42 வருடங்களுக்கு முன்னர், இதே நாளில் 11.09.1973ல் அமெரிக்க சி.ஐ.ஏயால் கொலை செய்யப்பட்ட இடதுசாரித் தலைவர் தோழர் சல்வடார் அலெண்டேயும், படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் அமெரிக்காவின், கோர முகத்தை எப்போதும் நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
42 ஆண்டுகளுக்கு முன், நடந்த அமெரிக்காவின் இந்த ஜனநாயகப் படுகொலைகள், இராணுவ அத்துமீறல்கள் ,வன்முறைக் கொலைகள், அராஜகங்கள், பொருளாதராத் தடைகள் எத்தனை எத்தனை.
அவை இன்றும் அமெரிக்காவை எதிர்க்கும் பல்வேறு நாடுகளுக்கும் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. நாம் இன்னும் படிப்பினை பெற்றவர்களாக இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம்பிக் கொண்டு துணைக்கு அழைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட எம் மக்களின் விடுதலையை அவர்களுக்கூடாக வேண்டி நிற்கிறோம். இப் புத்தகத்தில் ரெகிஸ் டெப்ரேயின் அலெண்டேயின் பதவிக்காலத்தில் எடுத்த பேட்டியும், பகுதி இரண்டில் நெருக்கடியான காலகட்டத்தில் சிலிக்கு பயணம் செய்து அங்கு நடந்துவந்த அரசியல் பொருளாதார மாற்றங்களை கவனித்து வந்த பிரிட்டீஸ் பொருளாதார நிபுணர் அலெக்நோவேயின் கட்டுரையும் இடம்பெற்றள்ளது. இவைகள், சமூக மாற்றத்திற்காக போரடுகின்ற சக்திகள் எதிர் நோக்க வேண்டிய பிரச்சனைகள் -தடைக்கற்கள் ஆகியவற்றை நமக்கு உணர்த்துகின்றது. இன்றைய காலத்தில், நமது வாசிப்பிற்கும் – புரிதல்களுக்கும் இப் புத்தகம் முக்கியமானதாக இருக்கின்றது. இதனை சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.(அசோக்)