாட வாழ்க்கையுடன் குறைந்தபட்சத் தொடர்புகளுமற்ற புலம்பெயர் பிழைப்புவாதிகள் இதுவரை நடத்திய அழிவு மக்கள் மத்தியிலிருந்து தோன்றக் கூடிய முன்னேறிய அரசியல் தலைமைகளை அழித்துச் சிதைத்துவிட்டது. அமெரிக்கா போன்ற கொலைகார ஏகபோக அரசுகளிடன் தமிழ்ப் பேசும் மக்களின் தலைவிதையை ஒப்படைத்துவிட்ட இப் பிழைப்புவாதிகள் இனிமேலும் மக்களை ஏமாற்றி வயிற்றுப்பிழைப்பு நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

(இனியொரு…)

புலம் பெயர் தேசங்களில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் புலி பினாமிகளே……

ஆரம்பத்தில் மிதவாத அரசியல் ஈழ தலைவர்களை துரோகி என்றீர்கள் அதற்க்கும் தலையாட்டினோம். பின் மாற்று போராட்ட தலைவர்களையும் போராளிகளையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். எல்லா சிங்கள அரசையும் சிங்கள தலைவர்களையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். முஸ்லிம்களை ஒதுக்கினீர்கள் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். இந்திய தலைவர்களையும் இந்தியாவையும் அவர்களோடு உறவு வைத்திருந்த தலைவர்களையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம்.

(“புலம் பெயர் தேசங்களில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் புலி பினாமிகளே……” தொடர்ந்து வாசிக்க…)

மார்ச் 14, மாமேதை, புரட்சியாளர் காரல் மார்க்சு நினைவுநாள்

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களை யும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுக ளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.

(“மார்ச் 14, மாமேதை, புரட்சியாளர் காரல் மார்க்சு நினைவுநாள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..!

 

அ.தி.மு.க.வில் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவரோ அல்லது இருவரோ ஸ்டார் அந்தஸ்தில் இருப்பார்கள். ஆனால் முதல் முறையாக ஓ.பி.எஸ், நத்தம், எடப்பாடி, வைத்தி, பழனியப்பன் என்று ஐவர் அடையாளம் காட்டப்பட்டனர். இது எப்படி நிகழ்ந்தது என்பதும், இதன் பின் விளைவு எப்படியிருந்தது என்றும் மனக் குமுறலோடு கொட்டித் தீர்க்கின்றனர் ஒரு காலத்தில் கட்சியில் கோலோச்சி நின்றவர்கள். ஐவரணியின் குட்டுக்கள் உடைந்ததின் பின்னணியில், மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ”அப்ரூவர்” ஆன கதையும் உள்ளது. திகில், திருப்பங்களுடன் நமக்கு கிடைத்த தகவல்களை அப்படியே இங்கு தருகிறோம்….

(“ஜெயலலிதாவிடம் ஐவரணி சிக்கியது இப்படித்தான்..!” தொடர்ந்து வாசிக்க…)

கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்: போலீசாரிடம் மன்றாடும் கௌசல்யா

கோவை : கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என ஆணவக்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த கௌசல்யா கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் தேவையில்லாத பதற்றம் உருவாகும் என்று கூறி அவரை அனுமதிக்க போலீசார் மறுப்பதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே கொமரலிங்கத்தில் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சங்கரின் உடலை வைத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(“கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்: போலீசாரிடம் மன்றாடும் கௌசல்யா” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனின் பாதுகாவலர் பயன்படுத்திய கொப்பு ஒப்படைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்புவை ஒப்படைப்பதற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். 24 கோடி ரூபாய் பெறுமதியான ஹெலிகொப்டரைத் தாக்கியழித்த விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்பே இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளது.

(“பிரபாகரனின் பாதுகாவலர் பயன்படுத்திய கொப்பு ஒப்படைப்பு” தொடர்ந்து வாசிக்க…)