பீப் பாடலை சிம்பு எழுத லைசென்ஸ் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது

சுஹாசினியும் ராதிகாவும் நகமும் சதை போல. ஒருவர் குரல் கொடுத்தால் மற்றவர் அரங்கத்தில் பாய்ந்து விடுவார்.இது அவர்கள் முன்னணி நாயகிகளாக இருந்த போதிலிருந்தே நடப்பது. முன்பு அசிங்கமான பாடல்களை எதிர்க்காததினால் பீப் பாடலையும் எதிர்க்கக் கூடாது என்று சொல்வது அதுவும் பெண்கள் சொல்வது என்ன நியாயம்? இரட்டை அர்த்தம் உள்ள பாடல்களை கண்ணதாசனும், வாலியும் எழுதியுள்ளார்கள். அவர்கள் அப்படி எழுதியிருப்பதால், பீப் பாடலை சிம்பு எழுத லைசென்ஸ் கிடைத்து விட்டது என்று சொல்ல முடியாது. திரையுலகின் பாடல்கள் சீர் குலைந்து வருவதை ஜீரணிக்க முடியாத கவி. கா. மு. ஷெரீப் என்ன செய்தார் தெரியுமா? விரசமான, மோசமானப் பாடல்கள் எழுதியவர்களை திட்டவில்லை. விமர்சிக்கவில்லை. “இனி திரைப் படப் பாடல்கள் எழுதமாட்டேன்” என்று பாடல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார். பீப் பாடல் பற்றி விமர்சனம் எழுந்த போது, ஆரம்பத்திலேயே மன்னிப்பு கேட்டிருக்கலாம். அதற்கு விளக்கம் சிம்பு தரப்பு தந்ததே தவிர மன்னிப்பு கேட்கவில்லை. தவிர, சிம்பு படஉலகில், படத் தயாரிப்பில் செய்த அலட்டல், அட்டூழியம், அடாவடித்தனம் எல்லாம் பத்திரிகைகள் அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. எல்லாம் சேர்ந்து கொண்டது. பொங்கி எழுந்து விட்டார்கள். “எவன்டி உன்னை பெத்தான்.. பெத்தான் ” பாடலுக்கே எல்லாரும் பொங்கியிருக்க வேண்டும்.

(Bismi Parinaaman)

காந்தியும் நேருவும் பரம்பரை உறவுக்காரர்களா?

பழிச்சொல் நிறைந்த பாவரங்கில் தன்னை ஒரு கவிஞன் என சுய அறிமுகம் செய்து இந்தியா கைது செய்து இலங்கை அரசிடம் கையளிக்க போன நிலையில் சைனட் வில்லைகளை விழுங்கி 3/10/1987 அன்று உயிரிழந்த குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு புலிகளின் நினைவுப் பாவரங்கில் , இந்திய வரலாற்றையும் அதன் கர்ணபரம்பரைக் கதைகளையும் கேவலப்படுத்துவது ஒரு புறமிருக்க , நேருவின் பரம்பரையை பற்றி ஏதோ யாரோ எழுதிய கதைகளையும் உண்மையாக்கும் விதத்தில் மந்திர உச்சாடனம் பண்ணுவது போல் அழுத்தமும் ஆவேசமும் கொண்டு பண்ணிப் பண்ணிப் பாவுரைத்தார் புலிப் பாவலன். ஆனால் இந்திய எதிர்ப்பில் நேருவை எதிப்பதில் அவர் காட்டிய முனைப்பில் முஸ்லிம் விரோதம் பட்டவர்த்தனமாக வெளிப்படுவதை நீங்களே இதனை வாசிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

(“காந்தியும் நேருவும் பரம்பரை உறவுக்காரர்களா?” தொடர்ந்து வாசிக்க…)

மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
1980 களின் நடுப் பகுதியில் தமிழ் நாட்டுப் பெண்கள் TVS 50 ஓடத்தொடங்கிய போது தமது துப்பட்டாவால் தலையை போர்த்தி சிறிதளவு முகத்தையும் மறைந்து செல்வர். தலை குழம்பாமலும் முகத்தி தூசி படிந்து முகத்தின் புத்துணர்சி குறையாமலும் இருக்க இதனை மேற்கொண்டனர். பார்பதற்கு அழகாகவும் இது இருந்தனர் இந்தத் தேவதைகள். தமது அழகிய முகத்தைக் காட்டமாட்டார்களா…? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் எகிறிநின்றது. யாரும் மூக்கையும், வாயையும் மறைத்து சுவாசத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. இதனை 2010 வரைக்கும் ஓரளவிற்கு என்னால் அவதானிக்க முடிந்தது.

(“மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!” தொடர்ந்து வாசிக்க…)

கொழும்பின் சதியா? யாழின் விதியா? –

(கம்பவாரிதி ஜெயராஜ்)

உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத் தலைமைக்கான ஆயத்தத்தை தமிழ்மக்கள் பேரவை என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான். கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும், முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தேர்தல் தோல்வியின் பின், தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து, கிடைக்காமல் போனதில் கோபமுற்றிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தனது மூத்த உறுப்புரிமையை வைத்து, தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து ஏமாந்துபோன, பேராசிரியர் சிற்றம்பலமும் என,கூட்டமைப்பின் உட்பகைவர்கள் ஒன்றுசேர்ந்து, இதுவரை பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டி, இரட்டை வேடம் போட்டுவந்த முதலமைச்சரின் தலைமையில், இரகசியக் கூட்டம் போட்டு, மேற்படி ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பை, உருவாக்கியிருக்கிறார்கள்.

(“கொழும்பின் சதியா? யாழின் விதியா? –” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை மீதான மூன்றாவது யுத்தத்துக்கு தயாராகும் சர்வதேசம் !

இலங்கையில் மூன்றாவது யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் கடந்த அரைநூற்றாண்டுகளாக செய்த தியாகங்கள் இழப்புக்கள் துன்பங்களுக்கெல்லாம் அவர்களுக்கு கிடைத்தது என்ன? தனது ஆயுதபலத்தின் ஊடாக இலங்கையில் தன்னிச்சையான சுதந்திர தேசம் ஒன்றை உருவாக்கி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த தமிழர்களின் இன்றைய நிலை என்ன? தமிழ் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதா? அல்லது தமிழர்களின் போராட்டம் அவர்களது இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துகொண்டிருக்கின்றதா? என்ற பல கேள்விகளுடன் தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்து ஆராயவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.

(“இலங்கை மீதான மூன்றாவது யுத்தத்துக்கு தயாராகும் சர்வதேசம் !” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் வன்முறை

1956 பொதுத் தேர்தலில் திரு.வி.என. நவரத்தினம் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.இது காங்கிரஸ் கட்சியின் பலமான கோட்டை.இவரை ஒருநாள் வழியில் கண்ட காங்கிரஸ் எம்.பி குமாரசாமி என்னை எதிர்த்து என்ன தைரியத்தில் போட்டியிடுகிறாய் என கிண்டலாகவே கேட்டார்.அந்தளவு உறுதியான செல்வாக்குடன் குமாரசாமி இருந்தார்.

(“தேர்தல் வன்முறை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக வழி நடத்தும் பொருட்டும் அதனை மக்கள் மயப்படுத்தும் பொருட்டும் சிவில் சமூகக் குழுக்கள், அரசியற் கட்சிகள், தொழிற் சங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கடந்த 19 டிசம்பர் 2015 அன்று உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை தமிழ் சிவில் சமூக அமையம் வரவேற்பதோடு இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியில் பங்கெடுப்பதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

(“தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு

சமூகங்களுக்கிடையிலான மோதல்களைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்களை  தடுப்பதற்காக, தண்டனைக் கோவையிலும் குற்றவியல் நடைமுறைக் கோவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, அரசாங்கம் முன்வைத்த இரு நகல் சட்டமூலங்களை அரசாங்கமே வாபஸ் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்தே அரசாங்கம் பின் வாங்கியது.

(“வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)

சூளைமேடு அழைப்பாணை பொய்யான செய்தி – டக்ளஸ்

இந்தியா, தமிழகம் சூளைமேடுப் பகுதியில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட செய்தி பொய்யானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.